Uncategorizedகாவல் செய்திகள்

சட்டத்தை மீறி வாட்டர் பாட்டிலில் பெட்ரோல் கேட்டு பெட்ரோல் பங்க் ஊழியர்களை மிரட்டும்  புதுக்கோட்டை நகர் மன்ற முன்னாள் திமுக உறுப்பினரின் அதிர்ச்சி வீடியோ!”பாட்டில்க ளில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யக்கூடாது காவல் துறை டிஜிபி போடும் சட்டம் ஏழை எளிய மக்களுக்கு மட்டும் தானா!?நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?

புதுக்கோட்டை 
காந்திநகர் 6 வது வீதியைச் சேர்ந்த புதுக்கோட்டை நகர் மன்ற முன்னாள் திமுக உறுப்பினர் அப்பு காளை என்பவர் புதுக்கோட்டை பேராகுளம் ரிலையன் பெட்ரோல் பங்க் சென்று வாட்டர் பாட்டலில் பெட்ரோல் கேட்டு ஊழியர்களை கொலை மிரட்டல் விட்ட அதிர்ச்சி வீடியோ தற்போது வெளிவந்துள்ளது!

பாட்டலில் பெட்ரோல் உடன் கொலை மிரட்டல் விடும் அப்பு காளை புதுக்கோட்டை நகர மன்ற முன்னாள் திமுக உறுப்பினர்

பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருவதன் எதிரொலியாக

தமிழ்நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் பாட்டில், கேன்களில் பெட்ரோல், டீசல் வழங்குவதற்கு தடை விதித்து காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர் .

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என  தமிழக டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத் தக்கது.



பாட்டில், கேன்களில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்வது நிறுத்தம் செய்யப்படுவதாக தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவித்துள்ளது. 


இந்த நிலையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்தந்த மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மாவட்டங்களில் உள்ள  பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு பெட்ரோல் பங்குகளில் கேன், பாட்டில்களில் பெட்ரோல் வழங்க வேண்டாம் என  சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

மேலும், அவ்வாறு கேன், பாட்டில்களில் பெட்ரோல் வாங்க வரும் நபர்களின் விவரங்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்குமாறு அறிவுறுத்தினர்.
இந்நிலையில், காவல் துறை அறிவுறுத்தலின் படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் பாட்டில், கேன்களில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்வது நிறுத்தம் செய்யப்படுவதாக தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவித்துள்ளது. 

அதன்படி, பெட்ரோல் பங்கில் பெட்ரோல், டீசல் போட வரும் வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல், டீசல் போடப்படும். வாகனங்கள் தவிர உதிரியாக எந்தவொரு கேன்களிலோ, பாட்டில்களிலோ சில்லரையாக பெட்ரோல், டீசல் வழங்கப்பட மாட்டாது என அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால்
புதுக்கோட்டை 
காந்திநகர் 6 வது வீதியைச் சேர்ந்த புதுக்கோட்டை நகர் மன்ற முன்னாள் திமுக உறுப்பினர் அப்புக் காளை என்பவர் புதுக்கோட்டை பேராகுளம் ரிலையன் பெட்ரோல் பங்க் சென்று வாட்டர் பாட்டலில் பெட்ரோல் கேட்டுள்ளார் .ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் வாட்டர் கேன்களில் பெட்ரோல் தரக் கூடாது என்று காவல்துறையில் நோட்டீஸ் ஒட்டி விட்டு சென்றுள்ளனர் .ஆகையால் யாருக்கும் பாட்டிலில் பெட்ரோல் டீசல் தருவதில்லை என்று கூறியுள்ளனர். அதற்கு நான் யார் தெரியுமா பெட்ரோல் பாட்டில் தரவில்லை என்றால் உங்களை என்ன செய்வேன் என்று தெரியுமா என்றும் இந்த பெட்ரோல் பங்க்கே இல்லாமல் ஆக்கி விடுவேன் என்றும் ஊழியர்களை கொலை மிரட்டல் விட்டுள்ளார். இதை அறிந்த ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் மேலாளர் சதீஷ் காவல்துறை அவசர எண் 100 க்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்த சிறிது நேரத்தில் காவல் துறையினர் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்கிற்கு விரைந்து வந்தனர் அப்போது கொலை மிரட்டல் விட்ட அப்புகாளை காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்தார் . அடுத்த பெட்ரோல் பங்கில் எப்படி பாட்டிலில் பெட்ரோல் கொடுக்கிறார்கள் இவர்கள் ஏன் தரக்கூடாதுஎன்றும்  நான் யார் தெரியுமா நான் இன்ஸ்பெக்டர் இடம் பேசவா டிஎஸ்பி இடம் பேசவா எஸ்பி டன் பேசவா என்று காவலர்களிடம் வாக்குவதும் செய்து கொண்டிருந்தார் .அதற்கு காவலர்கள் யாருக்குமே பாட்டில்களில் பெட்ரோல் டீசல் தரக் கூடாது என்று உத்தரவு உள்ளதால் நீங்கள் யாராக இருந்தாலும் டீசல் பெட்ரோல் தர மாட்டார்கள் என்று திமுக நிர்வாகியிடம் கூறியுள்ளனர். அதை கொஞ்சம் கூட செவி கொடுத்து கேட்காத திமுக நிர்வாகி மீண்டும் மீண்டும் கொலை மிரட்டல் விடுவது போல் பெட்ரோல் பங்க் ஊழியர்களை பார்த்து பேசிக்கொண்டிருந்தார் அதன் பின்னர் காவல் துறையினர் இங்கிருந்து செல்லவில்லை என்றால் உங்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டி இருக்கும் என்று அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி உள்ளனர். அதன் பின்பு பெட்ரோல் பங்க் மேலாளர் சதீஷ் காவல் நிலையத்திற்கு சென்று கொலை மிரட்டல் விட்டதாக அப்பு காளை மீது புகார் கொடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது . எது எப்படியோ ஒரு அசம்பாவிதம் மறக்காமல் தடுக்க காவல்துறையினர் எடுத்து வரும் முயற்சியில் இதுவும் ஒன்று. பெட்ரோல் பங்குகளில் பாட்டில்களில் பெட்ரோல் தரக் கூடாது என்று கடுமையான உத்தரவு காவல்துறை டிஜிபி போட்டும் அந்த உத்தரவை மீறி சட்டவிரோதமாக நடந்து கொண்ட புதுக்கோட்டை நகர மன்ற திமுக முன்னாள் உறுப்பினர் அப்பு காளை மீது    பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .அது மட்டும் இன்றி திமுக கட்சிக்கு ஆட்சிக்கும் உள்ள நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில் ஒரு சில ஆளுங்கட்சி நிர்வாகிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றனர் என்பதுதான் நிதர்சனம்.சட்டத்தை மீறி சட்ட விரோத செயல்களில் யார்  செயல்பட்டாலும் அவர்கள் மீது தமிழக முதல்வர் அவர்கள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button