சென்னை சூளை மேடு மேத்தா நகர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் இரவு நேரங்களில் தொடர் கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்களை கண்டுபிடிக்காமல் அலட்சியப் போக்கை கடைபிடிக்கும் அமைந்தகரை காவல் ஆய்வாளர் !நடவடிக்கை எடுப்பாரா சென்னை மாநகர காவல் ஆணையர்!?
சென்னை: அண்ணாநகர் காவல் நிலையத்தை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆய்வுமேற்கொண்டார். இதில் காவல் நிலையத்திற்கு வரக்கூடிய புகார்கள் சரியாகக் கவனிக்கிறார்களா, அதேபோன்று உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார்களா என ஆய்வுமேற்கொண்டார்.
சென்னை அமைந்தகரை காவல் எல்லைக்குட்பட்ட சூலை மேடு மேத்தா நகர் , நெல்சன் மாணிக்கம் ரோடு இப்பகுதியில் உள்ள ஆளில்லாத அலுவலகங்கள் மற்றும் கோவில்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொள்ளையர்களின் அட்டூழியம் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றது .
13/06/2022 அதிகாலை 4.00 முதல் 4.30 மணி க்குள் அனுமன் கோவிலில் உள்ள பிரதான வாயில் கதவு உடைக்கப்பட்டு கொள்ளை அடிக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர் கொள்ளையர்கள்.
அதே போல் ஆபீசர்ஸ் காலனி 4வது தெருவில் 4.40 am ரமேஷ் என்பவரின் வீட்டில் உள்ள காவலாளியை அடித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பிடுங்கி சென்றுள்ளனர். மற்றும் அதற்கு அடுத்த பக்கத்து கட்டிடத்தில் உள்ள பத்திரிகை அலுவலகம் (தி கிரேட் இந்தியா நியூஸ் ) உள்ளது . அந்த அலுவலகத்தின் இரும்பு கதவை உடைத்து கொள்ளையடிக்க முயன்று உள்ளனர் . இரும்பு கேட்டை உடைக்க முடியாமல் மற்றொரு அலுவலகத்தை உடைத்து இருக்கின்றனர் , அதுவும் உடைக்க முடியாததால் மற்றும் அதே காம்பவுண்டில் இருக்கும் மற்றொரு அலுவலகத்திலும் கதவை உடைத்து உள்ளே கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த அலுவலகத்தில் இரவு தங்கிய இருந்த அலுவலகத்தின் நிறுவனர் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப் போவதாக கூச்சலிட்டு உள்ளார். அதனால் அங்கிருந்து கொள்ளையர்கள் தப்பித்து விட்டதாக கூறுகின்றனர்.
மேலும் மோகன் என்பவரின் வீட்டிற்குள் நுழைந்த பிறகு , புதிய கட்டுமான தளம் 1வது தெருவில் உள்ள 5 மாடி காவலாளியை தாக்கியதாக தெரிகிறது.
மற்றும் ஆவின் பால் விநியோகம் செய்யும் வாலிபரை தாக்கி மொபைலை பறித்து சென்றுள்ளனர்.
மேலும் அப்பகுதியில் நடந்து செல்பவர்களையும் இரும்புக் கம்பியால் தாக்கி ரகளையில் ஈடுபட்டுள்ளனர் என்று அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே ஒரு வருடத்திற்கு முன் இதே தேதியில் ஆபீசர்ஸ் காலனி 4வது தெருவில் தி கிரேட் இந்தியா நியூஸ் பத்திரிக்கை அலுவலகத்தில் நான்கு லேப்டாப் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் ஆனால் அந்தக் கொலை சம்பந்தமாக அம்சிகரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இன்று வரை கொள்ளையர்கள் யார் என்று கண்டு பிடிக்கவும் இல்லை . கொள்ளையர்களை கண்டுபிடிக்க அம்ஜிகரை காவல் ஆய்வாளர் முயற்சி செய்யவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
லேப்டாப் மற்றும் ரொக்கம் இன்னும் உரிமையாளரிடம் காவல்துறை வழங்காமல் அலைக்கழித்துக் கொண்டே இருக்கின்றது. அமைந்தகரை காவல் ஆய்வாளரிடம் கேட்டதற்கு கொள்ளை நடந்த சம்பவம் பற்றியும் கொள்ளையர்கள் பற்றி விசாரணை மேற்கொள்வதை பற்றியும் மெத்தனப் போக்கை கடைபிடிப்பதோடு அலட்சியமாக பதில் கூறி வருகிறார் என்ற குற்றச்சாட்டை எழுப்புகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு கொள்ளையடித்த கொள்ளையர்களிடம் இருந்து கொள்ளையடித்த பொருள்களை மீட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட லேப்டாப் மற்றும் பணம் சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்கவில்லை என்ற அதிர்ச்சித் தகவலும் வந்துள்ளது.
