கோலிவுட்

ஒரு நாள் இரவுக்கு ஒரு லட்சம் ரூபாய் !?

திருநெல்வேலியில் புதிதாகக் திறக்க உள்ள கடையை திறந்து வைக்க வருவீர்களா என்று கேட்டபின்னர் ஒரு நைட்டுக்கு இவன் எவ்ளோ வேணாலும் தரானாம். என்று பனிமலர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

1 லட்ச ரூபாய் தருகிறேன், ஒரு நாள் இரவு முழுவதும் தங்க வேண்டும் என்று தொலைபேசியில் பேசியவருக்கு முகநூலில் பதிலடி கொடுத்துள்ள
பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பின்னர் தொடர்ச்சியாக ஃபேஸ்புக் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அவப்போது சமூகம் சார்ந்த கருத்துக்களை பகிர்ந்து வரும் பனிமலர்.

இவர் பெரும்பாலும் பெண்ணியம் பற்றி பேசுவது , சாதி மறுப்பு மற்றும் மதச்சார்பின்மை என்ற பெயரில் இவர் பதிவிடுவதும் வழக்கம்.

இந்நிலையில், தன்னை பற்றி சமூக வலைத்தளங்களில் தரைகுறைவாக பேசுபவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்..

இதுபோன்று சமூக வலைத்தளங்களில் நான் வீடியோக்களை பதிவு செய்ய வரும் பொழுது என்னிடம் பேச வரும் சிலர், நாங்கள் உன்னை ஆபாசமாக பார்க்க வேண்டும் என்று சொல்லக்கூடிய ஆண்களுக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்று மட்டும் தான்.. என்னிடம் உள்ளது தான் உன்னுடைய அம்மாவிடமும் உன்னுடைய வீட்டு பெண்களிடமும் உள்ளது.. மற்ற பெண்களை அணிவது போல தான் நானும் ப்ரா அணிந்து உள்ளேன். நீங்கள் மற்ற பெண்களை இப்படி அவமதித்து பேசுவதுபோல தான் உன்னுடைய வீட்டிலுள்ள பெண்களிடமும் மற்றவர்கள் பேசுவார்கள் என்பதை நீங்கள் மறந்து விட வேண்டாம்..

மேலும் நான் கஷ்டப்பட்டு செய்தி வாசித்து பணம் சம்பாதிக்கின்றேன். அதேபோல் சமூக வலைதளங்களிலும் பேசி வருகிறேன். பெண்கள் பயந்து ஒளிந்த காலம் எல்லாம் மாறிவிட்டது, ஆட்சியும் மாறி விட்டது, காவல் துறையில் ஒரு புகார் அளித்தால் போதும் அடுத்த சில மணி நேரங்களில் உங்களை போன்ற நபர்களை கைது செய்ய முடியும். உன்னை எல்லாம் ஒரு மனிதனாகவோ அல்லது புழு பூச்சியாகவோ கூட நினைக்க வில்லை. அதனால் தான் நான் புகார் அளிக்க விருப்பமில்லை. ஆனால் எல்லை மீறினால் புகார் அளிக்கவும் தயங்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

பெண் தொழில் முனைவோருக்கு விளம்பரம் பண்ணும்போது 1 மணி நேர வீடியோல 10 நிமிசம் தேவையில்லாமல் யாரயும் தொந்தரவு பண்ணாதீங்கனு சொல்றேன். அப்பவும் இது நடந்துட்டேதான் இருக்கு. இன்னைக்கு ஒரு அக்காவிடம் பேசும்போது லைவ் முடுஞ்சதும் வீடியோ கால் வந்துச்சுமா நிர்வாணமா நிக்குறான்னு லட்ரலி அழுகுறாங்க. எவ்ளோ கேவலம் இதெல்லாம்.

பெண்கள் வேலை செய்யவில்லை என்றால் செய்யலனு சொல்றோம் செய்யும்போது இப்டி தொந்தரவு செஞ்சா அவுங்களும் என்னதான் செய்வங்க.
இதும் இந்திகாரனுக நிறைய பேர் இப்டி திரியுறானுக.

ஆண்கள் இது மாதிரி செய்யும்போது நம் வீட்டு பெண்கள்கிட்டயும் யாரோ இப்டி நடந்துக்குவாங்கனு நினைவிருக்கட்டும்.

இதுக்கெல்லாம் பயந்து நாம வேலை செய்யாம இருக்கமுடியாது, தைரியமா டீல் பண்ணுங்க. அது மாதிரி பண்ற பெரும்பாலானவுங்க தன்நம்பிக்கை இல்லாத பயந்தாகோலிகதான் நீங்க சத்தமா பேசுனாலே ஓடிருவானுக. என்று முக நூலில் பதிவிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button