உள்ளாட்சி தேர்தல்கள் 2022-ன்போது அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தாங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்! தமிழக தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
கொரோனா(Covid-19) தொற்று காலத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் 2022-ன்போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது .
தற்போதைய கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அரசியல் கட்சியியின் வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு கீழ்க்குறிப்பிட்டுள்ளவைகளுக்கு அனுமதி மற்றும் தடையும் விதித்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது
1.சாலை நிகழ்ச்சிகள் நடத்துதல், 2.பாதயாத்திரை, 3.சைக்கிள் மோட்டார் வண்டிகள் ஊர்வலம் ஆகியவை 11.02.2022 வரை தடை செய்யப்பட்டுள்ளது.
பின்னர் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்
1.அரசியல் கட்சிகளின் ஊர்வலம், 2.குறிப்பிட்ட வேட்பாளர்கள் அல்லது தேர்தல் தொடர்புடைய எந்த ஒரு குழுவும் 11.02.2022 வரை அனுமதிக்கப்பட மாட்டாது.
பின்னர் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதற்கேற்வாறு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்
1.பிரச்சாரத்தின்போது மேற்கொள்ளப்படும் பேரணிகளுக்கு தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதி பெற்று உரிய கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி மேற்கொள்ளலாம்.
2.மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் திறந்தவெளி மைதானங்களில் அதிகபட்சம் 1000 பங்கேற்பாளர்கள் அல்லது மைதானத்தின் கொள்ளளவிற்கு 50 சதவீதத்திற்கு மிகாமல் இதில் எது குறைவோ அதற்கு அனுமதி பெற்று திறந்தவெளி பொதுக்கூட்டம் நடத்தலாம்.
3. துணை இயக்குநரிடம் (சுகாதார பணிகள்) சான்று பெற்று, அதிகபட்சம் 500 பங்கேற்பாளர்கள் அல்லது உள்ளரங்கின் கொள்ளளவிற்கு ஏற்ப 50 சதவீததிற்கு மிகாமல் உள்ளரங்கு பொதுக்கூட்டம் நடத்தலாம்.
4.பாதுகாப்புப் பணியாளர்களை தவிர்த்து 20 பங்கேற்பாளர்களுக்கு மிகாமல் வீடு வீடாக சென்று பிரச்சாரங்கள் மேற்கொள்ளலாம்.
5. மேலும் 10.12.2021 மற்றும் 25.01.2022 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்ட நகர்புற உள்ளாட்சி தேர்தல்கள் -2022 வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றபட வேண்டும் என அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்கள்.