கழிவறையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த கல்லூரி மாணவன்! திசை திருப்ப முயற்சிக்கும் போடி தாலுகா காவல் ஆய்வாளர் & துணை காவல் கண்காணிப்பாளர்! கொலையா? தற்கொலையா?
நடந்தது என்ன !? திடிக்கிடும் தகவல்!

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அரசினர் பொறியியற் கல்லூரி விடுதியின் கழிவறையில் இறந்து கிடந்த பொறியியல் மாணவன்.

கொலையை தற்கொலை என்று வதந்தி பரப்பும் கல்லூரி முதல்வர் மற்றும் விடுதி காப்பாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்! 2) விசாரணைக்கு முன்னரே வதந்திகளை முடிவுகளாக அறிவிக்கும் விசாரணை அதிகாரி போடி தாலுகா காவல் ஆய்வாளர் உலகநாதன் மற்றும் போடி சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் சுனில் ஆகியோர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்! 3) வழக்கு விசாரணையை (CB-CID) தமிழ்நாடு குற்றப்பிரிவு – குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றிட வேண்டும் 4) விக்னேசின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை!

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அரசினர் பொறியியற் கல்லூரியில்

மூன்றாம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னணுப் பொறியியல் படித்து வந்த

திருநெல்வேலியைச் சேர்ந்த விக்னேசு என்ற பட்டியல் சாதி மாணவன் கடந்த 13.02.25 அன்று மர்மமான முறையில்


விடுதிக் கழிவறையில் இறந்து கிடந்ததாகச் சொல்லப்பட்டது. நீண்ட நேரம் பூட்டிக் கிடந்த கழிவறைக் கதவை சில மாணவர்கள் ‘உடைத்துத்’ திறந்த பின்னரே விடுதிக் காப்பாளர் உள்ளிட்டோர் இறந்து கிடந்த விக்னேசின் உடலைப் பார்த்ததாகக் கூறப்பட்டது. விக்னேசின் பெற்றோருக்கும் அவ்வாறே தகவல் கொடுக்கப்பட்டு, பிப்ரவரி 13 ஆம் தேதி நள்ளிரவு புறப்பட்டு 14 ஆம் தேதி அதிகாலை தேனி வந்தடைகின்றனர் விக்னேசின் பெற்றோர். அதிகாலை வந்த விக்னேசின் குடும்பத்தார் க.விலக்கு அரசு மருத்துவமனை, போடிநாயக்கனூர் தாலுகா காவல் நிலையம், கல்லூரி விடுதி என்று அலைக்கழிக்கப்பட்டுள்ளனர்.
கல்லூரி விடுதிக்கு அழைத்துச் செல்வதற்கு முன்னர் தாலுகா காவல் நிலைய காவலர்கள், விக்னேசு வலிப்பு வந்து இறந்ததாக பெற்றோரிடம் கூறியுள்ளார்கள். விக்னேசு இறந்து கிடந்த இடமாகக் கூறப்படும் விடுதிக் கழிவறையில் கொட்டிக் கிடந்த குருதி வெள்ளத்தைப் பார்த்த பெற்றோருக்கு பேரதிர்ச்சி. காவல்துறை மீது ஐயம்கொண்ட பெற்றோர் கேள்விகள் கேட்கத் தொடங்கிவிட்டனர். எறும்பு கடித்ததால் வந்த இரத்தம் என்றும் கண்கள் முழுக்க எறும்புகள் என்றும் காவலர்கள் சமாளிப்பதை அப்பட்டமாக கானொளி வாயிலாக நாமே அறிய முடிகிறது. கதறி அழுத பெற்றோர் கண்ணீரோடு அவ்விடத்திலேயே காவல்துறை மீதான நம்பிக்கையையும் துடைத்துவிட்டனர்.
