மாவட்டச் செய்திகள்

அனுமதி இல்லாத கல் குவாரியில் மாதம் 25 லட்ச ரூபாய் கல்லா கட்டும் வட்டாட்சியர் ! மௌனம் காக்கும் கரூர் மாவட்ட ஆட்சியர்!

கரூர் மாவட்டத்தில் தற்போது பட்டா நிலங்களில் 76 சாதாரண கல் குவாரிகளுக்கும், அரசு புறம்போக்கு நிலங்களில் 3 கல்குவாரிகளுக்கும் குவாரி குத்தகை உரிமம் வழங்கப்பட்டு நடப்பில் உள்ளது. இவற்றில் பட்டா நிலத்தில் வழங்கப்பட்ட 12 குவாரிகள் முறையான அனுமதி பெற்றிருந்தும் தற்போது இயக்கத்தில் இல்லை என்றும்
கரூர் மாவட்டத்தில் குத்தகை நடப்பில் உள்ள கல்குவாரிகளில் விதி மீறல்கள் ஏதும் நடைபெற்றுள்ளதா என்பதை கண்டறிய மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் கோட்டாட்சியர்கள் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை உதவி இயக்குநர், சம்பந்தப்பட்ட வட்டாட்சியர், காவல் ஆய்வாளர் ஆகிய அலுவலர்கள் அடங்கிய குழு அமைத்து இதுவரை 42 குவாரிகளில் கூட்டு புலத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு விதிமீறல்கள் கண்டறியப்பட்ட குவாரிகளுக்கு கடந்த ஆண்டு அபராதம் விதிக்கப்பட்டு கோட்டாட்சியர்களுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தொடர்ந்து கரூர் மாவட்ட
புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் சட்ட விதிகளை மீறி கரூர் மாவட்டம் குளித்தலை கோட்டாட்சியருக்கு உட்பட்ட கடவூர் தாலுகாவில் இயங்கி வரும் கல்குவாரிகளில் சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடவூர் தாலுகா கடவூர் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கும் கல்குவாரி கடவூர் பகுதியில் மே.அய்யம்பாளையம் மற்றும் ராஜாப்பட்டி இடையப்பட்டி ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக இயங்கி வரும் கல்குவாரிகளில் 100 அடிக்கு கீழ் இரவு பகலாக
வெடிவைத்து பாறைகளை வெட்டி எடுத்து கனிம வளங்களை கடத்தி வருவதாகவும் இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருவதாகவும். அதுமட்டுமில்லாமல் இயற்கை வளங்களை சுரண்டி வருவதாகவும்
இடையப்பட்டி கிராமத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அரசு அனுமதியின்றி
விதிகளை மீறி சட்ட விரோதமாக கல்குவாரி இயங்கி வருவதாகவும் அரசு அனுமதியின்றி இயங்கி வரும் கல்குவாரிகளில் ஒரு கல் குவாரியை கடவூர் வட்டாட்சியர் இளம்பரதியே தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து நடத்தி வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இது சம்பந்தமாக கிராம நிர்வாக அலுவலர் வட்டாட்சியர் , கரூர் மாவட்ட ஆட்சியர் கரூர் கனிமவளத்துறை உதவி இயக்குனர் ஆகியோரிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றும் . இரவு நேரங்களில் பாறைகளில் வெடி வைப்பதால் சுற்றியுள்ள குடியிருப்புகளின் வீடுகளில் கடும் அதிர்வுகள் ஏற்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அண்மையில் தமிழக அரசு கடவூர் பகுதியை தேவாங்கு சரணாலயம் உள்ள பகுதியாக அறிவித்த நிலையில் கடவூர் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கும் கல்குவாரியை மாவட்ட நிர்வாகம் மற்றும் கனிமவளத்துறை கண்டுகொள்வதில்லை. இதனால் தேவாங்கு சரணாலயத்திற்கு வரும் பறவைகள் மற்றும் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்து தேவாங்கு சரணாலயம் உள்ள பகுதியாக அறிவித்த கடவூர் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கும் கல்குவாரியை நிரந்தரமாக மூட கரூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்!

கரூர் மாவட்டம் கடவூர் மற்றும் 34 குக்கிராமங்களைச் சுற்றி, இயற்கை எழில் கொஞ்ச, வட்டவடிவில் மலை அமைத்திருக்கிறது. கடவூர் வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் தரகம்பட்டியில் செயல்படுகிறது. கடவூர் வட்டம் கடவூர் மற்றும் மைலம்பட்டி என இரண்டு உள் வட்டங்களையும், 23 வருவாய் கிராமங்களையும் கொண்டுள்ளது.
