அஜீத் சியான் மோதல்!
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் அண்ணாத்த. மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி என பல நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தை வருகிற தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4-ந்தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அதே தீபாவளி நாளில் அஜித்தின் வலிமை, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் சீயான் 60ஆவது படத்தையும் வெளியிட திட்டமிட்டு வந்தனர். ஆனால் இப்போது, ஏற்கனவே தியேட்டர்களில் வசூல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்நேரத்தில் ரஜினி படம் வெளியாகும் அதேநாளில் தங்கள் படங்களையும் வெளியிட்டு வசூல்ரீதியாக ஒருவருக்கொருவர் பாதிப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று அஜித், விக்ரம் படக்குழுவினர் தங்கள் படங்களை நவம்பர் இறுதியில் வெளியிட முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆக, தீபாவளிக்கு ஷோலோவாக களம் இறங்குகிறார் அண்ணாத்த.