மாவட்டக் கல்வித் துறை

குடற்புழு நீக்க மாத்திரை சாப்பிட்டதால் பேராவூரணி பள்ளத்தூர் பள்ளி மாணவி உயிரிழந்த சோக சம்பவம்! மூன்று மாணவிகள் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதி!பெற்றோர்கள் உறவினர்கள் பொதுமக்கள் சாலை மறியல்!

தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு, (10.02.2025) பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில்

மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.ஒரு வயது முதல் 19 வயது வரையுள்ள சிறுவர், சிறுமியர்களுக்கு குடற்புழுக்களால் ஏற்படும் இரத்த சோகை, உடல் சோர்வு, மனச்சோர்வு, மூளை வளர்ச்சி குன்றுதல் போன்ற பாதிப்பு ஏற்படாமல் குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு, அனைத்துக் குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை இன்று வழங்கப்பட்டது.தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதி பள்ளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுகாதாரத்துறை மூலம் இன்று 10-02-25 மதியம் 2 மணி அளவில் வழங்கப்பட்ட மாத்திரையை சாப்பிட்ட 7 வகுப்பு பயின்ற சொக்கநாதபுரம் கொம்பு காரன் ஓடையை சேர்ந்த கண்ணன் மகள் கவி பாலா என்ற மாணவி உயிரிழந்துள்ளார்.

மேலும் மூன்று குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்..பள்ளி மாணவி உயிரிழந்த சோக சம்பவத்தால்

மாணவி பெற்றோர் மற்றும் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது சம்பந்தமாக சேதுவா சத்திரம் காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பள்ளி மாணவி அரசு மருத்துவமனையில் மருத்துவப் பிரோத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதால் அந்த முடிவு வந்த பின்பு தான் i8 உயிரிழந்த பள்ளி மாணவி குடற்புழு நீக்க மாத்திரை சாப்பிட்டதால் இறந்தாரா இல்லை வேறு ஏதாவது ஃபுட் பாய்சன் ஏற்பட்டு உயிரிழந்தாரா என்ன காரணம் என உண்மை தெரியவரும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது! கடந்த 2022 ஆம் ஆண்டு இதேபோல் .

திருச்சி மாவட்டம் முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடல் புழு நீக்க தினத்தை முன்னிட்டு, பள்ளியில் பயின்று வரும் மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை, தண்டலை புத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் நரேந்தர் தலைமையில் வழங்கப்பட்டது. இதில் 9 மாணவிகள் மாத்திரை விழுங்கிய சில நிமிடங்களில் வாந்தி எடுத்ததாக தெரிகிறது. பின்னர் வாந்தி மற்றும் தலைசுற்றல் காரணமாக, அவர்களை முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். என்பது குறிப்பிடத்தக்கது.

Back to top button