காவல் செய்திகள்

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு அமோக விற்பனை!? கண்டுகொள்ளாமல் இருக்கும் பேராவூரணி காவல் நிலையம் !? நடவடிக்கை எடுப்பாரா திருச்சி மத்திய மண்டல ஐ ஜி!?

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு அமோக விற்பனை!? கண்டுகொள்ளாமல் இருக்கும் பேராவூரணி காவல் நிலையம் !? நடவடிக்கை எடுப்பாரா திருச்சி மத்திய மண்டல ஐ ஜி!?

சட்ட விரோத மாக லாட்டரி விற்பணை செய்யும்
பேராவூரணி சோழனார்வயல் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ்


திருப்பூர் மாநகர காவல் ஆணையராகவும், கோவை சரக டிஐஜி ஆகவும் பணியாற்றிய கார்த்திகேயன் திருச்சி மத்திய மண்டல புதிய ஐ.ஜி. ஆக 2023 ஜனவரி மாதம் பொறுப்பேற்றுக்கொண்டார்.


மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களிலும் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிவித்தார். கஞ்சா, குட்கா மற்றும் இதர போதைப் பொருட்களை கடத்துதல், பதுக்குதல், சட்ட விரோதமாக விற்பனை செய்யும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். மேலும், இது போன்ற குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடும் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவர் என்றும் தெரிவித்தார். மணல் கடத்தல், சட்ட விரோதமாக சாராய விற்பனை, லாட்டரி விற்பனை போன்ற சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தி உள்ளதாக கூறினார்.இணையதள மோசடிக் குற்றங்களிலிருந்து தற்காத்துக்கொள்வது குறித்து பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு, அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களையும் கேட்டுக் கொண்டுள்ளாதாக கூறிய ஐஜி கார்த்திகேயன், சட்ட விரோத மற்றும் பொது மக்களுக்கு அச்சுறுதல் ஏற்படுத்தும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடி மற்றும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, குண்டர் தடுப்பு சட்டத்தில் கீழ் சிறையில் அடைக்கப்படுவர் என்று எச்சரித்தார். மேலும், சாலை விபத்துக்களை குறைப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் புகார் அளிக்க விரும்பும் பொதுமக்கள், வேலை நாட்களில் தினமும் பிற்பகல் 12 மணி முதல் 1 மணி வரை தன்னை நேரில் சந்தித்து புகார் மனு அளிக்கலாம் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


ஆனால் திருச்சி மத்திய மண்டல ஐஜி அவர்கள் கூறிய அனைத்தையும் தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையினர் காற்றில் பறக்க விட்டு போலி மது பாட்டல் தடை செய்யப்பட்ட லாட்டரி கஞ்சா போன்ற பொருட்களை சட்ட விரோதமாக விற்பனை செய்யும் நபர்களுக்கு உடந்தையாக காவல் துறையினர் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். .


தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி டவுன் மற்றும் தாலுகா காவல் நிலையத்திற்கு உட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் சட்ட விரோதமாக அமோகமாக விற்பனை செய்யப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவல் வந்துள்ளது அது மட்டும் இல்லாமல் குறிப்பாக
பேராவூரணி சேதுபாவ சத்திரம் மற்றும் பூக்கொல்லை திருச்சிற்றம்பலம் பெருமகளூர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் அமோகமாக விற்பனை நடந்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.பேராவூரணி பகுதியில்
மூன்று நம்பர் லாட்டரிச் சீட்டில் கடைசி ஒரு நம்பர் இருந்தால் 1000ரூபாய், இரண்டு நம்பர் இருந்தால் 20,000 ரூபாய், மூன்று நம்பரும் இருந்தால் 1,00,000 ரூபாய் பரிசு
நான்கு நம்பர் இருந்தால் 2,00,000
எனச் சொல்லி ஏழைக் கூலித் தொழிலாளர்களைக் குறிவைத்து நடத்துகிறார்கள் .லாட்டரிச் சீட்டுக்கு அடிமையான ஏழை மக்கள் பலர் தங்கள் அன்றாட வருமானத்தையும், வாழ்நாள் சேமிப்பையும் இழப்பதாகவும், இதனால் பலர் தற்கொலை செய்துகொள்வதாகவும் நாலாபுறமும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணமாக இருந்து வருகின்றன. ஆனாலும், லாட்டரி விற்பனை சமூகமாக நடந்து கொண்டிருப்பது தான் நிதர்சனம் .

