புதுக்கோட்டை திருமயம் கனிம வளம் கடத்தல் மாபியா கும்பல் திட்டமிட்டு அரங்கேற்றிய கொலை! நடந்தது என்ன!? அதிர்ச்சித் தகவல்!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம்
ஆர் ஆர் கல் குவாரியில்
100 கோடி ரூபாய் மதிப்புள்ள கனிம வளத்தை சட்டவிரோதமாக மலை போல் குவித்து வைத்துள்ள அதிர்ச்சி வீடியோ!
https://youtu.be/-RainNy6Mes?si=KonS3tL2hX1C540wq
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டத்திற்குட்பட்ட. துளையானூர் கிராமத்துக்குட்பட்ட பகுதியில் ராசு, ராமையா ஆகிய இருவரும் சேர்ந்து ஆர் ஆர் என்ற பெயரில் சுமார் 7 ஏக்கரில் கல்குவாரி நடத்தி வருவதாகவும் அதில் நான்கு ஏக்கர் பட்டா நிலமும் இரண்டு ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருவதாகவும் அந்தக் கல்குவாரியில் அரசு அனுமதி வழங்கியதை விட சட்ட விரோதமாக கனிம வளங்களை அளவுக்கு அதிகமாக வெட்டி எடுப்பதாக புதுக்கோட்டை மாவட்ட கனிமவளத் துறை மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு 2024 ஜனவரி மாதம் புகார் கொடுத்ததன் பெயரில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தலைமையில் திருமயம் கோட்டாட்சியர் திருமயம் வட்டாட்சியர் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் சட்டவிரோதமாக கனிம வளம் வெட்டி எடுத்ததாக உறுதி செய்யப்பட்டு அந்த கல்குவாரிக்கு அரசு வழங்கிய அனுமதி ரத்து செய்து 15 கோடி ரூபாய் அபதாரம் விதித்து திருமயம் கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.அதன் பின்பு கோட்டாட்சியர் விதித்த 15 கோடி ரூபாய் அவதாரத்தை கட்டாமல் நீதிமன்றத்தில் ஆர் ஆர் கல்குவாரி உரிமையாளர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஆனால் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தைச் சேர்ந்த குமரவேலு, 2022 ஜனவரி மாதம் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:திருமயம் வளையன்வயல் கிராமம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கிராமம் குன்று புறம்போக்காக வகைப்படுத்தப்பட்டுள்ளது.ராசு ராமையா, கருப்பையா ஆகிய இருவர், வளையன்வயல் கிராமத்தில் கல் குவாரி நடத்தி வருகின்றனர். இவர்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் குவாரி நடத்தி வருகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தைச் சேர்ந்த குமரவேலு, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:திருமயம் வளையன்வயல் கிராமம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கிராமம் குன்று அரசு புறம் போக்காக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ராமையா, கருப்பையா ஆகிய இருவர், வளையன்வயல் கிராமத்தில் கல் குவாரி நடத்தி வருகின்றனர். இவர்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் குவாரி நடத்தி வருகின்றனர்.ராமையா மனைவி அழகு ஊராட்சி தலைவராக இருப்பதால் அவரும் நீர்நிலை அருகே சட்டவிரோதமாக கல் குவாரி நடத்திவருகிறார். இந்த குவாரி முறைகேடு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல்செய்தஅந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சட்ட விரோதமாக குவாரி நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இருப்பினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.தற்போதும் குவாரி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் சட்டவிரோதமாக கல்குவாரி நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததுஇந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில், சட்ட விரோதமாக குவாரி நடத்தியவர்களுக்கு ரூ.9 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.