அன்று (14.02.25) மதியம் க.விலக்கு மருத்துவமனைப் பிணவறை முன்பு அமர்ந்திருந்த விக்னேசின் பெற்றோரை நாம் சந்தித்த போது நேரம் மதியம் 12.30. அதுவரை விக்னேசின் உடலைக் கூட பெற்றோர் பார்க்கவில்லை. தகவல் கேட்டறிந்தோம். உடலைப் பார்த்தோம். நமக்கும் ஐயம் தொற்றிக்கொண்டது. காணொளியில் காவலர் கூறுவது போல கண்களில் எறும்பு கடித்திருக்க துளியும் வாய்ப்பில்லை. கண்கள் திறந்த நிலையில் நல்லபடியாகத் தான் இருந்தன. காதுகளில் குருதியும், காது மடல்களில் பற்தடங்கள் போன்ற காயங்களும் இருந்தன. கழுத்தில் சிராய்ப்புக் காயங்கள் இருந்தன. காவல்துறையின் கருத்துகளை ஐயப்படாமல் எப்படி இருக்க முடியும்?
என்ன நடந்தது, எப்படி நடந்தது, என்பதை விசாரணை மற்றும் ஆய்வுகள் மூலம் உறுதிசெய்யும் முன்னரே ஒரு பக்கம் காவல்துறையினர் வலிப்பு என்றும் மாரடைப்பு என்றும் கூறுகின்றனர். விக்னேசு தேர்வுகளில் தேர்ச்சி ஆகாமல் நிறைய பாடங்கள் நிலுவையில் வைத்துள்ளதாகவும், அதனால் மனமுடைந்து தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கல்லுரி முதல்வர் கருத்து முரணாக இருக்கும் போது குடும்பத்தினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
விக்னேசு கொலை செய்யபட்டிருக்கலாம் என்று போடி தாலுகா காவல் நிலையத்திலேயே பெற்றோர் தரப்பிலிருந்து புகார் கொடுக்கபட்டிருந்தது. இருந்த போதிலும் இன்னொரு புகார் மனுவையும் விரிவாக எழுதி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பெற்றோர் சார்பாகக் கொடுத்தோம். மனுவில் நம்மிடம் இருத்த தரவுகளைக் குறிப்பிட்டு, விக்னேசின் மரணம் கொலையாக இருக்கலாம் என்றும் பணியில் இருந்த விடுதிக் காப்பாளர் மற்றும் கல்லூரி நிர்வாகத்தை விசாரணை செய்யவும் கேட்டிருந்தோம். பிரேத விசாரணை அறிக்கை (Inquest Report) கொடுக்க வேண்டும், உடற்கூராய்வு காணொளிப் பதிவு செய்து தரப்பட வேண்டும், முதற்கட்ட அறிக்கை (Preliminary Report) கூராய்வு முடிந்த உடனே கொடுக்க வேண்டும் ஆகியவற்றை கோரிக்கைகளாக வைத்து உடற்கூராய்வு செய்யக் கேட்டோம்.
14.02.25 அன்று மாலை மேற்கண்ட கோரிக்கைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் ஏற்றுக்கொள்வதாக, காவல் கண்காணிப்பு சிறப்பு ஆய்வாளர் சரவணன் நம்மிடம் உறுதி செய்தார். அப்படியென்றால் உடனே உடற்கூராய்வைத் தொடங்குங்கள் என்றே சொல்லிவிட்டோம். மாலை நேரம் ஆகிவிட்டது நாளை காலை உடற்கூராய்வு செய்துகொள்ளலாம் என்று SB ஆய்வாளர் சரவணன் கூறியதாகவும்
மறுநாள் (15.02.25) காலை உடற்கூராய்வு நடந்துவிடும் என்ற நம்பிக்கையில் தான் அனைவரும் க.விலக்கு மருத்துவமனை பிணவறை முன்பு இறந்த மாணவனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கூடியிருந்தார்கள். ஆனால் அங்கு வந்த போடி வட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர், சுனில் பெற்றோரிடமும் உறவினர்களிடமும் மக்கள் இயக்கதவர்களிடமும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதாக மகனை இழந்து, மகனின் உடல் பிணவறையில் கிடக்க, வெளியில் தவித்துக்கொண்டு நிற்கும் மக்களிடம் ‘விக்னேசு தற்கொலைதான் செய்துகொண்டான்’ ‘எங்களுக்கு எல்லாம் தெரிந்துவிட்டது’ என்று அவசரகதியில் மக்கள் கூட்டத்தைக் கடந்து