கழிப்பிட கட்டிடத்தில் அதிக கட்டணம் வசூல்!
அதிரடி நடவடிக்கை எடுத்த பழனி நகராட்சி அதிகாரி கள்!

பழனி பேருந்து நிலையத்தில்
இரவு, பகலாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது .
நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

ஆனால், இந்த பஸ்நிலையங்களில் இயற்கை உபாதைகளை கழிக்க சுகாதாரமான இலவச கழிப்பறைகளே இல்லை.
பயணிகளின் அடிப்படை உரிமையான இலவச கழிப்பறை இல்லாததால், திறந்தவெளியை பலர் கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
பஸ் நிலையங்களில் இலவச கழிப்பறை கட்டிடம் ஒன்றுகூட இல்லை.

பழனி பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் கட்டண கழிப்பறைகளில் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு சிறுநீர் கழிக்க 3 ரூபாய் டாய்லெட் போவதற்கு ஐந்து ரூபாய் என பழனி நகராட்சி நிர்வாகம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கட்டண கழிப்பிட கட்டிடத்தை பராமரிக்க ஒப்பந்தம் எடுத்துள்ளவர்

பழனி நகராட்சி நிர்ணயித்த விலையை விட விட அதிக அளவு பத்து ரூபாய் இருபது ரூபாய் என அதிக கட்டணம் வசூலித்து வந்துள்ளனர்.
அதுவும் கட்டண கழிப்பிட கட்டிடத்தில் போதுமான தண்ணீர் வசதி இல்லாமல் சுகாதாரமற்ற நிலையில் துர்நாற்றம் வீசுவதாகவும்
இதன் காரணமாக பயணிகளில் சிலர் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வந்ததால் பேருந்து நிலைய பகுதியில் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில்

பழனி நகராட்சி நிர்வாகத்தின் கணக்காளர் பழனி பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த கட்டண கழிப்பிட கட்டடத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார் அப்போது போதுமான தண்ணீர் வசதி இல்லாமல் கழிப்பறை சுகாதார மற்றும் நிலையில் இருந்துள்ளது அதுமட்டுமல்லாமல் அதிக கட்டணம் வசூலிப்பது உறுதியானது . அதிக கட்டணம் வசூலித்தால் ஒப்பந்தத்தை ரத்து செய்து விடுவதாக கட்டண களிப்பிட ஒப்பந்ததாரர்களிடம் நகராட்சி நிர்வாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். அது மட்டும் இல்லாமல் கழிப்பறையை சுத்தமாக சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும் எனவும் பழனி நகராட்சி நிர்வாகம் நிர்ணயித்த மூன்று ரூபாய் ஐந்து ரூபாய் மட்டுமே கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என
எச்சரிக்கை விடுத்து நடவடிக்கை எடுத்ததற்கு பழனி நகராட்சி நிர்வாக அதிகாரிகளை பயணிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.
ஆனால் பழனி நகராட்சி நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என எடுத்துள்ள நடவடிக்கை தற்காலிகமாக இல்லாமல் நிரந்தரமாக இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்!