இதில் எவ்வளவு தொகை வசூலிக்கப்பட்டுள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அபராதத் தொகை இதுவரை வசூலிக்கப்படவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, அபராதத் தொகையை வசூலிக்க வருவாய்த் துறையினர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறித்து பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை பிப்.2-ம்தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்பும் கடந்த இரண்டு வருடங்களாக சட்ட விரோதமாக அரசு அனுமதி ரத்து செய்யப்பட்ட ஆறு ஏக்கர் நிலத்தில் உள்ள கல்குவாரியில் 100 அடி ஆழத்திற்கு சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள கனிம வளங்களை வெட்டி எடுத்து அரசு அனுமதி இல்லாமல் கடத்திச் சென்றுள்ளனர். அது மட்டும் இல்லாமல் ஆர் ஆர் கல்குவாரி அருகே அரசு அனுமதியுடன் செயல்பட்டு வரும் மணி என்பவரது கல் குவாரிக்கு வழங்கிய அனுமதி சீட்டை வைத்து ஆர் ஆர் கல்குவாரியில் இரவு நேரங்களில் சட்ட விரோதமாக வெட்டி எடுத்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள கனிம வளங்களை நூதனமாக 50க்கும் மேற்பட்ட கனரக டாரஸ் லாரிகள் மூலம் கடத்திச் சென்றதாகவும் அதுமட்டுமில்லாமல் சட்டவிரோதமாக வெட்டி எடுத்த கனிம வளங்களை அரசு அனுமதி வாங்காமல் இரண்டு இடங்களில் சுமார் 4000 டன் சுமார் 80 கோடி ரூபாய் மதிப்புள்ள கனிம வளங்களை மலை போல் குவித்து வைத்துள்ளதாகவும் வருவாய்த் துறை, கனிம வளத்துறை அலுவலர்களுக்கு ஜகபர் அலி பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால்இதையடுத்து, உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் வழக்கு தொடர்ந்தார்.திருமயம் வட்டாட்சியரிடம் 2024 டிசம்பர் 26 ஆம் தேதி திருமயம் வட்டாட்சியர் புவியரசன் அவர்களிடம் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வெங்களூரைச் சேர்ந்தவர் ஜகபர் அலி(56). புகார் மனு ஒன்று கொடுத்துள்ளார். (அதிமுக பிரமுகரான இவர் தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக மாவட்ட செயலாளராகவும் இருந்துள்ளார்இவர், ( முன்னாள் அதிமுக சிறுபான்மையினர் பிரிவு ஒன்றிய செயலாளர்) என்பது குறிப்பிடத்தக்கது.
ஜகபர் அலி கொடுத்த புகாரின் பேரில் திருமயம் வட்டாட்சியர் புவியரசன் மற்றும் வருவாய் ஆய்வாளர் நில அளவையர் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது அங்கு எவ்வளவு பரப்பளவில் கனிம வளம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது என தனியார் நிறுவன உதவியுடன் டிஜிட்டல் மீட்டர் வைத்து ஆய்வு செய்துள்ளனர். அப்போது அரசு அனுமதி ரத்து செய்யப்பட்ட ஆறு ஏக்கரை தவிர மேல் பரப்பில் கனிம வளங்களை வெட்டி எடுக்காமல் ஏற்கனவே வெட்டி எடுத்த இடத்தில் சட்டவிரோதமாக வெடிவைத்து ஆழமாக கனிம வளங்களை வெட்டி எடுத்து தெரியவந்துள்ளது. அதன்பின்பு வெட்டி எடுத்த கனிம வளங்களை சேகரித்து வைத்துள்ள இடங்களில் ஆய்வு மேற்கொண்டு அந்த இடத்திற்கான அரசு அனுமதியை வழங்குமாறு வட்டாட்சியர் கேட்டுள்ளார். அதற்கு கனிம வளம் வைத்துள்ள இடத்திற்கு மாறாக வேறு இடத்தில் வாங்கிய அனுமதியை வழங்கியுள்ளனர். அதற்கு வட்டாட்சியர் கனிம வளங்களை சேகரித்து வைத்துள்ள இடத்திற்கான அனுமதியின் ஆவணங்களை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார். ஆனால் அனுமதி வாங்கிய ஆவணங்களை வழங்காமல் காலதாமதம் ஆக்கியுள்ளனர் ஆர் 9ஆர் கல்குவாரி உரிமையாளர்கள் .ஆவணங்கள் வந்த பிறகு இது சம்பந்தமாக அறிக்கையை மாவட்ட ஆட்சியருக்கு திருமயம் வட்டாட்சியர் வழங்குவதற்கு தாமதம் ஆகியுள்ளது.அதன் பின்பு கடந்த ஜனவரி 10-ஆம் தேதி புதுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கனிமவள கொள்ளை தொடர்பாக புகார் மனு அளித்தார்.இதன் காரணமாக கனிம வள கொள்ளையர்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வந்தார்.2025 ஜனவரி 13ஆம் தேதி ஜகபர் அலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர் ஆர் கல்குவாரியில் சட்டவிரோதமாக கனிமங்களை தொடர்ந்து வெட்டி எடுத்து கடத்தி வருவதாகவும் இதன் பிறகும் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்த இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்த பின்பு ஜகபர் அலி பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.