தமிழக அரசு

ஓராண்டு திமுக ஆட்சி முடிவில் ஏமாற்றம்!?அரசு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டமும் சமூகப் பாதுகாப்பு திட்டம் தான் என்பதை உணர்ந்தே திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கும் என்று நம்பி இருந்தவர்களுக்கு போராட்டமே வெல்லும்!!

போராட்டமே வெல்லும்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு…கடந்த அதிமுக ஆட்சியில் 2021 பிப்ரவரி மாதம் அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சார்பில் ஜாக்டோ ஜியோ அமைப்பு மூலமாக நடத்தப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை மாற்றி பழைய ஓய்வூதியம் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து புதிய ஓய்வூதிய திட்டதை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த கோரி 72 மணி நேரம் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தமிழக அரசின் சார்பு செயலாளராக இருந்த கமலக்கண்ணன் கடிதம் ஒன்றை தமிழ்நாடு தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் நல கூட்டமைப்பிற்கு அனுப்பியுள்ளார். அதில் அவர் ஜாக்டோ ஜியோ அமைப்பு மூலம் அரசு ஆசிரியர்கள் அறிவித்துள்ள பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டு வருவதாக குறிப்பிட்டிருந்ததாக தகவல் வந்தது.

தற்போது சட்டமன்றத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் சாத்தியமில்லை என்று (07/0502022) அன்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசினார் .அதற்கு பல காரணங்களை தெரிவித்துள்ளார்.

ஆனாலும் இதற்கு பல சங்கங்கள் கடுமையாக தமிழக அரசை விமர்சித்து அடுகடுக்கான பல கேள்விகளை வைத்து உள்ளார்கள்.

1.பதினைந்து இலட்சம் தருகிறேன் என்று சொல்லி விட்டுத் தேர்தல் முடிவுற்ற பின்னர் இது தேர்தல் ஜூம்லா என்றாரே அமித்ஷா; அவருக்கும் இந்த நிதியமைச்சருக்கும் என்ன வித்தியாசம்?

2.சாத்தியமில்லாததை தேர்தல் அறிக்கையில் ஏன் வைத்தீர்கள்? தேர்தல் பரப்புரையின் போது ஏன் வாக்குறுதி அளித்தீர்கள்?

3.”நான் கலைஞரின் பிள்ளை ; சொன்னதைச் செய்வேன்” என்று பேசிய முதலமைச்சர் இப்போது என்ன சொல்லப் போகிறார்?
PFRDA -வில் செலுத்திய தொகையை திரும்பப் பெறுவதில் சட்டச் சிக்கல் இருக்கிறது என்கிறார் நிதியமைச்சர் ; PFRDA -வில் தொகையைச் செலுத்திய இராஜஸ்தான் போன்ற மாநிலங்களே துணிச்சலாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அறிவிக்க முடிகிறது என்று சொன்னால் PFRDA -வில் இதுவரை தொகையைச் செலுத்தாத தமிழக அரசுக்கு என்ன தயக்கம்?

4.சட்டச் சிக்கல் பற்றிப் பேசும் நிதியமைச்சரின் முகத்தில் பல சட்டங்களைத் திருத்துவதற்குக் காரணமாக இருந்த திராவிடத்தின் முகத்தைப் பார்க்க முடியவில்லை. மாறாக பன்னாட்டு நிதி நிறுவனங்களில் பணியாற்றிய ஒரு கார்ப்பரேட் முகத்தைத் தான் பார்க்க முடிகிறது.

5.அகவிலைப்படி சமூக நீதியின் அடிப்படையில் வழங்கப்படும் என்று பேசிய போதே சமூக நீதியைப் பெரிதும் போற்றும் திராவிடத்திற்கும் நிதியமைச்சருக்குமான தூரம் எத்தகையது என்பது நமக்கு புரிந்துவிட்டது.6.மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே…
அரசாங்கம் சரியாக இயங்குகிறது என்றால் அரசு ஊழியர்கள் சரியாக இயங்குகிறார்கள் என்று பொருள் ; அரசு ஊழியர்கள் சரியாக இயங்கவில்லை என்றால் அரசாங்கமும் சரியாக இயங்கவில்லை என்றே பொருள்;

7.இதைப் புரிந்து கொள்ளாமல் அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு ஆட்டம் போட்ட எடப்பாடியின் அவலக்குரல் இப்போது எல்லாத் திக்கிலும் ஒலிக்கிறது; இந்த நிலையை தங்களுக்கும் உருவாக்கிட மிகுந்த முனைப்போடு செயல்பட்டு வருகிறார் மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள்.

8.அரசு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டமும் சமூகப் பாதுகாப்பு திட்டம் தான் என்பதை உணர்ந்தே தங்களது தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கும் என்று நம்பியே வாக்களித்தோம்; பகை முடிக்கும் பணி முடித்தோம்.