தடை செய்யப்பட்ட லாட்டரிக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு பரிசு விழுந்தாலும் 2000ரூபாய் பரிசுத் தொகை மட்டும் கொடுத்துவிட்டு, மீதி தொகை 8000ரூபாயைக் கொடுக்காமல் ஏமாற்றி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காவல்துறைக்கு சமூக ஆர்வலர்கள் தகவல் தெரிவித்தால் லாட்டரி டிக்கெட் விற்பது தவறு என்றும் லாட்டரியில விழுந்த பணத்தை கொடுக்கலைன்னு கொடுக்கும் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கூறும் காவல்துறையினர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டை சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் ஏன் எடுப்பதில்லை என சமூக ஆர்வலர் குற்றம் சாட்டுகின்றனர்.

பேராவூரணி காவல் ஆய்வாளர் காவேரி

அதேபோல் பேராவூரணி சேதுபாவ சத்திரம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு வாங்கிய நபருக்கு நான்கு நம்பர் விழுந்ததில் இரண்டு லட்சம் ரூபாய் (2.00,000) பரிசு விழுந்ததாகவும் பரிசுத் தொகையை விற்பனையாளர் கொடுக்காமல் ஏமாற்றி வருவதாகவும் பாதிக்கப்பட்ட நபர் கொடுத்த தகவலின் பெயரில் லாட்டரி சீட் விற்பனை செய்தது யார் அவர் பெயர் என தெரிந்து கொண்டு
தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டை
பேராவூரணி கடை வீதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்யும் சோழனார்வயல் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் என்ற நபருக்கு பத்திரிக்கை நிருபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது நீங்கள் செய்யப்பட்ட லாட்டரி சீட் சட்ட விரோதமாக விற்பனை செய்றீங்களா என்று கேட்டதற்கு ஆமாம் என்று கூறியுள்ளார்.தமிழ்நாட்டில் லாட்டரி தடை செய்யப்பட்டுள்ள நிலையில் நீங்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்வது தவறில்லையா என்றும் ஏழைகள் தாங்கள் கூலி வேலை செய்த காசை வைத்து வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்தும் தராமல் ஏமாற்றி வருவது குற்றமில்லையா என்று கேட்டதற்கு நான் அதிகமாக விற்பனை செய்வது இல்லை என்று பேசிக்கொண்டு இருந்தபோது தொலைபேசியை துண்டித்து விட்டார்.
தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ய அதற்கென்று ஆட்களை நியமனம் செய்து குயில் ,நல்ல நேரம் ,ரோசா, என விதவிதமான பெயர்கள் வைத்து வெள்ளை பேப்பரில் கருப்பு வெள்ளையாக பிரிண்ட் செய்து டோக்கன் வடிவில் ஆங்காங்கே விற்பனை செய்து வருகின்றனர். இதனை கூலி தொழிலாளர்கள் முதல் பல்வேறு ஏழை எளிய பொதுமக்கள் வாங்கி ஏமாற்றம் அடைகின்றனர். இந்த லாட்டரி சீட்டை நம்பி பணத்தை இழந்தவர்கள் பல பேர் குடும்பம் தற்போது கேள்விக்குறியாக இருப்பது தான் நிதர்சனம்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப் பட்டாலும் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்தாலும் யாராவது ஒரு நபர் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்து அத்துடன் மேலும்
விசாரணை செய்யாமல் விட்டு விடுகின்றனர்.
தொடர் நடவடிக்கை எடுப்பதில்லை என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
லாட்டரி சீட்டுகள் விற்கும் மொத்த விற்பனையாளர் உள்ளிட்டவர்களையும் மறைமுகமாக விற்பனை செய்பவர்களையும் விரைவில் கைது செய்து உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே செய்யப்பட்ட லாட்டரி சீட் விற்பனை செய்வதை
தடுக்க முடியும். எனவே இது போன்ற தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யும் மொத்த விற்பனையாளர்கள். உதவியாளர்கள் உள்ளிட்ட நபர்களை கைது செய்தால் மட்டுமே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை ஒழிக்க முடியும் அப்படி ஒழித்தால் மட்டுமே இதனால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய சாமானிய பொதுமக்களை காப்பாற்ற முடியும் .


ஆகவே தஞ்சாவூர் சரக டிஐஜி திருச்சி மண்டல ஐஜி மற்றும் தமிழக காவல்துறை இயக்குனர் ஆகியோர் உடனடியாக தடை செய்யப்பட்ட லாட்டரி சீட் விற்பனை செய்வதாக வந்துள்ள குற்றச்சாட்டு மீது விசாரணை நடத்த வேண்டும் அது மட்டும் இல்லாமல் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனைக்கு துணை போகும் காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பேராவூரணி குடும்ப பெண்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நடவடிக்கை எடுப்பாரா தஞ்சாவூர் சரக காவல் துறை துணை தலைவர் ஜெயச்சந்திரன் என்று பொறுத்திருந்து பார்ப்போம்…!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button