Uncategorizedகனிம வளங்கள்

இரவு நேரங்களில் வைகை ஆற்றில் தொடர் மணல் கொள்ளை!
கொட்டும் பண மழையில் கொண்டாட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட கனிம வளம் மற்றும் ஆட்சி நிர்வாகம்!
வறண்டு பாழ் பட்டு போன விவசாய நிலங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!

இரவு நேரங்களில் வைகை ஆற்றில் தொடர் மணல் கொள்ளை! அதிர்ச்சி வீடியோ!


கொட்டும் பண மழையில் கொண்டாட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட கனிம வளம் மற்றும் ஆட்சி நிர்வாகம்!
வறண்டு பாழ் பட்டு போன விவசாய நிலங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!

தமிழகத்தின் நான்காவது பெரிய ஆறு வைகை ஆறு ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலையில் தான் வைகை உற்பத்தியாகும் இடம் அமைந்துள்ளது.


வைகை ஆறு உற்பத்தியாகிற இடம். குறிப்பாக வருசநாடு, மேகமலை பகுதியாகும்.
வைகையின் பிறப்பிடம் கடல் மட்டத்திலிருந்து 5,333 அடி உயரத்தில் இருக்கிற தேனி மாவட்டத்தில் மேகமலையில் உள்ள ஒரு சிகரமான வெள்ளிமலையில் தான் அது உற்பத்தியாகிறது. அங்கிருந்து
கூட்டாறு என்ற இடத்தில் உடங்கலாறும் சேர்ந்த பிறகுதான்  வள்ளல் நதி என அழைக்கப்படும்

வைகை ஆறு மற்றும் பெரிய  ஆறாக மலையில் இருந்து இறங்கி வைகை ஆறு வடக்கே பழனி குன்றுகளாலும் தெற்கே வருசநாடு குன்றுகளாலும் அரண் செய்யப்பட்டுள்ள கம்பம் பள்ளத்தாக்கை அடைகிறது. பின்னர் வருசநாடு குன்றுகளின் கிழக்கு மூலையை அடைந்ததும் தென் கிழக்காகத் திரும்பி

பெரியாறு அணை, வைகை அணை, சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை, மருத நதி அணை, சாத்தையாறு அணை ஆகியவை இந்தப் படுகையில் அமைந்துள்ளது.

அணைப்பட்டி

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள விருவீடு, மட்டப்பாறை, சித்தர்கள்நத்தம், அணைப்பட்டி போன்ற ஊராட்சிகளுக்கு உட்பட்ட சுமார் 40 கிராமங்கள் வழியாக மதுரை நோக்கிச் வைகை ஆறு செல்லும் வழியில் சோழவந்தான்
மதுரை
திருப்புவனம்
திருப்பாச்சேத்தி
மானாமதுரை
பார்த்திபனூர்
பரமக்குடி
போகலூர்
இராமநாதபுரம்
அழகன் குளம் ஆகியவை நதிக்கரையில் அமைந்துள்ள முக்கிய நகரங்கள் மற்றும் ஊர்கள்  வழியாகப் பாய்ந்து  48 மடகுண்ட ராமநாதபுரம் கண்மாயில் சேருகிறது. ராமநாதபுரம் கண்மாய் நிறைந்தால்   வங்காள விரிகுடா கடலில் கலக்கும். ஆனால் இதுவரை வைகை ஆற்றில் தண்ணீர் இராமநாதபுரம் கண்மாய் நிறைந்து கடலில் கலந்தது போல் எந்த வரலாறும் இல்லை. இந்த வகையாறு
மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் என மொத்தம் 7031 சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது.
வள்ளல் நதியான வைகை ஆற்றில்
பொதுவாக மழைக்காலத்தில் குறிப்பாக வடகிழக்குப் பருவ மழைக் காலங்களில் மட்டும் நீர்ப் பெருக்கு ஏற்படும். பிற காலங்களில் பொதுவாக வறண்டே காணப்படும்.
வைகை ஆற்றைச்சார்ந்த பகுதியும் (விவசாய நிலங்களின் விளை பொருள்கள்) இவர்களின் வாழ்வாதரங்கள் ஆகும்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த நடகோட்டை, சித்தர்கள் நத்தம், அணைப்பட்டி வழியாக செல்லும் வைகை ஆற்றில் கடந்த அதிமுக ஆட்சியில் ஐந்தாண்டுகளுக்கு முன்பு

