ஒன்றிய கவுன்சிலரை கோட்டை விட்ட திமுக!! கொள்ளிடம் 16 வது வார்டு சுயேச்சை வேட்பாளரிடம் தோல்வியடைந்த திமுக வேட்பாளர்!சீர்காழி தொகுதி கொள்ளிட திமுக ஒன்றிய செயலாளர்கள் பதவியை மீண்டும் தக்க வைத்துக் கொள்ளும் போட்டியில் இடைத்தேர்தலில் கோட்டை விட்ட ஒன்றிய செயலாளர்கள்!?
நடவடிக்கை எடுக்குமா திமுக தலைமை!?

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கொள்ளிடம் ஒன்றியத்தில் 9/07/22 அன்று நடந்த இடைத்தேர்தலில் 16 வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு V.மஞ்சு விஜயகுமார் கைப்பை சின்னம் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
நடந்து முடிந்த கடந்த 2019 டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி நடந்த ஊராட்சி ஒன்றிய தேர்தலில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தொகுதி கொள்ளிடம் ஊராட்சிஒன்றியத்தில் உள்ள 16 வது வார்டில் அதிமுக கட்சி சார்பாக வேட்பாளராக நின்ற தனலட்சுமி வெற்றி பெற்றார்.
கவுன்சிலராக இருந்த தனலட்சுமி சில மாதங்களுக்கு முன்பு மறைந்து விட்டார் .

தமிழக முழுவதும் காலியாக உள்ள 500க்கும் மேற்பட்ட ஊரக உள்ளாட்சி நகராட்சி பதவிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் கடந்த 9 ஆம் தேதி நடப்பதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதில் அதிமுக கட்சியில் ஓபிஎஸ் இபிஎஸ் பிரச்சனையால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.
இதனால் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் அனைவரும் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டனர்.
இதில் சீர்காழி தொகுதி கொள்ளிடம் 16 வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கைப்பை சின்னம் ஒதுக்கப்பட்டது.
இவர் முன்னாள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தனலட்சுமியின் மகள் மஞ்சுளா விஜயகுமார் ஆவார்.
அவருக்கு போட்டியாக திமுக கட்சியில் மஞ்சுளாவின் சித்தி திமுக சின்னம் உதயசூரியனில் போட்டியிட்டார்.
மொத்தம் 11 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்தது. 60% வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்தனர். மொத்தம் 3315 வாக்குகள் பதிவாகி இருந்தது.
இந்த கடும் போட்டியில் சுயேட்சியை சின்னத்தில் போட்டியிட்ட மஞ்சுளா விஜயகுமார் 1646 வாக்குகள் பெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக கட்சி வேட்பாளர் நிர்மலா மணிமாறன் 1536 வாக்குகள் பெற்றிருந்தார். சுயேசியாக போட்டியிட்ட மஞ்சுளா விஜயகுமார் 110 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இதனால் ஆளுங்கட்சி என திமுகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தோல்விக்கு அதிர்ச்சி தகவல் வலிவந்துள்ளது.

கொள்ளிடம் திமுக ஒன்றிய செயலாளர்கள் ரவிக்குமார் மலர்விழி இவர்கள் இரண்டு பேர்தான் என்று திமுக கட்சி மூத்த உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கொள்ளிடம் திமுக ஒன்றிய செயலாளர் மேற்கு கிழக்கு மலர்விழிமற்றும் ரவிக்குமார் இவர்கள் இரண்டு பேர் கட்டுப் பாட்டில் இந்த 16 வது வார்டு இருப்பதாகவும் இதில் ஐந்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகள் ரவிக்குமாருக்கும் மீதி உள்ள ஊராட்சிகள் கிழக்கு ஒன்றிய செயலாளர் மலர்விழிக்கும் உள்ளதாக தெரிகிறது. இந்த 16 வது திமுக வேட்பாளரை ஆதரித்து பொது மக்களிடம் திமுக சார்பில் யார் வாக்கு சேகரிப்பது வேலை செய்வது என்ற கடும் போட்டியால் தற்போது ஒரு கவுன்சிலரை இழந்துள்ளது திமுக கட்சி. இதற்குக் காரணம் மாவட்ட பொறுப்பாளராக உள்ள பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகனும் உடந்தை என்கிறார்கள் .அதுமட்டுமில்லாமல் சீர்காழி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் மீதும் அதிர்ப்தியில் உள்ளனர். இதற்கு என்ன காரணம் என்றால் திமுக கட்சி ஆட்சிக்கு வந்து ஒருவருடம் மேலே ஆகியும் கொள்ளிடம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் இதுவரை என்ன நடக்கிறது என்று கூட பொதுமக்களை சந்திக்க கூட வரவில்லை சீர்காழி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்று அந்தப் பகுதியில் உள்ள மூத்த திமுக கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எது எப்படியோ உள்ளாட்சித் தேர்தல் என்றாலே திமுக தான் அதிகமாக இடத்தில் வெற்றி பெறும் என்ற கட்டமைப்பை பல தேர்தல்களில் நிலைநாட்டி வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் திமுக கட்சிக்குள் உள்ள உட்க்கட்சி மோதல்களால் தற்போது சுயேச்சை சின்னத்தில் வேட்பாளராக நின்ற ஒருவரை எதிர்த்து நின்ற திமுக வேட்பாளர் வெற்றி பெற முடியவில்லை என்றால் இதற்கு காரணம் என்ன என்று தலைமைக் கழகம் விசாரணை நடத்தி தோல்விக்கு காரணமாக இருந்தவர்கள் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தற்போது திமுக கட்சி மூத்த உறுப்பினர்கள் கூறியுள்ளனர். இது எப்படியோ தற்போது திமுக கட்சியில் ஒன்றிய செயலாளர்கள் பதவிக்கு போட்டி போட்டுக் கொண்டு இருக்கும் நிலையில் ஒரு ஒன்றிய கவுன்சிலரை வெற்றி பெற செய்யாமல் ஒன்றிய செயலாளர் பதவியை தக்க வைத்துக் கொள்ள மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ தற்போது திமுக கட்சியில் உள்ள ஒன்றிய செயலாளர்கள்.என்ற சந்தேகம் உள்ளது.
canadian online pharmacies reviews
best online pharmacy
cheap online pharmacy
canada drugs online reviews
viagra dosages
canadian pharmacies recommended by aarp