ஆன்மீகத் தளம்

Watch ” காணாமல் போன புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ பிரகதாம்பாள்  கோவிலின் விலைமதிப்பில்லாத காராம் பசுவின் மர்மம் என்ன!?”மௌனம் காக்கும் கோவில் செயல் அலுவலர்! on YouTube

புதுக்கோட்டை திருக்கோ கர்ணம் பிரகதாம்பாள் கோவிலின் சிறப்பு  எல்லா திருத்தலங்களுக்கும் உள்ளது போன்றே திருக்கோகர்ணத்துக்கும் புராணக்கதை ஒன்று உண்டு. அதன் அடிப்படையிலேயே புதுக்கோட்டை திரு-கோ-கர்ணம் என்ற ஊர்ப் பெயரும் அமைந்தது.

புதுக்கோட்டை நகருக்கு அருகே அமைந்துள்ள திருக்கோகர்ணத்தில் பழமை வாய்ந்த ஆலயம் அமைந்துள்ளது.மூலவர் திரு கோகர்ணேஸ்வரர் அம்பாள் பிரகதாம்பாள் ஆவார். பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் பிரகதாம்பாளின் சாந்நித்தியத்தை உணர்ந்த புதுக்கோட்டை மக்கள், தங்கள் பெண் குழந்தைக்கு பிரகதாம்பாள் என்று பெயர் வைப்பது வழக்கம். மேலும் பிரகதாம்பாளின் திருவுருவத்தை, தொண்டைமான் மகாராஜா காலத்திலேயே நாணயத்தில் பொறித்து அம்மன் காசினை வெளியிட்டு உள்ளனர்.இத்தனை பெருமை வாய்ந்த திருக்கோகர்ணம் ஆலயத்தில் நாள்தோறும் எண்ணற்ற பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள்.

தானமாக கொடுத்த பசுவும் தானம் கொடுத்த பெண் பக்தர்

.இந்தக் கோவிலுக்கு 25 வருடத்திற்கு முன்பு தானமாக 1998ஆம் ஆண்டு பசுவும் கன்றுடன் பெண் பக்தர் தானமாக கோவிலுக்கு வழங்கி உள்ளார். அதன் பின்பு அந்த பசு எட்டு கன்று குட்டிகளை இன்றுள்ளது என்றும் . எட்டாவது கன்றுக்குட்டியை ஈன்றவுடன் எட்டு கன்று குட்டியும் வைத்து அந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்ததாகவும் தெரிவித்துள்ளார்.அந்த எட்டு கன்றுகளை பராமரிக்க முடியவில்லை என்றும் அவ்வப்போது கோவில் நிர்வாகம் தெரிவித்து வந்துள்ளதாகவும் அந்த பக்தர் குற்றம் சாட்டியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் காராம்பசு கோவில் கடைவீதிகளில் வந்து பக்தர்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டு செல்வது வழக்கமாக இருந்துள்ளதாகவும் காரம் பசுவை கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதிக்குப் பின்பு கடை வீதிகளில் காண முடியவில்லை என்றும் கோவிலில் பராமரிக்கும் இடத்திலும் காணவில்லை என்றும் பசுவை தானமாக கொடுத்த அந்த பெண் பக்தர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். கோவில் நிர்வாகம் காணாமல் போன பசுவை பற்றி எந்தவித அறிவிப்பும் பத்திரிகையில் வெளியிடவில்லை என்றும் காவல்துறையில் புகார் கொடுக்கவில்லை என்றும் தற்போது தானம் கொடுத்த பெண் பக்தர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த கோவிலில் இருந்த காராம் பசு விலைமதிப்பில்லாதது என்றும் அந்த பக்தர் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த காராம் பசுவை கோவிலுக்கு தானமாக வழங்கும் போது இந்த பசு உயிருடன் இருக்கும் வரை ஏலம் விடக்கூடாது என்றும் யாருக்கும் விற்கக் கூடாது என்றும் கோவில் நிர்வாகத்துடன் கேட்டுக் கொண்டதாகவும் இந்த பெண் பக்தர் தெரிவித்துள்ளார். தற்போது கோடி ரூபாய் கொடுத்தாலும் இது போன்ற தெய்வீகமான காராம் பசுவை யாரும் வாங்க முடியாது என்றும் அந்தப் பெண் பக்தர் தெரிவித்துள்ளார். தற்போது தனமாக வழங்கிய காராம் பசு எங்கு உள்ளது உயிருடன் இருக்கிறதா இல்லையா இந்த பசுவை யாருக்கும் பணத்திற்கு விற்று விட்டார்களா என்றும் எனக்கு தெரிய வேண்டும் என்றும் தானம் கொடுத்த பெண் பக்தர் உருக்கமாக பேட்டியளித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் காராம் பசுவை தானமாக வழங்கியபோது கோவிலின் குருக்களான ரவி மற்றும் கணேஷ் இரண்டு பேரும் இருந்தார்கள். அது மட்டுமில்லாமல் கோவிலின் தற்கார் மீனாட்சி சுந்தரம் கோவில் நிர்வாகி சுபையா மற்றும் மீனாட்சி சுந்தரம் ராமநாதன் இவர்கள் அனைவரும் உறுப்பினர்களாக இருந்ததாக கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் 1998 ஆம் ஆண்டு வீட்டிலிருந்து ஆசாரி குமார் என்பவர் தான் பசுவையும் கன்றையும் கோவிலுக்கு அழைத்துச் சென்றார் என்றும் தெரிவித்துள்ளார். ஸ்ரீ பிரகதாம்பாள் கோவிலின் அம்மன் நடை திறக்கும் முன்பு இந்த பசுவை நிறுத்தி அம்மன் பார்வையில் பட்ட பின்பு தான் பூஜையே செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட காராம் பசுவை காணவில்லை என்று கோவில் நிர்வாகத்திற்கு தெரிந்தும் கண்டும் காணாமல் இருப்பதுதான் எங்களுக்கு சந்தேகத்தை எழுப்பி உள்ளது. ஏனென்றால் பசுவை காணவில்லை என்றால் காவல் நிலையத்திலும் பத்திரிகைகளின் பொதுமக்களுக்கு தெரியும்படி அறிவிப்பு வெளியிட்டு இருக்க வேண்டும் அப்படி செய்யாத நிலையில் இந்த பசுவை யாருக்கும் விற்று விட்டார்களா என்ன என்ற ஒரு மர்மம் நீடித்துக் கொண்டிருக்கிறது இது அனைத்துமே அந்த அம்மன் சாட்சிக்கு விட்டு விடுகிறேன் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார் அந்த பெண் பக்தர். சிவன் சொத்து குலநாசம் என்று பழமொழி உண்டு ஆகையால் கோவிலில் உள்ள எந்த ஒரு பொருளையும் விற்று அந்த காசை ஏமாற்றியவர்கள் குடும்பம் இதுவரை நன்றாக இருந்ததில்லை என்று ஐதீகம். பொறுத்திருந்து பார்ப்போம் காணாமல் போன பசுவை மீட்டு கொண்டு வரும் வரை!!!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button