லஞ்ச ஒழிப்புத் துறை

களப்பணி ஆய்வு மேற்கொள்ள செல்லாமல் இடைத்தரகர்களை வைத்து கல்லாக்கட்டும்
தேவ கோட்டை பொறுப்பு பெண் சார்பதிவாளர்! சாட்டையை  லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளின் நடவடிக்கை எப்போது!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள
சார் பதிவாளர் அலுவலகங்களில் போலியான மூல ஆவணங்களை வைத்து உண்மையான ஆவணங்கள் போலவே உருவாக்கி முறைகேடாக பதிவு செய்யப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வருவது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற
போலி பத்திரங்கள் நடமாட்டத்தை குறைக்கவும், லஞ்ச நடமாட்டத்தை குறைக்கவும் தமிழக அரசு நிறைய முயற்சிகளையும் முன்னெடுத்தும் வருகிறது. எனினும், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது.. இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கைதாகியும் வருகிறார்கள்.
லஞ்சம் ஊழல் முறைகேடு போன்ற மோசடிகளை முற்றிலும் ஒழிக்கும் முயற்சியில் தமிழக பதிவுத்துறை தொடர்ந்து ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.

சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்சம் வாங்கும்
நோக்கத்திற்காக, பொதுமக்களை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் வரவழைப்பதில் தான், சார் – பதிவாளர்களும், ஊழியர்களும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல்
பட்டா மாறுதலுக்காக வருவாய்த்துறையை பதிவுத்துறையுடன் இணைத்து மக்களை அலைக்கழிக்கப்படுகிறார்கள்.
இதுபோன்ற விஷயங்களை கருத்தில் வைத்து, மேலதிகாரிகள் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
2018ல், ‘ஸ்டார் 2.0 சாப்ட்வேர்’ அடிப்படையில் பத்திரப்பதிவு தொடர்பான பணிகள், ‘ஆன்லைன்’ முறைக்கு மாற்றப்பட்டன. இதன்படி, சொத்து வாங்குவோர், அதுகுறித்த தகவல்களை, பதிவுத்துறை இணையதளத்தில் முன்கூட்டியே உள்ளீடு செய்யலாம். அதன் அடிப்படை யில், அந்த பத்திரம் பதிவுக்கு ஏற்றதா, இல்லையா என்பதை, சார் – பதிவாளர்கள் முடிவு செய்வர். இதில் ஏற்கப்படும் பத்திரங்களுக்கு மட்டுமே, பதிவுக்கான நேரம் ஒதுக்கி, ‘டோக்கன்’ வழங்கப்படும். இதையடுத்து விற்பவர், வாங்குபவர், சாட்சிகள் நேரில் சென்று, பத்திரப்பதிவு பணிகளை முடிக்கலாம். இதனால், மக்கள் சார் – பதிவாளர் அலுவலகத்தில் செலவிடும் நேரம் வெகுவாக குறைகிறது.
சார் – பதிவாளர் அலுவலகத்துக்கு செல்லாமல், பத்திரப்பதிவு மேற்கொள்ளும் வகையில், ‘ஸ்டார் 3.0’ மென்பொருளில், புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டது
குறிப்பாக, சொத்து பரிமாற்றத்துக்கான பத்திரங்களை, பொதுமக்கள் தாங்களாகவே தயாரிக்கும் வசதியும் இதில் ஏற்படுத்தப்படும். தற்போது, பத்திரப்பதிவு இணையதளத்தை, கணினிகள் வாயிலாக மட்டுமே பயன்படுத்த முடிகிறது. இதை எளிமையாக, மொபைல் போன் வாயிலாகவும் பயன்படுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டு பொதுமக்கள் சுலபமாக தங்கள் சொத்துக்களை கணினி மூலம் பத்திரப்பதிவு
மேற்கொண்டு
சார் – பதிவாளர் அலுவலகங்களில், சொத்து விற்பனைக்கான பத்திரங்களை பதிவு செய்யும் போது மோசடியை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் பட்டு வருகின்றன.

