தனியார் தென்னை தோப்பில் நுழைந்து ஆட்டம் காட்டும்
அரி கொம்பன்! அச்சத்தில் பொதுமக்கள்!திணறும் தேனி மாவட்ட வனத்துறை மற்றும் ஆட்சி துறை!

சில தினங்களாக தேனி மாவட்ட நிர்வாகத்தையே மிரட்டி ஆட்டம் கண்டு வைத்துள்ளது அரிக்கொம்பன் யானை !தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம்,கூடலூர் அருகே, கழுதை மெட்டுப்பகுதியில்,
தனியார் தென்னை தோப்பில் நுழைந்து
அரி கொம்பன் யானை அட்டகாசம்;
தமிழ்நாடு மற்றும் கேரளா வனத்துறை அதிகாரிகளுடன் தேனி மாவட்ட காவல்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக, தகவல் !
.https://youtu.be/W68JA7lfPzw
ஏனென்றால் தேனி மாவட்ட மலைப்பகுதியில் வலம் வரும் அரிக்கொம்பன் யானையைப் பிடிக்க தேனி மாவட்ட வனத்துறையினர் திணறி வருவதாக தகவல் வந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் கேரளா வனப்பகுதியை விட தேனி மாவட்ட வனப் பகுதியின் பரப்பளவு அதிகமாகக் கொண்டது. மிகப்பெரிய பரப்பளவு கொண்ட தேனி மாவட்ட வனப்பகுதியில் தேனி மாவட்ட வனத்துறை நிர்வாகத்தில் போதுமான வனத்துறை அதிகாரிகள் வனத்துறை காவலர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அது.அட்டுமில்லாமல் தற்போது உள்ள வனத்துறையினர் பெரும்பாலும் வனப்பகுதிக்கு செல்வதில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வந்துள்ளது.

ஆகவேதான் அரிக் கொம்பன் யானையை பிடிக்க வனத்துறையினருக்கு பெரும் சவாலாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. கடந்த 10 தினங்களாக வனத்துறையினர் அரிக்கொம்பன் யானையை பிடிக்க முயற்சி செய்து வருகிறார்களா !?இல்லை கேரள எல்லைக்கு திருப்பி அனுப்ப முயற்சி செய்து வருகிறார்கள் என்று தேனி மாவட்ட நிர்வாகம் குழப்பத்தில் இருப்பதாக மலைவாழ் மக்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர். இந்தக் கேள்விக்கு தேனி மாவட்ட ஆட்சியரின் பதில் என்னவாக இருக்கும் என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கேரளா தொழிலாளிகளை தாக்கி கொன்ற அரிக் கொம்பன் யானை தற்போது வளம் வரும் தேனி மாவட்டத்தில் ஒரு தொழிலாளியை கூட தாக்கி கொன்று விடக்கூடாது என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக இருக்கிறது. ஆகவே அரிக்கொம்பன் யானை சுற்றித் திரியும் வனப்பகுதிக்கு தேனி மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளாமல் அலுவலகத்தில் இருந்து அறிக்கை மட்டும் வெளியிட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டையும் சமூக ஆர்வலர்கள் வைத்துள்ளனர். ஆகவே மலைவாழ் மக்கள் உயிரை காப்பாற்ற அரிக்கொம்பன் யானையை பிடிக்க தமிழக முதல்வர் உடனடியாக அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாகும்.
தேனி மாவட்ட ஆட்சியரின் அறிக்கை..
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்குட்பட்ட தேவிகுளம் வட்டம், சாந்தம்பாறை ஊராட்சி பகுதியில் சுற்றித்திரிந்து வந்த அரிக்கொம்பன் யானையானது கடந்த மாதம் 29-ந்தேதி கேரள வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு, 30-ந்தேதி அதிகாலை 5 மணியளவில் கேரள மாநிலம், பெரியாறு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட முல்லாக்குடி எனும் பகுதியில் விடப்பட்டது.
கடந்த 1-ந்தேதி அதிகாலை சுமார் 6 மணியளவில் தேனி மாவட்டம் கூடலூர் வனச்சரகத்திற்குட்பட்ட தமிழக வனப்பகுதிக்குள் நுழைந்தது.
தற்போது அரிக் கொம்பன் யானை தேனி மாவட்டம் மேகமலை பகுதிக்கு வந்துள்ளது. மேகமலை கோட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க “இந்த யானை கேரளா தேயிலை தோட்ட தொழிலாளிகள் ஐந்து பேரை கொன்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
இந்நிலையில் மேகமலை பகுதியில் ‘அரிக்கொம்பன்’ காட்டுயானை நடமாட்டம் உள்ளதால் இரவு நேரத்தில் மலைவாழ் மக்கள் வெளியே வர வேண்டாம் என்று தேனி மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அரிக்கொம்பன்’ காட்டுயானையானது சின்னமனூரில் இருந்து ஹைவேவிஸ் (மேகமலை) செல்லும் சாலையில் 10-வது வளைவில் நேரடியாக காணப்பட்டு வனச்சரக அலுவலர் தலைமையிலான குழுவினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும், யானையின் நடமாட்டம் தொடர்பாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கேரள வனத்துறையிடம் இருந்து அரிக்கொம்பன் யானை நடமாடிய பகுதிகளை புவியிடங்காட்டியின் (ஜி.பி.எஸ்) மூலம் பெறப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. , மேகமலை பகுதிக்கு செல்வதற்கு நுழைவுவாயிலாக உள்ள வனத்துறையின் தென்பழனி சோதனைச்சாவடி மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக 20 போலீசார் தென்பழனி சோதனை சாவடி பகுதியிலும், 20 போலீசார் மேகமலை ஹைவேவிஸ் பகுதியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
யானையின் கழுத்துபகுதியில் பொருத்தப்பட்ட கருவியில் செயற்கைக்கோள் மூலமாக கிடைக்கும் தகவல்கள், புலிகள் காப்பக துணை இயக்குனர் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், கூடலூர், கம்பம் (கிழக்கு) மற்றும் சின்னமனூர் வனச்சரகர்கள் தலைமையில் 3 தனித்தனியான குழுக்கள் அமைக்கப்பட்டு யானையின் நடமாட்டம் இரவு, பகலாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
எனவே, மேகமலை வனப்பகுதியில் அரிக்கொம்பன் யானையின் நடமாட்டம் குறித்து வனத்துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதால், பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என்று தேனி மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.