மாவட்டச் செய்திகள்

ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் காளைகளை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிக்க கூடாது! தமிழக முதல்வருக்கு கோரிக்கை!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் காளைகளை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் இல்லாமல் வாகனங்கள் செல்லவும் அதுமட்டுமில்லாமல் ஜல்லிக்கட்டு காளைக்கு மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பாலமேடு பகுதி ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பவர்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்!

உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்னும் சில தினங்களில் நடைபெறுவதை முன்னிட்டு அலங்காநல்லூர் பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக தங்களது காளைகளை உரிமையாளர்கள் தயார் படுத்தி வருகின்றனர் வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி பாலமேட்டிலும் 16ஆம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்காக சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு மாடுகளை போட்டிகளுக்கு தயார் படுத்தும் பணிகளை மாட்டின் உரிமையாளர்கள் ஈடுபடுத்தி வருகின்றனர் பாலமேடு பேரூராட்சிக்குட்பட்ட ஜல்லிக்கட்டு பேரவை உறுப்பினரான ராமர் என்ற சேதுராமன் தங்கள் குடும்பத்தின் ஒருவராக நான்கு ஜல்லிக்கட்டு மாடுகளை வளர்த்து வருகிறார் தினசரி இரண்டு கிலோமீட்டர் நடை பயிற்சி நீச்சல் பயிற்சி மண் குத்துதல் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளை அளித்து வரும் இவர் தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் அளித்த ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு மாதம்1000 உதவித்தொகையை வழங்கினால் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றும் ஆன்லைன் டோக்கன் முறைஇல்லாமல் கை டோக்கன் முறையை கொண்டு வந்தால் உள்ளூர் மாடுகள் ஜல்லிக்கட்டில் அதிகம் பங்கேற்க வாய்ப்பு ஏற்படும் என்று கூறியுள்ளார் இது குறித்து ராமர் என்ற சேதுராமன் மற்றும் அவரது மனைவி முத்துலட்சுமி ஆகியோர் கூறுகையில் நாங்கள் மூன்று தலைமுறையாக ஜல்லிக்கட்டு மாடுகளை வளர்த்து வருகிறோம் எங்களிடம் நாட்டு மாடு 4 வளர்க்கிறோம் நான்கு நாடுகளுக்கும் அழகர் மறை அழகர் முனியன் அய்யனார் என்று பெயர் வைத்து நான்கு மாடுகளை ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக வளர்த்து வருகிறோம் கார்த்திகை பிறந்து விட்டாலே உற்சாகமாகி விடுவோம் எங்கள் மாடுகளை ஜல்லிக்கட்டுக்காக தயார்படுத்தும் பணிகளில் ஈடுபடுவோம் அதற்காக தினசரி 2 கிலோ மீட்டர் நடை பயிற்சி நீச்சல் பயிற்சி மண் குத்துதல் பயிற்சி என அனைத்து பயிற்சிகளும் தினசரி பழக்குவோம் இரவு 8 மணி அளவில் ஒரு கிலோ பருத்தி விதை மக்காச்சோளம் குச்சி புண்ணாக்கு உளுந்து அரிசி சேர்த்து அதற்கு தீவனமாக வழங்குவோம் கூடுதலாக தினசரி பேரிச்சம்பழமும் மாடுகளுக்கு கொடுத்து வளர்க்கிறோம் இதனால் எங்களுக்கு ஒரு மாட்டிற்கு 300 வீதம் நாலு மாடுகளுக்கு தினசரி 1200 ரூபாய் செலவு வருகிறது நாங்கள் சாதாரண விவசாய குடும்பத்தில் இருக்கிறோம் மிகவும் சிரமத்திற்கு இடையில் இந்த மாடுகளை வளர்த்து வருகிறோம் அதாவது நாட்டு மாடு இனங்கள் அழிந்து விடக்கூடாது என்பதற்காக நாட்டு மாடுகளை வம்சாவழியாக வளர்த்து வருகிறோம்ஜல்லிக்கட்டு மாடுகளை கொண்டு செல்லும்போது சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் சுங்க வரியை ரத்து செய்ய வேண்டும்! காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்யாமல் ஜல்லிக்கட்டு மாடுகளை அனுப்பி வைக்க வேண்டும்.தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த ஜல்லிக்கட்டு மாட்டிற்கு மாதம் உதவி தொகை 1000த்தை உடனடியாக வழங்க வேண்டும் இப்படி வழங்கினால் எங்களுக்கு மிகவும் ஊக்கமாக இருக்கும் நான்கு மாடுகள் வளர்க்கும் நாங்கள் மேலும் இரண்டு மாடுகள் கூடுதலாக வளர்த்து அதிக ஜல்லி கட்டு போட்டிகளில் பங்கு பெற வாய்ப்பாக இருக்கும் அதற்கு தமிழக முதல்வர் உதவி செய்ய வேண்டும் என்று கூறினார். தமிழகத்தின் அனைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் எங்கள் மாடு கலந்து கொண்டு பரிசுகளை பெற்று வந்துள்ளது குறிப்பாக பேன்.மிக்ஸி கிரைண்டர் கட்டில் வாஷிங் மெஷின் பீரோ உள்பட ஒரு திருமண பெண்ணுக்கு என்னென்ன சீர் வரிசைகள் தேவைப் படுமோ அனைத்து பரிசுகளையும் எங்கள் ஜல்லிக்கட்டு மாடுகள் பெற்று வந்து வீட்டில் அடுக்கி வைத்துள்ளோம் .இதுவே எங்களுக்கு மிகப் பெரிய பெருமை. ஆகையால் ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு அரசு உதவித்தொகை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்பதுதான் அனைத்து ஜல்லிக்கட்டு காளை மாடுகளை வளர்ப்பவர்களின் கோரிக்கையாக உள்ளது!

Related Articles

Back to top button