கொலை குற்றவாளிகள் 6 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது!திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல் உட்கோட்டம் வடமதுரை காவல் நிலைய சரகம் பாறைப்பட்டி அம்மா குளக்கரையில் கடந்த 25.09.24-ம் தேதி ஹேமதயாளவர்மன் (33), த.பெ. பாண்டியராஜன், காப்பிளியபட்டி, என்பவரை முன்விரோதம் காரணமாக 1) வினோத் (எ) வினோத்குமார் (28), த.பெ. நடராஜன், குழிப்பட்டி, சீலப்பாடி, திண்டுக்கல் 2) கவி (67) கவியரசு (24), த.பெ. குமார். பொம்மையகவுண்டன்பட்டி, 3). மாரிமுத்து (29), த.பெ. முத்துசாமி, கோடாங்கிநாயக்கன்பட்டி, 4). பகவதி (28), த.பெ. திருப்பதி, சக்கிநாயக்கன்பட்டி, பெரியகோட்டை ஆகியோர்கள் சேர்ந்து வெட்டி கொலை செய்தது தொடர்பாக வடமதுரை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
இதேபோல் கடந்த 26.09.24-ம் தேதி வேடசந்தூர் காவல் உட்கோட்டம் சமத்துவபுரம் அருகே மாசி (44), த.பெ. பழனிச்சாமி, மகாத்மா காந்தி நகர், சேனங் கோட்டை, வேடசந்தூர் என்பவரை 1). மது மோகன் (26), த.பெ. முருகானந்தம், பெருமாள் கவுண்டம்பட்டி, வேடசந்தூர், 2). சரவணக்குமார் (23), த.பெ. சுப்பையா, குருக்கலையம்பட்டி, (எரியோடு )ஆகியோர் சேர்ந்து வெட்டிக்கொலை செய்தது தொடர்பாக வேடசந்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
இவ்விரு கொலை வழக்குகளில் ஈடுபட்ட 6 எதிரிகளின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் பேரில் (16.10.24) திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மேற்கண்ட 6 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நடப்பு 2024-ம் ஆண்டில் இதுவரை குற்றச் செயல்களில் ஈடுபட்ட 102 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது