காவல் செய்திகள்

கொலை ,கொல்லை முயற்சியில் ஈடுபட்டதாக குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்ட நபருக்கு கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் பணி நியமன ஆனை வழங்க 10 லட்சம் லஞ்சம்! பேராவூரணி வட்டாட்சியர் மீது
வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் நடவடிக்கை எடுப்பாரா!?

கொலை ,கொல்லை முயற்சியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நபருக்கு கிராம நிர்வாக அலுவலர் பணி நியமன ஆனை வழங்கியுள்ள பேராவூரணி வட்டாட்சியர்!
வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் நடவடிக்கை எடுப்பாரா!
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகாவுக்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலகங்களில் காலியாக இருந்த கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் பணிக்காக 01/08/2023 அன்று 10 பேர் நியமனம் செய்துள்ளதாக பெயர் பட்டியலை பேராவூரணி வட்டாட்சியர் அதிகாரப்பூர்வ அரசு ஆனை வெளியிட்டுள்ளார்.


இந்த அரசு ஆணையில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருக்கும் (28121070976) சாமிராஜ் மகன் சந்தியாகு என்பர் பெயர் இடம்பெற்றுள்ளது.

கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் பணி வழங்கியுள்ள சந்தியாகு நபர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


17/01/2023 அன்று பேராவூரணி தாலுகா பின்னவாசல் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் கண்மணி நட்ராஜ் அது கணவர் நடராஜ்.இவர் 17/01/2023 இன்று பேராவூரணி காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். அதில் பேராவூரணி காவல் எல்லைக்குட்பட்ட சித்தாதிக்காடு அரசு மதுபான கடை அருகே கருப்பையா மகன் சிரஞ்சீவி
சென்றபோது சந்தியாகு என்பவர் தனது கூட்டாளிகள் ஐந்து பேருடன் சேர்ந்து இரும்பு கம்பி மூங்கில் கம்பு போன்ற ஆயுதங்களை வைத்து கடுமையாக தாக்கிக் கொண்டிருந்ததாகவும் நடராஜன் அவரது மகன் சுபாசு அவர்களை தடுக்க முயற்சித்த போது நடராஜன் மீது இரும்பு கம்பி மூங்கில் கட்டையால் கடுமையாக தாக்கியதால் படுகாயம் அடைந்து பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பேராவூரணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அதன் அடிப்படையில்
பேராவூரணி காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நடராஜ் அவர்களை நேரில் பார்த்து விசாரணை மேற்கொண்டதில்

சந்தியாகு மற்றும் அவரது கூட்டாளி 7 பேர் சேர்ந்து தாக்கியது உறுதியான நிலையில் எட்டு பேர் மீது பேராவூரணி காவல் நிலையத்தில் கொலை மற்றும் கொல்லை முயற்சியில் ஈடுபட்ட காரணத்தால் ஆறு பிரிவுகளில்( 147/148/294/B 324/ 506/2 392 )அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

(குற்ற எண் 26/23 .)
தற்போது வழக்கு விசாரணையில் இருக்கும் போது குற்ற வழக்குகளை மறைத்து குற்ற வழக்கு சான்றிதழ் மறைக்கப்பட்டு அந்த நபருக்கு அரசு வேலைக்கான பணி ஆணை வழங்கப் பட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது .அது மட்டும் இல்லாமல் இந்தப் பணி ஆணை வழங்க பேராவூரணி வட்டாட்சியர் பத்து லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு அதிகார துஷ்பிரயோகம் செய்து தன்னிச்சையாக அரசு பணி ஆணை வழங்கி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது சம்பந்தமாக பேராவூரணி வட்டாட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் கேட்டபோது குற்ற வழக்குகள் இல்லை என்று காவல்துறையிடம் சான்றிதழ் வாங்கிக் கொள்வோம் என்று பேராவூரணி வட்டாட்சியர் கூறியுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
ஆகவே உடனடியாக குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபருக்கான கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் பணி ஆணையை ரத்து செய்ய வேண்டும் அது மட்டும் இல்லாமல் சட்டத்திற்கு விரோதமாக குற்ற வழக்குகளில் ஈடுபட்டதுள்ள அதை மறைத்து அவருக்கு அரசு பணி ஆணை வழங்கிய பேராவூரணி வட்டாட்சியர் மீது

வருவாய்த்துறை
நிர்வாக ஆணையர்

வருவாய்த்துறை அமைச்சர் மற்றும் வருவாய்த்துறை ஆணையர் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் உடனடியாக இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லை என்றால் நீதிமன்றம் செல்ல இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட பின்னவாசல் ஊராட்சி மன்ற தலைவர் கணவர் நடராஜர் தகவல் தெரிவித்துள்ளார்.
வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் ஊழல் முறைகேடுகளில் ஈடுபடுவதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்து வருவதற்கு வருவாய்த் துறையில் உள்ள உயர் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதன் காரணத்தால் தான் இதுபோன்று தொடர்ந்து லஞ்சம் ஊழல் முறைகேடுகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள் என்று சமூக ஆர்வலர் குற்றம் சாட்டுகின்றனர். ஆகவே திமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் உள்ள நற்பெயரை களங்கப்படுத்த நினைக்கும் கரும்புள்ளிகளை கலை எடுத்தால் மட்டுமே பொதுமக்களிடம் இருக்கும் அச்சத்தை போக்க முடியும் என்பதுதான் நிதர்சனம் பொறுத்திருந்து பார்ப்போம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையை!Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button