அரசியல்

கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக கலைஞர் அவர்களே நேரடியாக திமுக கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியவருக்கு தற்போது திமுக ஒன்றிய செயலாளர் பதவியா!? அதிர்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட திமுக நிர்வாகிகள் !!

கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் திமுக கட்சி ஒன்றிய செயலாளர்கள் பதவிக்கு உட்கட்சித் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. இதில் பல மாவட்ட செயலாளர்கள் தங்களுக்கு ஆதரவான ஒன்றிய செயலாளர்களை மீண்டும் ஒன்றியச் செயலாளர் பதவிக்கு பரிந்துரை செய்து வருகின்றனர்கள் என பல குற்றச்சாட்டுகள் திமுக கட்சி தலைமை அலுவலகத்திற்கு சென்றுள்ள நிலையில் ஒவ்வொரு மாவட்ட திமுக கட்சி நிர்வாகிகளை அழைத்து கட்சி தலைமை விசாரணை நடத்தி வருகிறது.


இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்ட திமுக ஒன்றிய செயலாளர்கள் நியமனத்தில்
பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் நிர்வாக செயலற்ற ஒன்றிய செயலாளர்களை தன்வசம் வைத்துக் கொள்ள தற்போது முயற்சிப்பதாக தலைமைக் கழகத்திற்கு ஒன்றிய செயலாளர் பதவிக்கு போட்டியிடும் திமுக நிர்வாகிகள் புகார் கொடுத்துள்ளனர் என்ற தகவல் வந்துள்ளது.
மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகனின் சொந்த ஒன்றியமான செம்பனார்கோயில் மத்திய ஒன்றியத்தில் திமுக கட்சி உறுப்பினர் அட்டை இல்லாத திருக்கடையூர் அமிர்த விஜயகுமார் என்பவரை நிவேதா முருகன் ஒன்றிய செயலாளராக நியமிக்க பரிந்துரைத்துள்ளதாக தகவல்..

விஜயகுமாரை ஒன்றிய செயலாளராக பரிந்துரை செய்வதற்கு காரணம் என்ன என்று களத்தில் விசாரித்தால் நமக்கு கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சியான தகவலை தெரிவித்தனர். மாவட்ட பொறுப்பாளராக உள்ள நிவேதா முருகனின் குவாரிகளின் மொத்த நிர்வாகத்தையும் இந்த விஜயகுமார் தான் கண்காணித்து வருகிறார் என்றும் நிவேதா முருகனுக்கு நம்பிக்கையான வலது கை இடது கை எல்லாமே இவர்தான் என்கின்றனர். இந்த விஜயகுமார் யார் என்று விசாரித்தால் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
2009 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் மின்வெட்டு காரணமாக 10 புதிய மின் உற்பத்தி நிலையங்களை கலைஞர் அவர்கள் உருவாக்கி பணி நடைபெற்றது. அப்பொழுது ஒன்றிணைந்த நாகை மாவட்டம் திருக்கடையூர் அருகே பிள்ளைபெருமாள்நல்லூர் ஊராட்சியில் 230 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையம் உருவாக்கப்பட்டு பணி நடந்து கொண்டிருந்த நிலையில் திருக்கடையூரில் இருந்து மின் உற்பத்தி நிலையத்திற்கு கனரக வாகனங்கள் செல்ல பல கோடி ரூபாய் மதிப்பில் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டது. அப்போது திருக்கடையூரில் உள்ள கோயில் சன்னதி தெருவில் சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும் என்று அப்போது ஊராட்சி மன்ற தலைவராக இருந்த விஜயகுமார் மின் உற்பத்தி நிலைய ஒப்பந்ததாரர்களிடம் பணம் கேட்டு வற்புறுத்தியதாகவும் அதே போல் திருக்கடையூரில் இருந்து மின் உற்பத்தி நிலையம் வரை உள்ள சிமிண்ட் சாலை முழுவதும் நான்தான் போடுவேன் அதற்கான பணத்தை என்னிடம் கொடுங்கள் என்றும் கேட்டதாகவும் அது மட்டும் இல்லாமல் சதாவிசேகம் ஹோட்டலில் ஏடிஎம் இயந்திர மையம் அமைக்க பணம் கேட்டதாகவும் விஜயகுமார் மீது புகார் எழுந்தது. அந்த நேரத்தில் கலைஞர் அவர்கள் மின் உற்பத்தி நிலையத்திற்கு ஆய்வு மேற்கொள்ள திருக்கடையூர் சென்றிருந்தார். அப்பொழுது மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள விடுதியில் தங்கினார். அந்த நேரத்தில் மின் உற்பத்தி நிலைய ஒப்பந்ததாரர்கள் அதிகாரிகள் அனைவரும் விஜயகுமார் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக தெரிவித்தனர். உடனே கலைஞர் அவர்கள் விஜயக்குமாரை திமுக கட்சி அடிப்படை உறுப்பினரிலிருந்து உடனடியாக நீக்கி அறிவிப்பு வெளியிட்டார். அதன் பின் பிஜேபி கட்சியில் பத்தாண்டுகளாக இருந்து வந்துள்ளார். ஆனால் பிஜேபி கட்சியில் இருந்தாலும் தற்போது மயிலாடுதுறை மாவட்ட திமுக பொறுப்பாளராக உள்ள நிவேதா முருகன் தன்னுடைய கைப்பாவையாக வைத்திருந்தார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதன் பின் 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தற்போது மீண்டும் திமுக கட்சியில் இணைந்துள்ளதாகவும் ஆனால் அமிர்த விஜயகுமாருக்கு திமுக கட்சி உறுப்பினர் அட்டை கூட இல்லை என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அப்படி அடிப்படை உறுப்பினர் இல்லாத ஒருவருக்கு ஒன்றிய செயலாளர் பதவி வாங்கி கொடுக்க பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் போராடுவது வேதனை அளிப்பதாக அப்பகுதி முன்னணி திமுக நிர்வாகிகள் கூறுகின்றனர்.
அது மட்டுமில்லாமல் சில தினங்களுக்கு முன்பு திமுக தலைமைக் கழக பொறுப்பாளர் ஆர் எஸ் பாரதி திருக்கடையூர் சென்றதாகவும் அங்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகனை மட்டும் சந்தித்து பேசியதாகவும் மற்ற திமுக நிர்வாகிகளை யாரையும் சந்திக்கவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் மயிலாடுதுறை மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
.
இப்படி இருக்கும் போது மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒன்றிய செயலாளர் பதவிக்கு முறையான தேர்தல் நடத்தினால் நிவேதா முருகன் பரிந்துரை செய்த யாரும் ஒன்றியச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள் என்று தெரிந்துகொண்டு சென்னைக்கு அடிக்கடி சென்று கட்சித் தலைமையில் இருப்பவர்களை சரிகட்டி தான் பரிந்துரை செய்துள்ள அனைவரையும் ஒன்றிய செயலாளராக தலைமைக் கழகம் நேரடியாக அறிவிக்க வைத்து விட வேண்டும் என்று முயற்சியில் சென்னைக்கு அடிக்கடி சென்று வருவதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது!

மேலும் அமிர்த விஜயகுமார் சம்பந்தமாக திடுகிடும் தகவல் வந்துள்ளது. அந்த அதிர்ச்சி தகவலை இமாதம் வர உள்ள ரிப்போர்ட்டர் விஷன் இழலில் வெளி வரும்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button