ஐந்து லட்சம்ரூபாய் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடுத் திட்டத்திற்காக CMCHISTN செயலியை Play Store மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விருதுநகர் மவாட்டம்!
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லா சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்கு ஆண்டு வருமானம் ரூ72,000க்கு குறைவான வருமான சான்றிதழை விண்ணப்ப படிவத்தில் சம்மந்தப்பட்ட VAO மூலம் சான்று பெற்று அதனுடன் குடும்பஅட்டை, ஆதார் அட்டை இவற்றின் நகல்களை இணைத்து மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள முதலமைச்சர் காப்பீடு அட்டை வழங்கும் மையத்தில் சமர்பித்து காப்பீடு திட்ட அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.
ஒரு குடும்பத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ5,00,000 (ஐந்து லட்சம்) வரை மருத்துவ சிகிச்சைகள் இத்திட்டத்தின் கீழ் இலவசமாக அங்கீகரிக்கப்பட்ட தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பயன்பெறலாம்.
கீழ்கண்ட உயர் சிகிச்சை முறைகள் இத்திட்டத்தில் இலவசமாக வழங்க்கப்படுகிறது.
இருதய அறுவை சிகிச்சைகள்
உடல்உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள்
விபத்து மற்றும் அவசர சிகிச்சைகள்
கொரோனா சிகிச்சைகள்
செயற்கை உடல் உறுப்புகள் பொறுத்துதல்
பொதுமக்கள் தங்களுடைய குடும்ப உறுப்பினர் பதிவு, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை முறைகளை www.cmchistn.com என்ற இளையதளம் மூலம் தாங்கள் அறிந்து கொள்ளலாம்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடுத் திட்டத்திற்காக CMCHISTN செயலியை Play Store மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் உறுப்பினர் பதிவு மற்றும் மருத்துவமனை விவரங்களையும் அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.