இந் நிலையில், 2025 ஜனவரி 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஜகபர் அலி, பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற 407 டிப்பர் லாரி மோதியதில் ஜகபர் அலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதையடுத்துஜெகபர் அலியின் மனைவி மரியம் அளித்த புகாரில் எங்கள் கிராமப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கும் கல் குவாரி, கிரஷர்கள் குறித்து சென்னை ஐகோர்டு மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து கனிம கொள்ளையை எனது கணவர் ஜகபா் அலி தடுத்து வந்தார். மேலும் அப்பகுதியில் மக்களை திரட்டி அவ்வப்போது போராட்டங்களும் நடத்தி வந்தார். இதனால் அப்பகுதியில் கல்குவாரி நடத்தி வருபவர்கள், ஜகபர் அலி மீது கோபத்தில் இருந்து வந்துள்ளனர். அவ்வப்போது அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளனர்.தன் கணவரின் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவியதாகவும், அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் எனது கணவர் சாவில் சந்தேகம் உள்ளது எனவும், சந்தேகப்படும் படியாக தனியார் ஆர் ஆர் கல்குவாரி உரிமையாளர் மற்றும் அவரது நெருங்கிய உறவினரான லாரி டிரைவர் மீது புகார் அளித்திருந்தார். காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் ஜகபர் அலியின் மனைவி மரியம் அளித்த புகாரின் பேரில், திருமயம் போலீசார் வழக்குப்பதிந்து நடத்திய முதல் கட்ட விசாரணையில் ஜகபர் அலி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது குற்றச்சாட்டுக்கு உள்ளான நிறுவனங்களின் ஆர் ஆர் கல் குவாரி உரிமையாளர்கள் ராசு, ராமையா, லாரி உரிமையாளர் முருகானந்தம் மற்றும் அவரது ஓட்டுநர் முருகேசன் ஆகியோர் மீது, திருமயம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் ஜகபர் அலி குடும்பத்தினர் தொடர்ந்து இது விபத்து அல்ல திட்டமிட்ட கொலை என கூறிவந்த நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் ஆர் ஆர் கல்குவாரி உரிமையாளர்கள் ராசு ராமையா ஆகிய இருவரும் செய்து வந்த தொழிலுக்கு தொடர்ந்து இடையூறாக ஜகபர் அலி இருந்து வந்ததாகவும் இதன் காரணமாக குவாரி உரிமையாளர்கள் ராசு, ராமையா, தினேஷ்குமார் மற்றும் முருகானந்தம், காசிநாதன் ஆகியோர் ஜகபர் அலியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் வவ்வாணி கண்மாய் அருகே ஜாபர் அலி இரண்டு சக்கர வாகனத்தில் சென்றபோது முருகானந்தம் தனது 407 டிப்பர் லாரி மூலம் , திட்டமிட்டு சாலை விபத்தை ஏற்படுத்தி, ஜகபர் அலியைக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்ததன் அடிப்படையில் விபத்து என பதிவு செய்யப்பட்ட வழக்கை, கொலை வழக்காக மாற்றி திருமயம் போலீசார் 4 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். வழக்கை விசாரித்த நீதிபதி 4 பேரையும் 15 நாள் பிப் 3ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. ஆர் ஆர் உரிமையாளர் ஒருவர் பாண்டிச்சேரியில் தலைமறைவாக இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.குறிப்பிடத்தக்கது. இந்த கொலை சம்பவத்தை அடுத்து தற்போது அனைத்து கட்சியினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதி மக்களிடம் விசாரித்தபோது ஆர் ஆர் கல்குவாரி பற்றி திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தனர் .அரசு அனுமதியின்றி கடந்த இரண்டு வருடங்களாக சட்டவிரோதமாக கனிம வளம் வெட்டி எடுத்து தினந்தோறும் 50க்கும் மேற்பட்ட கனரக டாரஸ் லாரிகள் மூலம் கடத்தி விற்பனை செய்து வந்த ஆர் ஆர் கல்குவாரி உரிமையாளர்கள் ராசு ராமையா ஆகிய இருவரும் மீதும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்த ஜகபர் அலியை கொலை செய்ய முன்கூட்டியே திட்டம் தீட்டியது திருமயம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் குணசேகரன் தெரியும் என்றும் ஆனால் கல்குவாரி உரிமையாளர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு ஜகபர் அலி கொலைக்கு உடந்தையாக திருமயம் காவல் ஆய்வாளர் செயல்பட்டு இருக்கலாம் என்று தகவல் தெரிந்தும் இந்த கொலையை தடுக்க திருமயம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் தன் கடமையிலிருந்து தவறிவிட்டார் என்றும் காவல் ஆய்வாளர் மீது புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர் .
