காணாமல் போனவர்கள் பற்றி துரித நடவடிக்கை!
திண்டுக்கல் மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் பற்றிய வழக்குகளை விரைந்து முடிக்க முகாம் நடத்தி துரித நடவடிக்கை எடுத்துவரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.
——————–‐——————————————————
23.07.2021 திண்டுக்கல் மாவட்டம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட SSS மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திண்டுக்கல் ஊரக உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.சுகுமார் அவர்கள் தலைமையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் திரு.பாஸ்டின் தினகரன் அவர்கள் திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய பகுதியில் காணாமல் போனவர்கள் பற்றிய வழக்குகளில் மேற்கொண்டு அவரது உறவினர்களை அழைத்து அவர்களிடம் விசாரணை செய்து வழக்குகளை விரைந்து முடிக்க முகாம் நடத்தி துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இது போன்று மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் பொது மக்களிடம் நேரடியாக முகாம் நடத்தி விசாரணை செய்து துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.