காவல் செய்திகள்

காரைக்குடியில் மருத்துவரின் மஜாவால் …அஜால் குஜாலான (பாபா) டிஎஸ்பி….!!!??
மாணவி பாலியல் புகாரில் சிக்கிய போதைமருந்து ஆசாமியை பாது காக்க காப்பானாக இருந்த டி எஸ் பி?? நந்தது என்ன?

காரைக்குடியில்.. மஜாவால் குஜாலான டிஎஸ்பி….!!!??
பாலியல் புகாரில் சிக்கிய டாக்டரை காத்த காப்பானா???*

கடவுளுக்கு இணையாய் பார்க்கப்படுபவர்கள் மருத்துவர்கள். ஏனென்றால் மனிதர்களின் உயிரைக் காப்பாற்றுவதில் அவர்கள் முக்கியப் பங்கை வகிக்கின்றனர். ஆனால் சில மருத்துவர்கள் செய்யும் சில மட்டமான செயல்களால் ஒட்டுமொத்த மருத்துவத் துறையின் பெயரே சீரழிகிறது.

தமிழக சட்டம் ஒழுங்கு காக்கும், நேர்மையான காவல்துறை உயர் அதிகாரிகள் மூலம் தமிழக காவல்துறையில் பல நல்ல கருத்துக்களை பொதுமக்களிடம் கொண்டு சென்று நற்பெயர் பெற்று வரும் தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு , கடந்த சில தினங்களுக்கு முன் ஒர் அறிக்கையில்,பெண் குழந்தைகள் மீது பாலியல் தொந்தரவு ,பிரச்சனைகளையும் ஆன்லைன் மூலம் காவல்துறைக்கு புகார் அளிக்கலாம் என்றும், அதன் மீது துரிதமான நடவடிக்கை எடுக்கப்படும், என்று தமிழக காவல்துறையை நவீன படுத்தும் விதமாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருபவரை,பொதுமக்கள் மட்டுமின்றி, சமூக ஆர்வலர்களும் டிஜிபி சைலேந்திரபாபுவை பாராட்டிவருகின்றனர் என்பதை யாராலும் மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது. இதுதான் நிதர்சனம்.

தற்போது சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மாணவி ஒருவர் ஆன்லைனில் பாலியல் புகார் கொடுத்த சம்பவம் தான் காவல்துறையை உலுக்கியுள்ளது! தந்தை வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் அம்மா தம்பி மற்றும் தங்கையுடன் மாணவி காரைக்குடியில் வசித்து வருகிறார் இந்நிலையில் மோகன்குமார் உடன் மாணவியின் அம்மாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது இதன் காரணமாக மோகன்குமார் அடிக்கடி மாணவியின் அம்மாவுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி மாணவியின் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம் என கூறப்படுகிறது அப்போது பல சமயங்களில் மாணவியிடம் மோகன்குமார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தாகவும் அதை வெளியே சொன்னால் விபரீதங்களை சந்திக்க நேரிடும் என மிரட்டியதாகவும் தெரிகிறது ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த மாணவி ஆன்லைனில் காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார்.

மருத்துவர் மோகன் குமார்
எலும்பு முறிவு மருத்துவமனை
காரைக்குடி
வினோஜி பாபா டிஎஸ்பி
காரைக்குடி


பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆன்லைன் மூலம் புகார்கள் கொடுத்து வருவதாக நாம் அறியும் முன், சமீபத்தில் காரைக்குடியில் வசிக்கும் பள்ளியில் படிக்கும் மாணவி தன்னை மருத்துவர் மோகன் குமார் பாலியலுக்கு ஈடுபடுமாறு வற்புறுத்தியும் எனது அம்மாவை போதை மருந்து செலுத்தி பாலியல் செய்ததுபோல் என்னையும் அது போல் பாலியல் தொந்தரவு செய்து வருவதாக டாக்டர் மீது மாணவி ஆன்லைன் மூலம் கொடுத்த புகார் தான் தற்போது தமிழகம் முழுவதும் மட்டுமல்ல உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. புகார் கொடுத்த மாணவியையும் அவரது தந்தையையும் , குடும்பத்தினரையும், குண்டர்களை வைத்து புகாரை வாபஸ் வாங்க சொல்லி மறைமுகமாகவும் போனிலும், மருத்துவர் மிரட்டுவதாக அது உண்மையா என்று அறியவும், புகார் பற்றியை நடவடிக்கை என்ன என்பதை தெரிய காரைக்குடி டிஎஸ்பி வினோஜியிடம் தொடர்பு கொண்டால் அவரின் பதில் என்னவோ நான் தேர்தலில் ரொம்ப பிசி என்ற ஒரே வரியில் தன்னுடைய பதிலை முடித்துக்கொண்டார்.
புகாருக்குள்ளான டாக்டரை பற்றி காரைக்குடி வட்டாரத்திலுள்ள பொதுமக்களிடம் விசாரித்ததில் டாக்டர் மோகன் குமார் காவல்துறை பெரிய பந்தா மனிதன் என்றும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஊர் பெரிய மனிதர்களுடன் நட்பு பலம் இருக்கு,அரசியல் செல்வாக்கு படைத்தவர், யாரையும் கவர்ந்து விடும் திறமையானவர் என்றார்கள், இவரு பார்க்கும் வைத்தியம் பற்றி கேட்டதில் சாதாரண மக்கள் இவரிடம் வருவது குறைவு, கொஞ்சம் கூட கவலை படாத டாக்டர் என்றனர், சரி பாலியல் தொந்தரவு புகார் பற்றி விசாரிக்கும் காவல்துறை அதிகாரியான டிஎஸ்பி வினோஜியிடம்பேச மீண்டும் முற்பட்டபோது முடியவில்லை,மற்ற போலீசாரிடம் கேட்ட போது எங்களை பற்றி ஏதும் எழுதி விடாதீங்க என்றனர், காரைக்குடிக்கு வந்ததில் இருந்தே பெரிய மனிதர்கள் உபசரிப்பில் குதூகலமாக இருக்கார் டிஎஸ்பி
ஆனால் ஆன்லைன் புகாரில், அய்யா காரைக்குடி டிஎஸ்பி வினோஜிக்கு டாக்டரிடம் இருந்து கொட்டுது பணம், இந்த டிஎஸ்பி வினோஜிக்கு செல்லும் இடமெல்லாம் கலெக்சன்,கரப்சன் தான் ஆள் பார்க்க முகத்தை அப்பாவியாக வைத்துக்கொள்ளும் டிஎஸ்பி வினோஜியை பற்றி சற்று பின் நோக்கி இதற்கு முன் யார்உதவியுடன் இருந்தார்.அவர் பணி செய்த காவல் நிலையங்களில் நடந்த சம்பவங்களைப் பற்றி பார்ப்போம், அட கடவுளே என்றது மனசு, , 2016 கடைசி வரை, தேனி பெரியகுளம் வடக்கு காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டர், ஓபிஎஸ் தம்பி O. ராஜா தயவால் இருந்த காவல் ஆயவாளர் வினோஜி தேனி மாவட்டத்திலேயே டிஎஸ்பி பதவி உயர்வு பெற்று பணி செய்து வந்தார். 