கணவர் மீது கொடுத்த புகாருக்காக இரவு முழுவதும் மனைவியை அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் வைத்து துன்புறுத்தியதாக அதிர்ச்சி தகவல்! திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா

மனித உரிமை மீறலில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அம்மையநாயக்கனூர் காவல் நிலையம் திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்!திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா கன்னிமா நகர் அருகே குள்ளலக்குண்டு கிராமம் கோபாலபுரம் கிராமத்தில் வசிக்கும் A.செல்வம் (வயது 38) அவரது மனைவி உதயக்குமாரி வயது 38 தன் வயதுக்கு வந்த மகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது இரவு 8/03/2023 இரண்டு மணிக்கு அளவில் கன்னிமா நகர் அருகே குள்ளலக்குண்டு கிராமம் கோபாலபுரத்தில் உள்ள உதயகுமாரி வீட்டிற்கு சென்ற அம்மைய நாயக்கனூர் காவல் ஆய்வாளர் குருவத்தாய் அவர்கள் கணவர் செல்வம் மீது புகார் கொடுத்துள்ளதால் கணவர் எங்கே என்று காவல் ஆய்வாளர் கேட்டதற்கு கணவர் இரவு வீட்டிற்கு வரவில்லை என்றும் அவரது தொலைபேசி ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறியதாகவும் அதற்கு அம்மைநாயக்கனூர் காவல் ஆய்வாளர் உதயகுமாரியை காவல் நிலையத்திற்கு வரும்படி உதயகுமாரியை அழைத்ததற்கு 15 வயது பெண் குழந்தை வீட்டில் தனியாக இருக்கிறது என்றும் காலையில் வருகிறேன் என்று கூறியதற்கு இல்லை இப்போதே காவல் நிலையத்துக்கு வர வேண்டும் என்று வற்புறுத்தி வாகனத்தில் அழைத்துச் சென்று இரவு முழுவதும் அம்மைய நாயக்கனூர் காவல் நிலையத்தில் பெண்ணை வைத்திருந்து 8/04/2023 மதியம் ஒரு மணி அளவில் வீட்டிற்கு அனுப்பியுள்ளதாக தகவல்.
இரவு நேரத்தில் விசாரணைக்கு பெண்களை அழைத்து வரக்கூடாது என்றும் அப்படியே அழைத்து வந்தால் இரவு 9 மணிக்கு மேல் காவல் நிலையத்தில் வைத்திருக்கக் கூடாது என்றும் வழக்கு பதிவு செய்திருந்தால் மட்டுமே காவல் நிலையத்தில் வைத்திருக்க வேண்டும் அதுவும் காவல் நிலையம் முழுவதும் பெண் காவலர்கள் மட்டுமே பாதுகாப்புக்கு இருக்க வேண்டும் என்றும் ஆண் காவலர்கள் இருக்கக் கூடாது என்றும் காவல்துறை டிஜிபி சுற்றறிக்கையை தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் புகார் மீது விசாரணை என்ற பெயரில் இரவு இரண்டு மணிக்கு தூங்கிக் கொண்டிருக்கும் பெண்களை அழைத்து காவல் நிலையத்தில் வைத்து கொடுமைப்படுத்துவது சட்டத்துக்கு விரோதமான செயல் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே அம்மையநாயக்கனூர் காவல் ஆய்வாளர் நள்ளிரவு இரண்டு மணிக்கு வயதுக்கு வந்த பெண் குழந்தையை தனியாக விட்டு விட்டு தாய் உதயகுமாரியை அழைத்து வந்து காவல் நிலையத்தில் இரவு முழுவதும் உட்கார வைத்து மறு நாள் 8/04/2023 மதியம் ஒரு மணிக்கு அனுப்பி உள்ளனர். இது மனித உரிமை மீறலாகும். இந்த தகவல் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டும் இல்லாமல் அதிகாலை ( 3.00 AM) மூன்று மணி அளவில் உதயகுமாரி கணவர் செல்வத்தின் மாமா முனியாண்டி (விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட பாண்டியின் தம்பி) தோட்டத்திற்கு அருகில் உள்ள ஓய்வு பெற்ற காவல் உயர் அதிகாரியின் தோட்டத்திற்கும் காவல் வாகனத்தில் நான்கு ஆண் காவலர்கள் மற்றும் காவல் பெண் ஆய்வாளர் சென்றுள்ளனர்.

3.00am.
அங்கிருந்த சி சி டிவி கேமராவில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகவே திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தென் மண்டல ஐஜி அவர்கள் நடந்தது என்ன என்று உரிய விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காவல் உட்கோட்டம் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில்இரவு முழுவதும் காவல் நிலையத்தில் துன்புறுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் மாநில மகளிர் ஆணையம் மற்றும் தமிழக முதல்வர் மற்றும் தலைமைச் செயலாளர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவரிடம் புகார் அளித்துள்ளதாகவும் அந்த புகாரில் தன்னை இரவு முழுவதும் துன்புறுத்தியதாகவும் உடல் சோர்வடைந்து மயக்கம் அடைந்த நிலையில் என்னை இருக்கையில் உட்கார வைக்காமல் கீழே தரையில் உட்கார வைத்து குடிக்க தண்ணீர் கூட கொடுக்காமல் என்னை துன்புறுத்தியதாகவும் நான் மிகவும் மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் என்னை துன்புறுத்தி மனித உரிமை மீறலில் ஈடுபட்ட நிலக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் அம்மையநாயக்கனூர் காவல் ஆய்வாளர் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர்கள் பெண் காவலர்கள் அனைவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் நான் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தற்கொலை செய்யப் போகிறேன் என்றும் அதில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இரவு காவல் நிலையத்தில் பெண்ணை அழைத்துச் சென்று இரவு முழுவதும் வைத்து கொடுமைப்படுத்தி மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் மற்றும் காவல் நிலையத்தில் பணி செய்த அனைத்து காவலர்களையும் பணியிட நீக்கம் செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.