அது மட்டும் இல்லாமல் 2022 ஆம் ஆண்டு அரசு அனுமதியை விட சட்டவிரோதமாக கனிம வளம் வெட்டி எடுப்பதாக ஆர் ஆர் கல்குவாரி உரிமையாளர்கள் மீது புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தைச் சேர்ந்த குமர வேலு, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் திருமயம் வளையன் வயல் கிராமம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கிராமம் குன்று புறம் போக்காக வகைப்படுத்தப்பட்டுள்ளது.ராசு ராமையா, கருப்பையா ஆகிய இருவர், வளையன்வயல் கிராமத்தில் கல் குவாரி நடத்தி வருகின்றனர். இவர்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் குவாரி நடத்தி வருகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தைச் சேர்ந்த குமர வேலு, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:திருமயம் வளையன்வயல் கிராமம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கிராமம் குன்று புறம் போக்காக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ராமையா, கருப்பையா ஆகிய இருவர், வளையன் வயல் கிராமத்தில் கல் குவாரி நடத்தி வருகின்றனர். இவர்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் குவாரி நடத்தி வருகின்றனர்.ராமையா மனைவி அழகு ஊராட்சி தலைவராக இருப்பதால் அவரும் நீர்நிலை அருகே சட்டவிரோதமாக கல் குவாரி நடத்திவருகிறார். இந்த குவாரி முறைகேடு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல்செய்தஅந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சட்ட விரோதமாக குவாரி நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இருப்பினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.தற்போதும் குவாரி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் சட்டவிரோதமாக கல்குவாரி நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில், சட்ட விரோதமாக குவாரி நடத்தியவர்களுக்கு ரூ.9கோடி அபராதம் விதிக்கப்பட்டுஉள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.இதில் எவ்வளவு தொகை வசூலிக்கப்பட்டுள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அபராதத் தொகை இதுவரை வசூலிக்கப்படவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, அபராதத் தொகையை வசூலிக்க வருவாய்த் துறையினர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறித்து பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை 2022 பிப்.2-ம்தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தது . அதன் பின்னர் கல்குவாரி உரிமையாளர்கள் 9 கோடி ரூபாய் அபதாரம் தொகையை கட்டாமல் இருந்து வந்துள்ளனர். ஆனால் அந்தக் கட்டணத்தை வசூல் செய்ய புதுக்கோட்டை கனிமவளத்துறை அதிகாரி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கல்குவாரியில் தொடர்ந்து இரண்டு வருடமாக சட்ட விரோதமாக கனிம வளத்தை வெட்டி கடத்தி இருந்து வந்துள்ளனர் . ஆனால் புதுக்கோட்டை மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகள் கனிம வளம் கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்டு இருந்து வந்தனர் என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது கொலை செய்யப்பட்ட ஜகபர் அலி கடந்த ஆறு மாதம் முன்பு வரை ஆர் ஆர் கல்குவாரி உரிமையாளர்கள் ராசு ராமையா ஆகியோருடன் நட்பாக இருந்து வந்தார் என்றும் அதனால் ஆர் ஆர் கல்குவாரியில் இரவு நேரங்களில் வெடி வைத்து கனிம வளம் வெட்டி எடுத்து எப்படி கடத்தி எடுத்துச் செல்கிறார்கள் என்றும் அப்படி எடுத்துச் செல்லும் கனிம வளங்களை எங்கு சேர்த்து வைத்துள்ளனர் என்று ஜகபர் அலிக்கு நன்றாக தெரியும் என்றும் கூறுகின்றனர்.