வட்டத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர். குறிப்பாக மலைப் பகுதிகளாக இருப்பதால் மிகவும் சிரமப்பட்டு தான் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருகின்றனர். ஆனால் கடவூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தாலும் வட்டாட்சியர் அமர்ந்திருக்கும் அறை மட்டும் எப்போதும் பூட்டப்பட்டு தான் இருக்குமாம். அதனால் கடவூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் வட்டாட்சியரிடம் நேரடியாக மனுக்களைக் கொடுக்க முடியாமல் பலமுறை திரும்பிச் சென்று விடுகின்றதாகவும் இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் கோட்டாட்சியர் வருவாய் அலுவலர் ஆகிய அனைவரிடமும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. யார் இந்த கடவூர் வட்டாட்சியர் என்று புலனாய்வு செய்ததில் இப்போது கடவூர் வட்டாட்சியராக இருக்கும் இளம்பரிதி என்பவர்
இதற்கு முன்னால் கடவூர் தாலுகாவில் 2016 to 2018. ஆம் ஆண்டு வருவாய் ஆய்வாளராக பணியாற்றினார். அதன் பின்னர் 2022 to 2023 ஆம் ஆண்டு துணை கடவூர் துணை வட்டாட்சியராக இருந்துள்ளார். தற்போது பயிற்சி முடிந்து கடவூர் வட்டாட்சியர் ஆகவே பணியாற்றி வருகிறார். ஆனால் இவர் வருவாய் ஆய்வாளராக இருந்ததிலிருந்து தற்போது வரை லஞ்ச ஊழல் முறைகேடுகளில் கொடி கட்டி பறக்கிறார் என்பதுதான் நிதர்சனம்.. அதற்கு உதாரணமாக தான் முறைகேடாக சம்பாதித்த லட்சக்கணக்கான பணத்தில் கடவூர் தாலுகா இடையப்பட்டி கிராம நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதியில்
5 ஏக்கர் நிலத்தை பல லட்சங்கள் கொடுத்து பெண் பினாமி பெயரில் வாங்கி அப்படி வாங்கப்பட்ட ஐந்து ஏக்கர் நிலத்தில் பல லட்சம் செலவு செய்து சொகுசு பங்களா ஒன்று கட்டி உல்லாசமாக வாழ்ந்து வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் அதே பகுதியில் மாவுத்தூர் கிராம நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதியில் சர்வே நம்பர் 667 /26 (0.08.70 ஏர் ) 21 சென்ட் நத்தம் புறம்போக்கு நிலத்தை இலவச வீட்டுமனை பட்டா போட்டு தன்னுடைய பெண் பினாமி பெயரில் வழங்கி தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். ஒரு நபருக்கு குறைந்தது 3 சென்ட் உட்பட்ட நிலத்திற்கு மட்டுமே இலவச வீட்டு மனை பட்டா வழங்க முடியும் . அப்படி அரசு வழங்கும் இலவச வீட்டு மனை பட்டாவிற்கு தமிழக முழுவதும் லட்சக்கணக்கான ஏழை எளிய சாமானிய பொதுமக்கள் பல ஆண்டுகளாக காத்துக் கொண்டிருப்பது தான் நிதர்சனம். ஆனால் கடவூர் வட்டாட்சியர் இளம்பரதி தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சட்ட விரோதமாக அரசு நத்தம் புறம்போக்கு இடத்தில் அதுவும் ஒரே இடத்தில் ஒரு நபருக்கு 21 சென்ட் நிலம் ஒரே இடத்தில் இலவச வீட்டு மனை பட்டா கொடுத்து முறைகேடு செய்துள்ளார். இது சம்பந்தமாக குளித்தலை கோட்டாட்சியர் கடவூர் வட்டாட்சியர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால் கடவூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியருக்கு தங்கி ஓய்வெடுக்க வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள சேம்பரில் உள்ள அறையில் மாலை 6 மணிக்கு மேல் வந்து உட்கார்ந்து கொண்டு தன்னுடைய வாகன ஓட்டுநர் மரிய லாரன்ஸ் மற்றும் இளம்பரிதி என்பவரின் மைத்துனர் தென்னிலை கிராம நிர்வாக அலுவலர் முத்துச்சாமி ஆகியோரை தன்னுடன் வைத்துக்கொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனு மீது குறிப்பாக பட்டா கேட்டு அல்லது வாரிசு பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்களின் பட்டியல்களை எடுத்து
பட்டியலிட்டு அதில் 5 சென்ட் நிலத்திற்கு பட்டா வழங்க சுமார் 20,000 ரூபாய் தொகை அதற்கு மேல் 25 சென்ட் வரை பட்டா வழங்க ஐம்பதாயிரம் ரூபாய் 25 சென்ட்க்கு மேல் ஒரு ஏக்கர் வரை பட்டா வழங்க அல்லது வாரிசு பட்டா வழங்க ஒரு லட்சம் ரூபாய் வரை லஞ்சமாக நிர்ணயம் செய்து வாகன ஓட்டுநர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் முத்துசாமி ஆகிய இருவரிடமும் ஒப்படைத்து விடுவதாகவும் அது மட்டுமில்லாமல் ரிஜிஸ்டர் மாற்றம் , மற்றும் பட்டா வாரிசு சான்றிதழில் பெயர் திருத்தம் பெயர் நீக்கம்
