மாவட்டச் செய்திகள்

இலவச வீட்டு மனை பட்டா வழங்க பல லட்சம் லஞ்சம்! அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில்  மெகா ஊழல் முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா குமரி மாவட்ட ஆட்சித்தலைவர்!

ஊழல் இல்லாத குமரி மாவட்டமாக மாற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!?


அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் மொத்தம் உள்ள 43 கிராம நிர்வாக அலுவலகங்களில் 39 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்றி வருகிறார்கள். வட்டாட்சியர் ராஜேஷ் , வருவாய் கோட்டாட்சியர்  சேது ராமலிங்கம், RDO வின் தாசில்தார் கண்ணன். வாகன ஓட்டுநர் முருகன். உள்ளனர்

(முன்னாள் அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர்.சேகர். (தற்போது வளவங்கோடு )18 வருடமாக குரூப் 1 குரூப் 2 குரூப் 4 கோச்சிங் சென்டர் செட்டிக் குளம்.ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழியில் நடத்தி வருகிறார். இந்த கோச்சிங் சென்டரில் செய்பவரிடம் பல லட்ச ரூபாய் கட்டணமாக வாங்கி வருகிறார் 18 வருடமாக இந்த கோச்சிங் சென்டர் நடத்தி வருவதில் வருமானத்திற்கு அதிகமாக பல கோடி சொத்து சேர்த்து வைத்துள்ளதாக தகவலும் வந்துள்ளது. செட்டிக் குளம்.ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழியில் உள்ளது

அகஸ்தீஸ்வரம் தாலுக்காவில் நடக்கும் ஊழல்முறைகேட்டை விசாரணையை செய்து ஊழலில் ஈடுபடும் வருவாய்துறையினர் மற்றும் சர்வேயாளர்கள் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து மேலே உள்ள அரசு ஊழியார்கள் மீது தேச துரோக வழக்கின் கீழ் வழக்கு பதிவு செய்து இந்தியாவில் வாழும் குடியுரிமையை பறிக்க வேண்டும் என மாண்புமிகு குடியரசு தலைவருக்கு மனு அனுப்பி உள்ளதாக வே,ஐயப்பன்(வழக்கறிஞர்) தெரிவித்துள்ளார்.


1983-முதல்2021- ஆண்டுகள் வரை 1635 வழக்குகள் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளது .

மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம்

தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வருவாய் துறையின் கீழ் உள்ள அகஸ்தீஸ்வரம் தாலுக்காவில் புறம்போக்கு நிலங்களுக்கு சட்டவிரோதமாக லஞ்சப்பணம் வாங்கி கொண்டு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி இருப்பதாகவும் இந்த இலவச வீட்டு மனை பட்டா ஒருவருக்கு இரண்டரை சென்ட் நிலம் வழங்கப்படுகிறது. சொந்த வீடு நிலம் இருப்பவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவிற்கு குறைந்தது 5 லட்சம் ரூபாய் வாங்கி கொண்டு பட்டா வழங்கியிருப்பதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.. வடக்கு தாமரை குளம், புல எண் 85/48 கொட்டாரம், புல எண் 333/8,244/2_15,344/2-1,242/2_10,333/3_5,406/1313 249/2தேரூர் , புல எண் 1141/2_1மயிலாடி, இரவி புதூர்புல என் 13/32_2ஆகிய ஐந்து கிராமத்திற்கு உட்பட்ட இடங்களில்  31 பேருக்கு சட்ட விரோதமாக இலவச வீட்டுமனை பட்டா வழங்கி ஒன்றை கோடி வரை லஞ்சமாக பெற்று இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இலவச வீட்டு மனை பட்டா வழங்கிய 31 பேர் பட்டியலை தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டுள்ளதாகவும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

,இதுபோன்று சட்டவிரோதமாக இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்கு வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் தான் காரணம் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சட்டவிரோதமாக ஊழல் முறைகேட்டில் ஈடுபடுத்துவதற்காக வருவாய் கோட்டாட்சியர் இன்உதவியாளர் கண்ணன் மற்றும் வாகன ஓட்டுனர் முருகன் இவர்கள் மூலம் கச்சிதமாக வேலையை முடித்து கல்லா கட்டி வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இது சம்பந்தமாக அகஸ்தீஸ்வரம் வட்டாச்சியர் அலுவலகத்தில் வழக்கறிஞர் கேட்டதற்கு மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் இருந்து வழங்கப்படும் இலவச வீட்டு மனை பட்டாவிற்கு நாங்கள் காரணம் இல்லை என்றும் எங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் யார் யாருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று உத்தரவு எங்களுக்கு அனுப்பிய படி நாங்கள் இலவச வீட்டு மனை பட்டா வழங்கி உள்ளோம் என்று கூறியுள்ளதாக தகவல்.

மேலும் தனிப்பட்டா வழங்க வேண்டும் என்றால் சுமார் ஒரு மாதம் அல்லது இரண்டு அல்லது மூன்று மாதங்கள் ஆகும்.ஆனால் இரண்டு நாட்களில் தனிப்பட்டா வழங்கியதற்கு சுமார் ஐம்பதாயிரம் லஞ்சப்பணத்தை வாங்கி கொண்டு அடுத்தவர்களின் உரிமையில் இருந்த  நிலத்தை வேறு நபருக்கு சட்டவிரோதமாக தனிப்பட்டா வழங்கப்பட்டு உள்ளது.மேலும் இரண்டு நாட்களில் சர்வே செய்த வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அரசு சான்றிதழ் வழங்க பாராட்டு தெரிவிக்க வேண்டும் என்று விமர்சித்துள்ளார்.

இரண்டு நாட்களில் தனிப்பட்டா வழங்க உடனடியாக வேறு ஒருவரின் அனுபோகத்தில் உள்ள இடத்தை வேறு ஒருவரின் பெயரில் சர்வே செய்து கொடுத்த உத்தமன். மேலும் அகஸ்தீஸ்வரம் தாலுக்காவில் நடக்கும் இடைத்தரகர் மூலம் கையூட்டு பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் பெயரை பொதுத்தளத்தில் மிகவும் பகிரங்கமாக அறிவிக்கப்படும் என்றும் அரசு ஊழியர்கள் என்பது பொது மக்களுக்கு சேவை செய்யும் அமைப்பாகும். மேலும் அரசு ஊழியர்கள் பொது மக்களுக்கு வேலை செய்யும் வேலைக்காரர்கள் என்பதை மட்டும் நினைவில் வைத்து கொண்டு பணி செய்தால் மிகவும் நல்லது.மேலும் சமூகத்தில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால் குமரி மாவட்ட ஆட்சித்தலைவர்  கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும் அகஸ்தீஸ்வரம் தாலுக்காவில் பணியாற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள், வருவாய் ஆய்வாளர்கள், மண்டல அதிகாரிகள், நில அளவையர்,தாசில்தார், வருவாய்கோட்டாட்சியர் என இவர்கள் அடிக்கும் கொள்ளை விபரம் மிக விரைவில் பட்டியல் போட்டு மக்கள் மன்றத்தில்  கொண்டு செல்ல இருப்பதாகவும் மேலும் வருவாய்த் துறைக்குள் நிலவும் லஞ்ச ஊழல் தொடர்பான விசயங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வரவே சட்டப்போராட்டத்தையும்,வீதி போராட்டத்தையும் ஜனநாயக வழியில் நடத்த இருப்பதாகவும் வே,ஐயப்பன் (வழக்கறிஞர்) தன்னுடைய ஆதங்கத்துடன் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர் வே.ஐயப்பன்

Related Articles

6 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button