அதுமட்டுமில்லாமல் ஆர் ஆர் கல்குவாரி சுற்றி பட்டா நிலங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் இருப்பதால் அந்த நிலங்கள் வழியாக ஆறு பாதைகள் அமைத்து அந்தப் பாதைகள் மூலம் கனிம வளங்களை வெட்டி கடத்தி எடுத்துச் சென்றுள்ளனர். அதைவிட அதிர்ச்சியான தகவல் என்னவென்றால் இரவு நேரங்களில் கனிம வளம் வெட்டி எடுத்து கடத்துவதற்கு மட்டும் அந்தப் பாதைகளை பயன்படுத்துவதாகவும் அதன் பின்பு பகலில் அந்த கல்குவாரிக்கு செல்ல முடியாமல் பாதைகளை குறுக்கே ஜேசிபி இயந்திரங்களை வைத்து பெரிய பள்ளங்களை தோண்டி விடுவதும் இப்படியே தொடர் கனிம வள கொள்ளை நடந்து இருந்துள்ளது. அரசு அனுமதி ரத்து செய்யப்பட்ட பின்பு வருவாய்த்துறை கனிமவளத்துறை அதிகாரிகள் அந்த கல்குவாரிக்கு சோதனை செய்ய சென்றாள் அதிகாரிகள் செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் அந்தக் கல்குவாரி சுற்றி இரண்டு கிலோமீட்டர் தொலைவில் தனியார் பட்டா நிலங்களில் ஜேசிபி இயந்திரங்களை வைத்து பெரிய பெரிய பள்ளங்களை தோண்டி வைத்து சோதனை செய்ய சொல்ல முடியாமல் இடையூறு செய்து இரவு நேரங்களில் கல்குவாரிகளில் கனிம வளங்களை டாரஸ் லாரிகள் சென்று வருவதற்கு மட்டும் அந்த பள்ளங்களை மூடி நூதன முறையில் பல சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கனிம வளங்களை சட்டவிரோதமாக வெட்டி எடுத்து கடத்தி இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.சட்டவிரோத கல்குவாரி தொடர்புடைய தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள், திட்டமிட்டு சாலை விபத்தை ஏற்படுத்தி, ஜகபர் அலியைக் கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஆர் ஆர் உரிமையாளர் தலைமறைவாக இருப்பதாகவும் அவரை காவல்துறையினர் தேடி வருவதாகவும் வேறு யாரேனும் சம்பந்தப் பட்டிருக்கிறார்களா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் புதுக்கோட்டை மாவட்ட கனிம வளத்துறை அதிகாரிகள் ஆர் ஆர் கல் குவாரியில் சட்டவிரோதமாக எவ்வளவு வெட்டி எடுத்து உள்ளனர் என புதுக்கோட்டை மாவட்டம் துளையானூரில் உள்ள குவாரியில் 4 மாவட்டத்தை (திருச்சி, கரூர், நாகை, புதுக்கோட்டை) சேர்ந்த கனிம வளத்துறை அதிகாரிகள் டிரோன் மூலம் சோதனை நடத்தியதில் பல நூறு கோடி ரூபாய் கனிம வளங்கள் வெட்டி எடுத்து கடத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எது எப்படியோ புதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக தொடர்ந்து இரண்டு வருடங்கள் கனிம வளம் வெட்டி கடத்தி வருவதாக புகார் வந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் சட்டவிரோதமாக இயங்கி வரும் கல் குவாரிகளுக்கு உடனடியாக சீல் வைத்திருந்தால் இது போன்ற கொலை சம்பவம் நடக்காமல் தவித்து இருக்கலாம் என்றும் சட்டவிரோதமாக இயங்கி வந்த கல்குவாரிக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் சீல் வைக்காமல் விசாரணை நடத்தியதற்கு காரணம் என்ன!? புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிமவளத்துறை உதவி இயக்குனர் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாகவும் இந்தக் கொலை நடப்பதற்கு முன்பு நடவடிக்கை எடுத்து தடுத்து நிறுத்த தவறிய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் கனிமவளத்துறை உதவி இயக்குனர் ஆகிய இருவர் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பல கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்!