ஆகிய வேலைகளுக்கு குறைந்தது ரூ. 20,000 வரையும் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களுக்கு பட்டா வழங்குவதற்கு பல லட்சங்கள் லஞ்சமாக கேட்பதாகவும்
மேற்படி அனைத்து வேலைகளையும் வட்டாட்சியரின் வாகன ஓட்டுநர் மரிய லாரன்ஸ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் முத்துச்சாமி ஆகிய இருவரும் கச்சிதமாக முடித்துக் கொடுத்து லஞ்சப் பணம் வசூல் செய்து வருவதாகவும் அப்படி வசூல் செய்யும் லஞ்சப் பணத்தை வட்டாட்சியரிடம் சரியான நேரத்தில் சரியான இடத்தில் கொண்டு சேர்க்கின்றனர் என்றும் அப்படி வரும் லஞ்ச பணத்தை வைத்துக்கொண்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள சேம்பர் அறையில் கடவூர் வட்டாட்சியர் இரவு நேரங்களில் மது மற்றும் மாது என சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் கடவூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையையும் செய்து கொடுப்பதில்லை என்றும் லஞ்சம் கொடுக்க விரும்பாத பொதுமக்கள் கேள்வி கேட்டால் அவர்களை தகாத வார்த்தைகளால் பேசி வெளியே அனுப்பி விடுவதாகவும் அப்படி செல்ல மறுக்கும் பொதுமக்களை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விடுவேன் என்று மிரட்டும் தூணியில் சாமானிய ஏழை எளிய மக்களிடம் ஒரு போதை ஆசாமி போல் இழிவாக நடந்து கொள்வதாகவும் இது சம்பந்தமாக சமூக ஆர்வலர்கள் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் கொடுத்துள்ளதாகவும். ஆனால் இதுவரை கடவூர் வட்டாட்சியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமில்லாமல் கடவூர் வட்டாட்சியர் இளம்பரிதி அவரைப் பற்றி செய்தி வெளியிட்டால் அவர்கள் மீது மான நஷ்ட வழக்கு பதிவு செய்து விடுவேன் என மிரட்டி வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடவூர் வட்டம் முழுவதும் சொந்தம் பந்தம் உறவினர்கள் நிறைய பேர் வட்டாட்சியருக்கு இருப்பதாகவும் அது மட்டும் இல்லாமல் மாவட்ட ஆட்சியர் சோழிய வெள்ளாளர் என்பதால் என்னை எதும் செய்ய இயலாது எனவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , மாவட்ட வருவாய் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம் ஆகிய மூன்று அலுவலகத்திற்கும் மாதம் குறைந்தது 10 லட்சம் ரூபாய் வரை சன்மானம் கொடுப்பதாகவும் அதனால் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து என்னை பணி மாற்றம் செய்யவோ என்மீது நடவடிக்கை எடுக்கவோ மாட்டார்கள் என்று கடவூர் வட்டாட்சியர் மார் தட்டி கூறி வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. எது எப்படியோ லஞ்ச ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு சட்டவிரோதமாக வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து மக்களின் மீது நலன் இல்லாமல் பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு உல்லாசமாக வாழ்ந்து வரும் அவலங்களை பொதுவெளியில் சுட்டிக் காண்பிக்கும் போது மாவட்ட ஆட்சியர் அந்த குறைகளின் மீது உண்மை தன்மை ஆராய நேர்மையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும் அல்லது மாவட்ட ஆட்சியரே கடவூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் சென்று அங்கு வரும் பொதுமக்களிடம் விசாரணை நடத்தி பொதுமக்கள் வைக்கும் குற்றச்சாட்டு உண்மையில் லஞ்ச ஊழலில் ஈடுபட்டு வரும் கடவூர் வட்டாட்சியர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது கரூர் மாவட்ட ஆட்சியர் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் . அது மட்டும் இல்லாமல் திமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் உள்ள நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில் ஒரு சில கருப்பு ஆடுகள் குறிப்பாக லஞ்ச ஊழலில் ஈடுபட்டு வரும் வருவாய்த் துறையில் உள்ள முக்கிய அதிகாரிகளாக இருக்கும் வட்டாட்சியர்கள் மீது தமிழக முதல்வர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Back to top button