அமைந்தகரை காவல் நிலையத்தை எல்லைக்குட்பட்ட நெல்சன் மாணிக்கம் ரோடு மேத்தா நகர் பகுதியில் கஞ்சா மற்றும் மது போதைகளில் சட்டவிரோதமான செயல்களில் சில சமூக விரோதிகளால் செயல்பட்டு வருவதால் இப்பகுதியில் மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்கின்றனர்.
பொதுமக்கள் புகார் பற்றி காவல் நிலையத்தில் கேட்டால் எங்கள் காவல் நிலையத்தில் போதுமான காவலர்கள் இல்லாமல் இருப்பதாக தொடர்ந்து ஒரே பதிலை கூறி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கொள்ளையர்களை பற்றி ஏதாவது தகவல் இருக்கிறதா என்று காவல் நிலைய ஆய்வாளர் இடம் கேட்டால் உங்களுக்கு வேண்டுமென்றால் உங்கள் அலுவலகத்திற்கு வாட்ச்மேன் போட்டுக்கொள்ள வேண்டியது தானே என்றும் நகண்காணிப்பு கேமரா ஏன் பொருத்தமில்லை என்றும் பொது மக்களையே காவல்துறை திரும்ப கேள்வி கேள்வி கேட்கும் நிலையில்தான் அமைந்தகரை காவல் நிலையம் உள்ளது என்று குற்றம் சாட்டுகின்றனர்.
சைலேந்திரபாபு அவர்கள் தமிழக டிஜிபியாக பொறுப்பேற்றவுடன் சட்டம் ஒழுங்கு சீராகும் என்று மக்கள் நினைத்துக் கொண்டிருக்கையில் மீண்டும் அதே சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. அதில் முக்கியமாக சென்னையில் தொடர்ந்து பல இடங்களில் கொள்ளைகள் நடந்து கொண்டே இருப்பதைத் தான் தற்போது நாம் காண முடிகிறது. இதற்கு காரணம் தொடர் கொலைகள் நடக்கும் பகுதிகளில் சென்னை மாநகரக் காவல் ஆணையர் அந்தந்த காவல் நிலையங்களில் உள்ள காவல் ஆய்வாளரிடம் அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் அலுவலகங்களில் பணம் வசூல் செய்து கண்காணிப்பு கேமரா வைத்து கண்காணிக்க வாய்மொழி உத்தரவு போட்டு இருப்பதாகவும தகவல் வந்துள்ளது. ஆனால் பெரும்பாலான கடைகள் மற்றும் அலுவலகங்களில் உள்ளவர்கள் கடந்த இரண்டு வருடமாக எந்த தொழிலும் இல்லாமல் மிகவும் வறுமையில் உள்ளதாகவும் ஆகவே கண்காணிப்பு கேமரா பொருத்த பணம் கொடுக்க மறுத்து விட்டதாகவும் தகவல் வந்துள்ளது .ஆகவே பல பகுதிகளில் உள்ள காவல் நிலைய ஆய்வாளர்கள் கண்காணிப்பு கேமரா பொருத்த வில்லை என்றும் தகவல் வந்துள்ளது.
சென்னையில் பொதுமக்கள் வீட்டை பூட்டி நிம்மதியாக வெளியே சென்றுவர வேண்டும் என்றால் சென்னை மாநகர காவல் ஆணையர் கடுமையான உத்தரவை காவல் நிலைய ஆய்வாளர்களுக்கு போட வேண்டும் அப்படி போட்டால் மட்டுமே தொடர் கொள்ளை நடப்பதை தடுக்க முடியும் என்று சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.