சென்றுவிட்டார். மேலும், விக்னேசு இறந்துகிடந்த கழிவறைக் கதவு ‘திறந்து கிடந்தது’ என்ற சுனிலின் தகவல் பழைய தகவலுடன் முரண்பட்டு இருந்தது. அங்கிருந்த சமூக செயற்பாட்டாளர்களை தனித் தனியாகச் சந்தித்த DSP சுனில், ” ant marks on cadaver” என்று இணையத்தில் தேடிக் கிடைத்த படங்களை காட்டிக்கொண்டிருந்தார். அவரது நோக்கம் என்னவாக இருப்பினும், அங்கே அவர் நடந்துகொண்ட விதம் மக்களை அச்சுறுத்தியது, ஐயங்கொள்ளச் செய்தது. ஒரு கட்டத்தில் மக்களைப் பார்த்து, உடற்கூராய்வு செய்யட்டுமா வேண்டாமா? என்று தடாலடியாகக் கேட்டார். இதுவரை யாரையெல்லாம் விசாரித்துள்ளீர்கள்? விடுதிக் காப்பாளர்களை, முதல்வரை, மாணவர்களை விசாரித்தீர்களா என்று மக்கள் கேட்ட போது, எங்களுக்கு சந்தேகம் வந்தால் தான் விசாரிப்போம் என்றும் பதிலளித்தார். கூட்டம் கொந்தளித்தே விட்டது. உங்கள் மீது நம்பிக்கை இல்லை என்று கூறிய அடுத்த நொடியே “சரி போ..” எனும் தொனியில் அவ்விடத்தை விட்டுச் சென்றுவிட்டார் காவல் துணைக் கண்காணிப்பாளர் சுனில். விக்னேசின் வழக்கை (CB-CID) தமிழ்நாடு குற்றப்பிரிவு – குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்ற வேண்டும் எனும் இடத்திற்குச் சென்றுவிட்டது .
மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து இதற்காக மனுவைக் கொடுக்க தேனி மாவட்டத்திற்கான புதிய ஆட்சியராக ரஞ்சித் சிங் என்பவர் பொறுப்பேற்று ஒரு வாரம் கூட ஆகவில்லை. ஆட்சியர் ரஞ்சித் சிங் அலுவலகத்தில் இல்லாததால், ஆட்சியருக்கான பொதுப் பிரிவு நேர்முக உதவியாளர் முத்துமாதவன் மற்றும் சார்பு ஆட்சியர் ரசத் பீடன். பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் இல்லை. விக்னேசின் பெற்றோர் நம்பிக்கை இழந்து, பெற்ற மகனின் உடலை பிணவறையில் கிடத்தியபடி, தணிக்க முடியா வேதனையுடன் திருநெல்வேலிக்கே திரும்பிவிட்டனர்.
17.02.25 அன்று தேனி மாவட்ட ஆட்சியர் முன்பும், நெல்லையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டக் கோரிக்கைகளாவன 1) தற்கொலை என்று வதந்தி பரப்பும் கல்லூரி முதல்வர் மற்றும் விடுதி காப்பாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையிலடை! 2) விசாரணைக்கு முன்னரே வதந்திகளை முடிவுகளாக அறிவிக்கும் விசாரணை அதிகாரி காவல் ஆய்வாளர் உலகநாதன் மற்றும் போடி சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் சுனில் ஆகியோர் மீதும் சட்ட நடவடிக்கை எடு! 3) வழக்கு விசாரணையை (CB-CID) தமிழ்நாடு குற்றப்பிரிவு – குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றிடு! 4) விக்னேசின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட நடத்திய ஆர்ப்பாட்டத்தில்
பேச்சு வரத்தை நடந்தது. விசாரணை அதிகாரியை மாற்றுவதாகவும், ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளரை விசாரணை அதிகாரியாக நியமிப்பதாகவும் கூறினார்கள். ஆனால் நம் கோரிக்கைகளில் மாற்றம் இல்லை. இதுவரை அரசு நிர்வாகம் ஏற்காத நமது முதன்மையான மூன்று கோரிக்கைகளை ஏற்க வேண்டும், அல்லாக்கால் CB-CID விசாரணை தான்! அதென்ன முதன்மையான மூன்று கோரிக்கைகள்? இவற்றை ஏற்காதமையால் தான், CB-CID விசாரணை என்று வந்தோம்.
