கொரோனா, மூன்றாம் அலை வராமல் தடுக்க, தற்போது பல்வேறு நடவடிக்கை!
விருதுநகர்மாவட்டம்
கொரோனா மூன்றாம் அலையை தவிர்க்கும் நோக்கில் கொரோனாவிழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுவதையொட்டி,கொரோனாவிழிப்புணர்வு நிகழ்ச்சிகளை
மாவட்டஆட்சித்தலைவர்திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப.,அவர்கள் துவக்கிவைத்தார்.
விருதுநகர் தேசபந்து மைதானத்தில் இன்று (01.08.2021) கொரோனா மூன்றாம் அலையை தவிர்க்கும் நோக்கில் மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுவதையொட்டி,பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, கொரோனா விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி,கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர்மாவட்டஆட்சியர் பேசியபோது
முதலமைச்சர் வழிகாட்டுதலில், தமிழக அரசு, கொரோனா, மூன்றாம் அலை வராமல் தடுக்க, தற்போது பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது.
அதன் ஒரு பகுதியாக கொரோனா பெருந்தொற்று எண்ணிக்கை மீண்டும் உயராவண்ணம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைஏற்பாடு செய்துள்ளது. அதன் தொடக்கமாக முதலமைச்சர் கொரோனா விழிப்புணர்வு வாரத்தை அனுசரிக்கும் விதமாக 31-07-2021 அன்று கொரோனா விழிப்புணர்வுத் தொடர் பிரச்சாரத் துவக்க விழாவினை துவக்கி வைத்தார்கள்.
அதன்படி,விருதுநகர் மாவட்டத்தில் 01.08.2021 முதல் 07.08.2021 வரை கொரோனா விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்பட்டு, மாவட்டத்தில் தினந்தோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பல்வேறு அரசு துறைகள் மூலம் ஒருங்கிணைந்து நடத்தப்படவுள்ளது. இந்தவிழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் துண்டுப் பிரசுரங்கள்,சிற்றேடுகள்,டிவிட்டர்,முகநூல் மற்றும், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவளை தளங்களிலும் தொலைக்காட்சி நேர்காணலிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,கடைவீதிகள்,
ரயில் நிலையம்,பேருந்துநிலையம் போன்ற பொது இடங்களில் வரும் மக்களிடையே முகக்கவசம் அணியவும்,சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,வியாபாரிகள் நலச்சங்கங்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,தனியார் மருத்துவமனைகள் மற்றும் இந்திய மருத்துவசங்கத்தின் மூலம் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தவும்,மாணவர்களுக்கிடையே குறும்படப் போட்டிகள், ஒவியப்போட்டிகள்,கொரோனா விழிப்புணர்வு வாசகத்தை உருவாக்குதல், எப்.எம் ரேடியோ மூலம் கேள்வி பதில் நிகழ்ச்சிகள்,மீம்ஸ் உருவாக்குதல் போன்றவற்றை நடத்தவும், கிராமிய கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,நோய் எதிர்ப்புத் தன்மை அதிகரிக்க கபசுரகுடிநீர் வழங்கவும், கிராமஅளவில் ஃ வார்டுஅளவில் ஃ மண்டல அளவில் 100சதவிகிதம் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை உறுதிசெய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே,அனைவரும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது,சமூக இடைவெளியினைக் கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு ஃ கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். நோய்த் தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன்,பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை ஃ சிகிச்சை பெற வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பரவுதலை தடுக்க மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பினரும் போதிய ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டுமென மாவட்டஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு உறுதி மொழியினை இந்நிகழ்ச்சயில் கலந்து கொண்ட அனைத்து அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொணடனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுதரத்தை வெளியிட மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து, கொரோனா விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்து, வீதியில் உள்ள கடைகள் மற்றும் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி,
முகக்கவசம் கண்டிப்பாக அணியுமாறும், தடுப்பூசி கணடிப்பாக செலுத்திக்கொள்ளுமாறும், கடைகளில் உள்ள அனைத்து ஊழியர்கள் மற்றும் தங்கள் வீடுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொண்டதை உறுதி செய்து கொள்ளுமாறும் வலியுறுத்தி கேட்டுக்கொண்டு, கொரோனா நோய் தொற்று மூன்றாம் அலையிலிருந்து நமது மாவட்டத்தை பாகாப்பதற்கு அரசினுடைய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த விழிப்புணர்வு பேரணி தேசப்பந்து மைதானத்தில் இருந்து தொடங்கி, முக்கிய கடை வீதிகள் வழியாக தெப்பக்குளம் வழியாக சென்று விருதுநகர் நகராட்சி அலுவலகம் வரை சென்றடைந்தது. இந்த பேரணியில் நகராட்சி மற்றும் வருவாய் துறையை சேர்ந்த 100 மேற்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டு, விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கியும், கொரோனா விழிப்புணர்வு வாசகங்களை கோஷமிட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டவருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சங்கரநாரயணன், துணை இயக்குநர்(சுகாதாரபணிகள்) மரு.பழனிச்சாமி, நகராட்சி ஆணையாளர் செய்யத் முகமது கமால், விருதுநகர் வட்டாட்சியர் செந்தில்வேல், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.