வைகை ஆற்று மணல் கொள்ளை காரணமாக ஆற்றில் நீர்ப்பிடிப்பு தன்மை குறைந்து, நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறி நதிகள் பாதுகாப்பு நலச்சங்கம் மற்றும் வைகை பாதுகாப்பு சங்கம் சார்பில் சென்னை உயர் நீதி மன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டு, வழக்கை விசாரித்த நீதிபதிகள் நீதிமன்ற ஆணையர் தலைமையிலான நீதிபதிகள் அடங்கிய குழுவினர் நேரில் ஆய்வு செய்து இயற்கை வளங்கள் மற்றும் கனிமவளங்களைப் பாதுக்காக்க பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டு
வைகை ஆற்றில் மணல் அள்ளுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஆனால் நீதிமன்ற உத்தரவை எல்லாம் காற்றில் பறக்க விட்டு

திண்டுக்கல் மாவட்ட கனிம வளம் மற்றும் ஆட்சி நிர்வாகத்தில் உள்ள உயர் அதிகாரிகளுடன் காவல்துறையினர், வருவாய்த் துறையினர், பொதுப்பணி துறையினர்  ஆகியோரின்  உறுதுணையோடு

அணைப்பட்டி
நிலக்கோட்டை தாலுகா
திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் பின்புறம் வைகை ஆற்றில் இரவு நேரங்களில்
இராட்சத
ஹிட்டாச்சி இயந்திரங்கள் மூலம்  ஆற்றில் 50 அடி ஆழம் வரை மணல் வெட்டி எடுக்கப்பட்டு  குவாரி போல் குவித்து 100-க்கும் மேற்பட்ட கனரக டாரஸ் டிப்பர் லாரிகளில் பல நூறு கோடி மதிப்பிலான மணல் இரவு பகலாக கொள்ளையடித்து கடத்திச் சென்று விற்பனை செய்து வருவதாகவும்
தொடர் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வரும் மணல் மாஃபியாக்கள் மீதும் இதற்கு உடந்தையாக உள்ள கனிம வளத்துறை வருவாய்த்துறை பொதுப்பணித்துறையில் உள்ள அரசு அதிகாரிகள் மீது  நடவடிக்கை எடுக்க விவசாயிகள், சமூக ஆர்வலர்கள்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை புகார் மனு கொடுத்து வருகின்றனர்.ஆனால் திண்டுக்கல் மாவட்ட ஆட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் திண்டுக்கல் மாவட்ட ஆட்சி நிர்வாகம் கோமாவில் இருக்கும் நிலையில் நிலையில் மணல் மாபியா கும்பல் மணல் அள்ளும் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் 100-க்கும் மேற்பட்ட கனரக டாரஸ் லாரிகளில் வணிக நோக்கில் இரவு நேரங்களில் வைகை ஆற்றில் மணல்  திருடப்பட்டு கடத்தி வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வைகை ஆற்றில் மணலை திருடி கொள்ளையடித்து செல்லும்  அதிர்ச்சி வீடியோக்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டு இருக்கிறது . அதேபோல் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இதையெல்லாம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிந்தும் தெரியாதது போல் கண்டு கொள்ளாமல் மணல் மாபியக்களிடம் சிக்கிக்கொண்டு கொட்டும் பணம்  மழையில்  பணமா ?பாசமா? என்று தெரியாமல்  கொண்டாடிக் கொண்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள்  குற்றம் சாட்டுகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அணைப்பட்டி
வைகை ஆற்றில் தொடர் தொடர் மணல் திருட்டால் தான் ஆற்றின் நிலத்தடி நீர் இல்லாமல் போனதற்கு முக்கிய காரணமாகும்.  இதனால் லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள்

தண்ணீர் இல்லாமல் வறண்டு பாழ் பட்டு கிடைப்பதாகவும்   பெரியார் முல்லை கால்வாய் பாசன விவசாயிகள் தங்களது வேதனையை தெரிவித்துள்ளனர்.
ஆற்றில்  நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதால் வைகை ஆற்று படுகையில் இருந்த

தென்னந்தோப்புகளில் உள்ள பல ஆயிரக்கணக்கான மரங்கள் தங்களையே அழித்துக் கொண்டன என்பதுதான் நிதர்சனம்.