9″கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடை நாக்கோடாமை கோடியுறும்” என்ற ஔவைப் பெருமாட்டியின் முதுமொழியைத் தவறியும் மறந்து விடாதீர்கள்; தவறினால் தெருக்கோடிகள் யாவும் எங்களின் போராட்டக் களமாக மாறும்.

10.எங்களைப் போராட்டத்திற்குத் தள்ளும் எத்தகைய அதிகாரமும் தெருக்கோடிக்குத் தள்ளப்படும்.

11.தாங்கள் வரலாறு தெரியாதவர் அல்ல;
ஓராண்டு ஆட்சி நிறையும் வேளையில் இப்படி ஒரு பரிசை எங்களுக்கு அளித்தால் இந்த அரசின் ஐந்தாண்டு முடியும் வேளையில் இதை விடச் சிறப்பான பரிசை உங்களுக்கு நாங்கள் அளிப்போம்.

எப்போதும் எங்களின் போராட்டமே வெல்லும்.

நிதி அமைச்சர் பேசியது …சுதந்திரத்திற்கு பிறகு கடந்த அதிமுக ஆட்சியில் சரியான தலைமை இல்லாததால் , சட்டப்பேரவை, அரசு, நீதித்துறை ஆகியவற்றின் எல்லை தெளிவற்று இருக்கிறது. நீதிமன்றங்களின் தீர்ப்புகளை பார்த்தால் அரசாங்க உரிமைகளில் கை வைக்கும் வகையில் உள்ளது. என்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

2003-ம் ஆண்டுக்கு முந்தைய ஓய்வூதிய திட்டத்தில் பெறப்பட்ட நிதி முழுமையாக அரசின் கணக்கில் இருந்தது. அதை அரசு எடுக்கலாம், வைக்கலாம், அனைத்து உரிமையும் அரசிடம் இருந்தது. ஆனால் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்துக்கு மாறிய பின்னர், ஒவ்வொரு தனி நபரின் பணம், அரசு அளிக்கும் பங்களிப்பு ஆகியவை ஒவ்வொரு தனி நபரின் பெயரில் தனியாக கணக்கில் வைக்கப்படுகிறது.
தமிழகத்தில் முந்தைய ஆட்சியில் 2016-ல் ஒரு ஆய்வு குழுவை அமைத்து, 2018-ல் அறிக்கையும் பெற்றுள்ளனர். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் தனிகணக்கில் வரவு வைத்த பிறகு, அதை திரும்ப எடுத்து அரசு நிதியாக்குவதற்கு சட்டம் அனுமதிக்காது. இது சிந்திக்க வேண்டிய ஒன்று.ஓய்வூதியத்துக்காக இந்த ஆண்டு ரூ.39 ஆயிரத்து 500 கோடி செலவிடப்படுகிறது. புதிய ஓய்வூதிய திட்டத்துக்காக அரசு சார்பில் ரூ.3 ஆயிரத்து 250 கோடி ஒதுக்கப்படுகிறது. அதாவது ஒரு பணியாளருக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் செலவிடப்படுகிறது. 2003-க்கு முந்தைய பணியாளர்களின் ஓய்வூதியத்துக்காக ரூ.24 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது. அதாவது ஒரு நபருக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் செலவிடப்படுகிறது. இது தான் பழைய ஓய்வூதிய திட்டத்துக்கும், புதிய ஓய்வூதிய திட்டத்துக்கும் உள்ள வித்தியாசம்.
கடந்த 2 ஆண்டுகளாக ஓய்வூ பெறுவது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் இந்த ஆண்டு ஓய்வுபெறும் நிலயைில் அவர்களுக்கு ரூ.2,150 கோடி செலவாக இருக்கிறது. அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியத்துக்காக ரூ.5,200 கோடி செலவிடப்படுகிறது.

இந்த ஆண்டு, சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரை ஓய்வு பெற்ற நீதிபதிகளின் ஓய்வூதியத்துக்காக ரூ.7 கோடி, எம்எல்ஏக்கள் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்துக்காக ரூ.40 கோடி செலவிடப்பட உள்ளது. அதனால் எம்எல்ஏக்கள் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதிய உயர்வு குறித்து அவை முன்னவரும், முதல்வரும் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்பட்டவன்.
சுதந்திரத்துக்கு பிறகு, சட்டப்பேரவை, அரசு, நீதித்துறை ஆகியவற்றின் எல்லை தெளிவற்று இருக்கிறது. நீதிமன்றங்களின் தீர்ப்புகளை பார்த்தால் அரசாங்க உரிமைகளில் கை வைக்கும் வகையில் உள்ளது. கடந்த நான்கைந்து ஆண்டுகளாக சரியான தலைமை இல்லாத ஆட்சி நடந்ததால் அதிகாரிகள் சற்று திசை திரும்பி இருக்கிறார்கள். முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து, தலைமைச் செயலகத்தில் இருந்து ஒரு மாற்றத்தை உருவாக்கி வருகிறோம். படிப்படியாகதான் அரசை திருத்த முடியும். திருத்தம் உறுதியாக நடந்து வருகிறது என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button