போலி ஆவணம், ஆள்மாறாட்டம் வாயிலாக மோசடி நடப்பதை தடுக்க, பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன
ஆனால்
பத்திரப் பதிவுத்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகள் மற்றும் விதிகளை காற்றில் பறக்க விட்டு தேவகோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் ஊழல் முறைகேடு கொடி கட்டி பறப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

சிவகங்கை மாவட்டம்
தேவகோட்டை சார்பதிவாளர் அலுவலகம் (Sub-Registrar Office) சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடி பதிவு மாவட்டத்தின் கீழ் இயங்கும் ஒரு அலுவலகமாகும். இது தேவகோட்டை ராம் நகரில் அமைந்துள்ளது.

தேவகோட்டை பொறுப்பு சார் பதிவாளர் அமுதா

தேவகோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் அமுதா என்கின்ற அலுவலகப் பணியில் பணியாற்றி வருகிறார்.
இவர் தற்போது சார் பதிவாளர் நாற்காலி காலியாக இருப்பதால் அந்த இடத்திற்கு தற்காலிக பொறுப்பு சார்பதிவாளராக கடந்த சில வாரங்களாக பத்திரப்பதிவு செய்து வருகிறார்.
தேவகோட்டை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வரும் பத்திரப்பதிவுகள் அனைத்தும் மூல ஆவணங்கள் இல்லாமல் போலி ஆவணங்கள் மூலம் திறப்பதிவு நடைபெறுவதாகவும்
அது மட்டுமில்லாமல் குறிப்பாக பத்திரப்பதிவு செய்யப்படும் இடங்களுக்கு கள ஆய்வுக்கு செல்லாமல் இடைத்தரகர்கள் மூலம் லஞ்சம் வாங்கிக் கொண்டு பத்திரப்பதிவு செய்து கொடுத்து வருவதாகவும் , தேவகோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடான பத்திரப்பதிவுகள்
அரசுக்கு
பல லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது என சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி தகவலை கூறுகின்றனர்.

பழைய அசல் ஆவணம் இல்லாத சொத்துக்களை பதிவு செய்ய கூடாது .
விதிவிலக்கான பத்திரங்கள் தவிர்த்து மற்ற அனைத்துக்கும் பழைய பத்திரங்களை சரி பார்ப்பது கட்டாயம்.
22ஏ மற்றும் பி ஆகிய பிரிவுகளுக்கு முரணாக பத்திர பதிவு செய்தால், பதிவு சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலருக்கு மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என மத்திய பதிவு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது
பழைய பத்திரங்களை சரி பார்ப்பதில் தவறான அணுகுமுறையை பின்பற்றுவதாகவும், பழைய பத்திரங்களை சரி பார்க்காமல் லஞ்சம் வாங்கிக்கொண்டு கிரைய ஆவணங்களை தேவகோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது.
தேவகோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் தற்போது பொறுப்பு சார் பதிவாளர்
பணி நிரந்தரம் இல்லை என்பதால் தன்னால் முடிந்த அளவிற்கு லஞ்சம் வாங்கிக் கொண்டு முறைகேடாக பத்திரப்பதிவு செய்து கொடுத்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எது எப்படியோ தேவகோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் ஊழல் முறைகேடு நடப்பதாக வந்துள்ள குற்றச்சாட்டின் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி லஞ்சம் ஊழல் முறைகேடு நடந்திருந்தால் சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல்
பத்திரங்கள் போன்ற அரசு ஆவணங்களைப் பதிவுசெய்வதற்கு சார் பதிவாளர் அவசியம்.
சார் பதிவாளர் இல்லாததால், மக்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியாத நிலை ஏற்படும், இது தாமதத்தையும், சிரமத்தையும் உண்டாக்கும்.

தேவகோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளர் இல்லாததால், அந்தப் பணியை மேற்கொள்ள வேறு அதிகாரியை நியமிக்க வேண்டும் அல்லது பணியை வேறு அலுவலகத்தில் மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும். இது பத்திரப்பதிவு போன்ற முக்கியப் பணிகளுக்கு தாமதத்தை ஏற்படுத்தும் என்பதால், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆகையால் சிவகங்கை மாவட்ட பத்திரப்பதிவு துறையின் மாவட்ட அதிகாரி உரிய நடவடிக்கை விசாரணை மேற்கொண்டு முறைகேடான பத்திரப்பதிவு நடைபெற்று வருகிறதா என்பதை கண்டறிந்து நல்ல அனுபவம் உள்ள தகுதி வாய்ந்த சார் பதிவாளரை அமர்த்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Related Articles

Back to top button