மணல் இருந்த வரை ஆற்றின் மணல் வழியே பயணித்துக் கொண்டு இருந்த ஆற்று நீர்,

மணல் இல்லாமல் வெறும் கற்களிலும், பாறைகளிலும் பயணிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. எனவே ஆற்றின் போக்கு மாறி அருகே இருந்த விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு உள்ளன. பல நூற்றுக்கணக்கான நிலங்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.
வைகை ஆற்றங்கரை விவசாய நிலங்களில் 90 சதவீதம் கிணற்று ஆற்றுப் பாசனமும் 10% விவசாய நிலங்கள் மட்டுமே வைகை ஆற்று நீர் பாசனத்தை நம்பி விவசாயம் செய்து வருகின்றனர். குறிப்பாக
கிணற்று-ஆற்றுப்பாசனம் என்றால் எப்போதும் கிணற்றில் தண்ணீர் இருக்கும் என எண்ண வேண்டாம். எப்பொழுதெல்லாம் ஆற்றில் தண்ணீர் செல்கிறதோ அப்போதுதான் இந்தக் கிணறுகளில் தண்ணீர் கிடைக்கும். வருடத்திற்கு முப்போகம் விளைந்த விவசாய நிலங்கள் தொடர் மணல் கொள்ளையால் ஒரு போகம்  கூட செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது வேதனை அளிக்கின்றது .
வைகை ஆற்றல் தொடர் மணல் திருட்டில் ஈடுபட்டு வருவதால் தற்போது ஆற்றின் மணல் மட்டம் ஐம்பது அடிக்கும் கீழே சென்று விட்டதாலும், ஆற்றின் படுகை பாறையைத்தொட்டு விட்டதாலும், கிணற்றில் நீர் கிடைக்கவில்லை; எனவே பல ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரின்றி இருப்பதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
இது எப்படியோ வைகை மற்றும் முல்லை பெரியார் ஆற்றுப் பாசன விவசாயிகளின் மீது அக்கறை இல்லாமல் வைகை ஆற்றில் நடக்கும் தொடர் மணல் திருட்டுக்கு தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் துணை போகிறார்கள் என்றும் இப்படியே இந்த நிலை தொடர்ந்தால் வருங்கால சந்ததிகளுக்கு குடிக்க கூட தண்ணீர் கிடைக்காத சூழல் தான் ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் குற்றச்சாட்டை வைக்கின்றன. 

திமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் உள்ள நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உயர் அதிகாரிகள் என்று அழைக்கப்படும் ஒரு சில சில கருப்பு ஆடுகள் செயல்பட்டு வருகின்றனர்.ஆகவே விவசாயிகளின் நலன் கருதியும்  வருங்கால சந்ததியினருக்கு விவசாயத்திற்கும் குடிதண்ணீருக்கும்  என்ன செய்யப் போகிறார்கள் என்ற அச்சம் பொதுமக்களிடையே இருப்பதை கருத்தில் கொண்டு ஒரு கேள்விக்குறியாகி விடும் என்ற அச்சம் பொதுமக்களிடம் இருப்பதால் வைகை ஆற்றில் நடக்கும் தொடர் மணல் திருட்டை தடுத்து நிறுத்தாமல் பல லட்சங்கள் கையூட்டு பெற்றுக் கொண்ட திண்டுக்கல்  மாவட்ட ஆட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அது மட்டும் இல்லாமல் வைகை ஆற்றில் தொடர் மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button