உடற்கூராய்வுக்கு முன்னர் செய்யப்படும் முதற்கட்ட விசாரணையான Inquest என்று சொல்லப்படும் பிரேத விசாரணை, சந்தேக மரணங்களில் உடல் கிடந்த இடத்திலேயே செய்யப்பட வேண்டும். வருவாய் கோட்டாட்சியர் அல்லது அவருக்கு இணையான ஒரு அதிகாரி இதைச் செய்ய வேண்டும். விசாரணைக்குத் தேவையான முதன்மைத் தடையங்கள் கிடைப்பது நிகழ்விடத்தில் தான். ஆனால் இப்போதெல்லாம் அதிகாரிகள் தங்கள் வசதிக்கு, உடலை பிணவறைக்குக் கொண்டுவந்த பிறகு தான், (Inquest) பிரத விசாரணை செய்கிறார்கள். இதன் காரணமாகவே நமது முதல் கோரிக்கை Inquest report கொடுக்க வேண்டும் என்பது.
தொடக்கம் முதலே வலிப்பு, மாரடைப்பு, தற்கொலை என
போடி அரசினர் பொறியியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் விடுதி காப்பாளர்கள் மாணவர் விக்னேசின் மரணத்திற்குப் பொறுப்பானவர்கள் ஆவர். இவர்கள் விசாரணையைத் திசை திருப்பும் வண்ணம், விக்னேசின் மரணத்தை தற்கொலை என்று வதந்தியும் பரப்பியுள்ளார்கள். எனவே இவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, குற்ற வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்!
விசாரணைக்கு முன்னரே வதந்திகளை முடிவுகளாக அறிவித்த முன்னாள் விசாரணை அதிகாரி காவல் ஆய்வாளர் உலகநாதன் மற்றும் போடி சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் சுனில் ஆகியோர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!
தேனி மாவட்ட காவல்துறை மற்றும் அரசு நிர்வாகம் முற்றாக இந்த வழக்கு விசாரணையில் கடைமையச் செய்யத் தவறி தோற்றுவிட்டன. எனவே “வழக்கு விசாரணையை (CB-CID) தமிழ்நாடு குற்றப்பிரிவு – குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்ற வேண்டும்” !
மாணவர் விக்னேசின் மரணத்திற்கு பொறுப்புக்குள்ளாகும், தமிழக அரசின் போடி பொறியியல் கல்லூரி நிர்வாகமும், உயர்கல்வித் துறையும் பொருள்வகை இழப்பீடாக, விக்னேசின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்!
பெற்ற மகனை, குடும்பத்தில் முதல் பட்டதாரி இளைஞனை பறிகொடுத்துப் போராடிவரும் விக்னேசின் குடும்பத்தினரின் கோரிக்கையான “வழக்கு விசாரணையை (CB-CID) தமிழ்நாடு குற்றப்பிரிவு – குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்ற வேண்டும்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி தேனியில் வருகின்ற 24.02.25 திங்கள் கிழமை ஒரு தொடர் முழக்க ஆர்ப்பாட்டம், பல்வேறு முற்போக்கு சனநாயக கட்சிகள் இயக்கங்கள் சார்பாக நடத்தப்படும்!
விக்னேசின் மரணத்திற்கு நீதிகேட்கும் தொடர் போராட்டங்களை ஒருங்கிணைக்க ஒரு போராட்டக் குழுவும் உருவாக்கப்படும்!
விக்னேசின் மரணம் தொடர்பான விசாரணையை (CB_CID) தமிழ்நாடு குற்றப்பிரிவு – குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்ற வேண்டும் என்ற குடும்பத்தார் கோரிக்கை குறித்து, “என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருகிறது” என்று அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று திருநெல்வேலி மற்றும் தேனி மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களை தேசிய பட்டியல் சாதிகள் ஆணையம் கண்டித்திருப்பது குறிப்பிடத்தக்கது.