நகராட்சி தேர்தல்

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி உசிலம்பட்டி நகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட சகுந்தலா வெற்றி! துணைத் தலைவருக்கு மும்முனைப் போட்டி!முக்கிய நிர்வாகிகள் 4பேர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!?

உசிலம்பட்டி உட்கட்சிப் பூசல் வெடித்ததால் கட்சியின் கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் பொறுப்புகளில் இருந்து அதிரடியாக நீக்கிய திமுக கட்சி தலைமை!

உசிலம்பட்டி நகர செயலாளர் தங்கப்பாண்டி,திமுக ஒன்றிய செயலாளர் சுதந்திரம் திமுக மாநில செயற்குழு உறுப்பினர் சோலை ரவிக்குமார் திமுக நகர இளைஞர் அணிச் செயலாளர் சந்திரன் இவர்கள் நான்கு பேரையும் திமுக தலைமை கழகம் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினரிலிருந்து தற்காலிகமாக நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதால் உசிலம்பட்டி திமுக கட்சி நிர்வாகிகளிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக தலைமைக் கழக சார்பாக நகராட்சித் தலைவர் பதவிக்குஅறிவித்த செல்வி
கட்சி விதிகளை மீறி நகராட்சி தலைவருக்கு எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றிபெற்ற சகுந்தலாநடந்து முடிந்த நகர்ப்புற ஊராட்சி தேர்தலில் உசிலம்பட்டி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் 12 திமுக கவுன்சிலர்கள் காங்கிரஸில் ஒரு கவுன்சிலர் வெற்றி பெற்று திமுக 13 இடங்களை பெற்று நகராட்சி தலைவர் பதவியை தக்க வைத்த நிலையில் திமுக கட்சி தலைமையில் 10வது வார்டு கவுன்சிலராக திமுக சார்பில் நின்ற செல்வி தீமானூத்து ஊராட்சி மன்ற தலைவர் அஜித் பாண்டியின் மனைவி ஆவார். இவருக்கு
உசிலம்பட்டி நகராட்சி தலைவர் பதவியை வழங்க கட்சி தலைமையில் முடிவு செய்யப்பட்ட நிலையில் மறைமுக வாக்கு மார்ச் 4 ஆம் தேதி நடந்தது. ஆனால் திமுக கட்சி தலைமை அறிவித்த செல்வி அவர்களுக்கு 6 வாக்குகள் மட்டுமே அளித்திருந்தனர் ஒரு வாக்கு செல்லாத வாக்காக அறிவிக்கப்பட்டது .மீதமுள்ள 17 வாக்குகள் 11 வது வார்டில் நின்ற சகுந்தலாவுக்கு கிடைத்த நிலையில் சகுந்தலா வெற்றிபெற்றதாக உசிலம்பட்டி தேர்தல் அதிகாரி சான்றிதழ் வழங்கினார்.

அதன் பின் திமுக கழக தலைமையில் அறிவிக்கப்பட்ட துணைத் தலைவர் பதவி காங்கிரஸ் கட்சி சார்பாக 19வது வார்டில் நின்று வெற்றி பெற்ற தேன்மொழி அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் மதியம் இரண்டரை மணிக்கு துணைத் தலைவர் பதவிக்கு சொன்ன படி வாக்குப்பதிவு நடக்க வில்லை .ஏனென்றால் காலையில் உசிலம்பட்டி நகராட்சி தலைவர் பதவிக்குத் திமுக கட்சி தலைமை அறிவித்த செல்வி கவுன்சிலருக்கு 6வாக்கு மட்டுமே கிடைத்தது.மீதம் உள்ள 7 திமுக கட்சி கவுன்சிலர்கள் செல்விக்கு வாக்களிக்காமல் சகுந்தலாவுக்கு வாக்களித்ததால் அதிர்ச்சியில் துணைத் தலைவர் பதவியை நிறுத்தி வைக்க முடிவு செய்தது திமுக தலைமை.
அதன்பின் திமுக கட்சி மேலிடத்தில் பேச்சுவார்த்தை நடந்தது .
இந்தப் பேச்சுவார்த்தையில் துணைத் தலைவர் பதவிக்கு திமுக தலைமை அறிவித்த காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் தேன்மொழிக்கு வழங்குவதற்கு திமுக நிர்வாகிகளிடம் எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது.

ஆனால்துணைத் தலைவர் பதவிக்கு 17வது வார்டு உசிலம்பட்டி நகரச் செயலாளர் தங்கமலை பாண்டியன் மனைவி பழனியம்மாளுக்கு கொடுக்க வேண்டும் என்றும் மற்றொருபுறம் 16 வது வார்டில் நின்று வெற்றி பெற்ற திமுக கட்சி ஒன்றிய செயலாளர் சுபாகரன் மகனுக்கு துணைத் தலைவர் பதவியை கேட்டதாகவும் இதனால் துணைத்தலைவர் பதவிக்கு மும்முனைப் போட்டி இருந்ததாகவும் துணைத் தலைவர் பதவியை நிறுத்தி வைத்த திமுக கட்சி தலைமை உசிலம்பட்டி கட்சி நிர்வாகிகள் 4 பேரை கட்சிப் பொறுப்பு மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து தற்காலிகமாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

நாம் இது சம்பந்தமாக விசாரித்ததில் நமக்கு வந்த தகவல் என்னவென்றால் திமுக கட்சி தலைமை அறிவித்த நகராட்சி தலைவர் செல்வி அவர்களுக்கு எதிராக திமுகவில் உள்ள கட்சி நிர்வாகிகள் சிலர் சகுந்தலாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் அது மட்டுமில்லாமல் அதிமுக கட்சியில் நின்று வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் கட்சிகளிடம் பணம் கொடுத்து ஆதரவு கேட்டதாகவும் இதனால் கட்சித் தலைமை அறிவித்த செல்வி 6 வாக்குகள் மட்டுமே பெற்றதாகவும் இதனால் அதிர்ச்சி அடைந்த தலைமை கழகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் உசிலம்பட்டி திமுக கட்சி தொண்டர்கள் தகவல் அளித்தனர்.

எது எப்படியோ கடமை, கண்ணியம் ,கட்டுப்பாடு என்ற தாரக மந்திரத்தை திமுக கட்சிக்கு அளித்த அண்ணாவின் கொள்கையை கோட்பாட்டை மதிக்காமல் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி பதவிகளுக்காக தங்களுடைய பணம் மற்றும் அதிகார பலத்தால் எது வேண்டுமானாலும் பெற்றுவிடலாம் என்று எண்ணிக்கொண்டு உள்ள ஒரு சிலருக்கு தற்போது திமுக கட்சி தலைவர் மு க ஸ்டாலின் எடுத்துள்ள நடவடிக்கையால் கட்சி மீது திமுக கட்சி தொண்டர்களுக்கு மிகுந்த நம்பிக்கை அல் அளித்துள்ளது என்பது தான் நிதர்சனம்.

கடந்த 10 வருடமாக திமுக எதிர்க்கட்சியாக இருந்த போதும் கட்சிக்காக தங்களை அர்ப்பணித்து கட்சியில் பணிசெய்ததையும் கட்சிக்காக உழைத்த மாவட்ட கட்சி பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகளை கட்சித்தலைமை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற ஆதங்கத்தையும் திமுக மூத்த கட்சி நிர்வாகிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button