2017 ல் அதிமுக ஆட்சியில் முதல்வர் மாற்றம் ,அப்போது தேனி பெரியகுளம் டிஎஸ்பி ஓபிஎஸ்,மெளன போராட்டம் நடத்தினார்,இதனால் அதிமுக கட்சியில் இரண்டு பிரிவாக (OPS&EPS) பிரிந்து தங்களது எதிர்ப்புகளை சுவரொட்டிகள் மூலம்தெரிவித்து வந்தனர், அதன் பின்னர் அதிமுக கட்சியில் பேச்சுவார்த்தை நடத்தி ஓபிஎஸ் துணை முதல்வர் ஆனார்,இதுல பெரியகுளம் டிஎஸ்பியாக இருந்த வினோஜிக்கு வெளியில் இருந்து ஒரு அசைமெண்டு வருது, அதோட பெரிய அளவில் பணம் கைக்கு மாறுகிறதுது, அதுக்கு பிறகு டிஎஸ்பி வினோஜியோட செயல்பாடுகளும் வாங்கிய பணத்திற்கு ஓபிஎஸ் மாறுது, வாங்கின பணத்திற்கு, ஓபிஎஸ் மற்றும், மதற்போது அதிமுக எம்பியான ஓபி.ரவீந்திரநாத் மீதும் வழக்கு பதிவு செய்ய சொல்லி தகவல் வர, காத்து இருந்து திட்டம் போட்டார்,, பிளக்ஸ் பேனர் வைக்கும் பிரச்சனையில் ஓபிஎஸ் (எம்பி ரவீந்திரநாத்) மகனை தன் துப்பாக்கியை காட்டி சுட்டுக்கொன்று விடுவேன் என்று மிரட்ட அவரு மிரள, அன்று இரவே காத்திருப்பு பட்டியலில் வைக்கபட்டார்,இதில் பெரிய ஹிரோவா மாறிட்டார், அதுமட்டுமா ஓபிஎஸ் மீது கொலை பழி போட பத்திரிக்கையாளரை கொல்ல முயன்றவரும் டிஎஸ்பி வினோஜி தான்,அதுல மாநில மனித உரிமை ஆணையத்தில டிஎஸ்பி மீது புகார் மனு பென்டிங் இருக்கு, பெரியகுளத்தில சாதி மோதலை உருவாக்க காரணமாக இருந்தவரும் இந்த டிஎஸ்பி வினோஜி தான், அப்ப தேனி மாவட்ட எஸ்பி யாக இருந்த வீ.பாஸ்கரனுடன் யார் சீனியர் என்று வார்த்தை மோதல் ஏற்பட்டது, ஏன்னா தான் நினைப்பதை சத்தம் இல்லாமல் செய்து முடிப்பதில் கெட்டிக்காரர் எல்லாத்துக்கும் பணம், எதுக்கும் டீல் பேசாமல் ஸ்கெச் போடுவது இல்லை, அந்த அளவுக்கு வேலையில் ஷார்ப், இதுமட்டுமா, திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலக்குண்டு பெண் கஞ்சா வியாபாரிக்கு, சகலமும் இவரே அதே போல பழனியில் பணியில் இருந்த போது சொத்துபறிப்புக்காக கொலை முயற்சி வழக்கு உயர் நீதிமன்றத்தில் இவரு மீது நிலுவையில் இருக்கு , ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி இன்ஸ்பெக்டர் இருந்தப்ப ராமநாதபுரம் முக்கிய திமுக பிரமுகர் மகனுடன் சேர்ந்து கட்டபஞ்சாயத்து மற்றும் முயல் தீவில் கண்றாவியா குத்தாட்டாம் போட்டது, இப்படி நிறைய இருக்கு இந்த டிஎஸ்பி மேல அத்துனையும் தெரியும் காவல்துறை தலைமைக்கு என்ன செய்ய முடியும், இவரு உறவினர் தான் போலீஸ் உயர் அதிகாரியாம், அதனால கண்டுகொள்ளுவது இல்லையாம் மற்ற அதிகாரிகள், என்ற அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.

பழம் நழுவி பாலில் விழுவது போல டிஎஸ்பி வினோஜிக்கு பணமா வந்து சேருது என்கிறார்கள் போலீஸ் துறை வட்டாரங்கள் … காரைக்குடி டாக்டர் மீது கொடுத்த பாலியல் புகாரை, நேர்மையுடன் விசாரணை செய்ய நேர்மையான காவல்துறை அதிகாரியை நியமித்து காவல்துறைக்கும், ஆட்சிக்கும், நற் பெயரை களங்கப் படுத்த நினைக்கும் காவல்துறையில் உள்ள ஒரு சில கரும்புள்ளிகளை கண்டுபிடித்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.

நல்லது நடந்தால் சரி…விரைவில்…தொடர்ச்சி ..

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button