ஆர்பாட்டம் நடத்தி தேனி மாவட்ட ஆட்சியரை பணிய வைக்க நினைக்கும் ஆண்டிபட்டி வட்டாச்சியர்! நடவடிக்கை எடுப்பாரா தலைமைச் செயலாளர்!

வட்டாட்சியர்மாவட்ட ஆட்சியர்களை மிரட்டும் தோணியில் ஆர்ப்பாட்டம் நடத்தும் ஆண்டிபட்டி,!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், கள்ளக்குறிச்சி ஆட்சியரை கண்டித்து, ஆண்டிபட்டி வட்டாட்சியர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
. நீதிமன்ற உத்தரவை அடுத்து, ஆக்கிரமிப்பை அகற்றிய வட்டாட்ச்சியரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்ட, கள்ளக்குறிச்சி ஆட்சியரை கண்டித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் ஆண்டிபட்டி வட்டாட்சியர் காதர் ஷெரீப் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட நிர்வாகி சங்கர் உட்பட, பலர் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே, வட்டாட்சியர் காதர் ஷெரிப் பெரிய குளத்திலிருந்து ஆண்டிபட்டிக்கு நிர்வாக காரணங்களுக்காக, பணியிட மாற்றம் செய்யப்பட்ட போது, அதனை கண்டித்து, தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஆட்சியரின் அறை முன்பு, தமிழ்நாடு வருவாய்த் துறை சங்கத்தின் சார்பில்,

வட்டாட்சியர் காதர்ஷெரிப் (மதியம் இரண்டு மணி முதல், நள்ளிரவு பதினொரு மணி வரை) பெட்சீட், தலையணையுடன், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு வருவாய் துறை சங்கம் என்ற பெயரில் இவருக்காகவும், சங்கம் சார்ந்தவர்களுக்காகவும், அரசு அலுவலகங்களில் ஆர்ப்பாட்டங்கள், போராட்ட களத்தில் நேரில் ஈடுபட்டு வருகின்ற வட்டாட்சியர் காதர்ஷெரிப்பை, சாகாக்கள் போற்றி புகழ்ந்து பேசினாலும், இவரின் பின்புலம் தொடர்பாக, மத்திய, மாநில அரசுகள் துரித விசாரனை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்ற கோரிக்கையினை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முன்வைக்கின்றனர்.*
