சுகாதாரமற்ற இடத்தில் தரமற்ற மூலப் பொருள்களால் மூலம் தயாரிக்கும் தின்பண்டங்களை சேலம் சங்ககிரி பாலாஜி பேக்கரியில் விற்பனை செய்து வருவதாக அதிர்ச்சி தகவல்!

உணவுப் பாதுகாப்பு மற்றும் தர சட்டம் 2006-ன்படி, தெருவில் கூவி விற்கும் உணவுப் பொருளாக இருந்தாலும், பெரிய உணவகங் களில் விற்கப்படும் உணவாக இருந்தாலும், உணவுப் பொருளை விற்பதற்கான உரிமத்தை உணவுப் பாதுகாப்பு துறையிடம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். அப்படி பெறாமல் விற்பனை செய்வது சட்டப்படி தவறு.. பாக்கெட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தால், காலாவதியாகும் தேதி கட்டாயம் அதில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
உணவின் பெயர், அந்த உணவில் சேர்த்துள்ள மூலப்பொருள்களின் விவரம், இந்த உணவில் உள்ள ஊட்டச்சத்துகளின் விவரங்கள் போன்றவை, அந்த பாக்கெட் உணவுகளில் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். அதுமட்டுமன்றி எம்.ஆர்.பி, உணவுப் பொருளின் எடை பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த பாக்கெட்டில் உள்ள FSSAI எண்ணை ஸ்கேன் செய்தால், அந்த பாக்கெட் எங்கு தயார் செய்தது, யார் சந்தைப்படுத்தியது போன்ற விவரங்கள் இருக்க வேண்டும்.
இத்தனை சட்ட விதிகள் இருந்தாலும்
இதையெல்லாம் காற்றில் பறக்க விட்ட
சேலம் சங்ககிரியில் எடப்பாடி பவானி செல்லும் சாலைகளில் மூன்று இடங்களில் செயல்பட்டு வரும் ஐயங்கார் பாலாஜி பேக்கரியில் விற்பனை செய்யும் உணவுப் பொருட்கள் தரமற்ற நிலையில் இருப்பதாகவும் சுகாதாரமற்ற இடத்தில் உணவுப் பொருள்கள் தயாரிப்பதாகவும் குறிப்பாக, காலாவதியான பொருட்கள், மற்றும் தரமற்ற மூலப்பொருட்கள் உணவு பண்டங்களை தயாரித்து விற்பனை செய்து வருவதாக அதிர்ச்சி வீடியோ வைரல் ஆகி வருகிறது.தகவல் வெளியாகியுள்ளது. இது சம்பந்தமாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்கள் தகவல் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
எது எப்படியோ பணம் கொடுத்து சாப்பிடும் உணவு, தரமானதாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் உண்டு. ஆனால், பல நேரங்களில் நாம் சாப்பிடும் உணவு தரமாக இருப்பதில்லை.
தரமற்ற உணவுப் பொருள்களை விற்பனை செய்வது அதை நாம் வாங்கி சாப்பிடுவதும் இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல பிரச்சனைகளை சந்தித்து வருவது வேதனைக்குரியதாகும்.
ஆகவே பொதுமக்கள் நலன் கருதி சேலம் சங்ககிரி ஐயங்கார் பாலாஜி பேக்கரியில் விற்பனை செய்யும் உணவுப் பொருள்கள் தரமற்ற நிலையில் இருக்கிறதா? மற்றும் பாக்கெட்களில் விற்பனை செய்யும் உணவுப் பொருள்கள் காலாவதியாகி உள்ளதா மூலப் பொருள்களில் கலப்படம் செய்து உணவுப் பொருள்கள் தயாரிக்கப்படுகிறதா !?தயாரிக்கும் இடம் சுகாதாரமான இடத்தில் இருக்கிறதா என்பதை
சேலம் மாவட்ட உனவுப் பாதுகாப்பு அதிகாரி கார்த்திகா
நேரில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
தரமற்ற காலாவதியான உணவுப் பொருள்களை விற்பனை விற்பனை செய்து வருவதை குறித்து, உணவுப் பாதுகாப்புத்துறைக்கு தெரியப்படுத்துவதன் மூலம்
தரமற்ற உணவு தொடர்பாகப் புகார் அளித்தவருக்கு, அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான ரசீது, 24 மணி நேரத்துக்குள் அனுப்பி வைக்கப்படும்.
பேக்கரிகளின் உணவுப் பொருட்கள் தரமற்ற நிலையில் இருப்பதாகவும் சுகாதாரமற்ற இடத்தில் உணவுப் பொருள்கள் தயாரிப்பதாகவும் புகார்கள் வந்தால் குறிப்பாக, காலாவதியான பொருட்கள், சுகாதாரமற்ற சூழலில் தயாரித்தல், மற்றும் தரமற்ற மூலப்பொருட்கள் பயன்படுத்தப்படுவது போன்ற புகார்கள் உள்ளன.
உணவு பாதுகாப்பு துறையினருக்கு இதுகுறித்து புகார்கள் வந்துள்ளன. அவர்கள் பேக்கரிகளை ஆய்வு செய்து, தரமற்ற பொருட்கள் கண்டறியப்பட்டால், அபராதம் மற்றும் உரிமம் ரத்து போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகிறார்கள்.
பேக்கரி உரிமையாளர்கள், உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், தரமான பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பொதுமக்கள் உணவுப் பொருட்கள் தரமற்றதாக இருந்தால், உணவு பாதுகாப்பு துறையினரிடம் புகார் அளிக்கலாம். இதற்காக 94440 42322 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது இணையதளம் மூலம் புகார் அளிக்கலாம்.
புகார் அளிக்க, உணவுப் பொருளின் புகைப்படம், பில் போன்ற ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இணையதளத்தில் நேரடியாக உணவு தொடர்பான குறைகளை, https://foscos.fssai.gov.in என்ற இணையதளம் வாயிலாகப் புகார் அளிக்கலாம். இந்த இணையதளத்தில், இந்திய அளவில் உணவு தொடர்பான புகார்களை அனுப்பலாம். இதன் மூலம் அளிக்கும் புகார்கள், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்துக்குச் சென்றுவிடும். அதன் பிறகு FSSAI-ன் மூலம் அளிக்கப்பட்ட புகார்களுக்குத் தீர்வு காணப்படும்.
மேலும், Food Safety Connects என்ற செல்போன் செயலியின் மூலமாகவும் புகார்களைத் தெரிவிக்கலாம். இந்தச் செயலியில் அனுப்படும் புகார்கள், அந்தந்த மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கே சென்றுவிடும். உணவு தொடர்பான புகார்களை, unavupukar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம்.