சைபர் கிரைம்

தமிழகத்தில் குற்றப்பிரிவு காவல்துறைக்கு சவாலாக இருக்கும் ஆன்லைன் பணமோசடி கும்பல்! பல லட்சங்களை இழந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளம் பெண்கள்!
 
இந்தியா முழுவதும் ஆன்லைன் மோசடி குற்றங்கள் பதிவு செய்யப்பட்ட சிஎஸ்ஆர் வழக்குகளில் தமிழ்நாடு முதலிடத்திலும் எஃப்ஐஆரில் மூன்றாவது இடத்திலும் இருப்பதாக தகவல்!
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் இணையவழி குற்றங்களின் எண்ணிக்கை இரண்டரை மடங்கு உயர்ந்துள்ளதாக மாநில காவல்துறையின் தரவுகள் கூறுகின்றன.
சைபர் குற்றங்கள் அல்லது இணையவழி பணமோசடிகள், குறிப்பாக டிஜிட்டல் கைது எனும் டிஜிட்டல் அர்ரெஸ்ட் மற்றும் ஆன்லைன் செயலி மோசடிகள் மூலமாக அதிகரித்து வருகின்றன. காவல்துறை தரப்பில் தொடர்ந்து பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும் இணையவழி மோசடிகள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றன.
அவ்வாறு தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் இணையவழி மோசடிகளின் எண்ணிக்கை இரண்டரை மடங்கு உயர்ந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

2022 ஆம் ஆண்டில் மாநில காவல்துறை பதிவு செய்த சைபர் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 2,082 ஆக இருந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு 4,121 ஆகவும், 2024-ல் 5,385 ஆகவும் உயர்ந்துள்ளது.

இதுதொடர்பான புகார்களில் வெறும் 3% மட்டுமே முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்யப்படுவதாகவும் 50%க்கும் அதிகமான புகார்கள், சிஎஸ்ஆர் எனும் அடையாளம் காணாத குற்றத்தில் பதிவு செய்யப்படுவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் இணையவழி மோசடி குற்றங்களின் தரவுகளில், சிஎஸ்ஆர் வழக்குகளில் தமிழ்நாடு முதலிடத்திலும் எஃப்ஐஆரில் மூன்றாவது இடத்திலும் உள்ளது. இருப்பினும் பதிவான மொத்த புகார்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு எந்த இடத்தில் உள்ளது என அறிக்கையில் குறிப்பிடவில்லை.
இதற்குக் காரணமான இரண்டு காரணங்களில் ஒன்று, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு. குற்றங்கள் நிகழும்போது, மோசடிக்கு பயன்படுத்தப்படும் வங்கிக்கணக்குகளை முடக்கி, மோசடி செய்யப்பட்ட பணத்தில் ஒரு பகுதியை எஃப்ஐஆர் பதிவு செய்யாமலே பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பித்தர நீதிமன்ற உத்தரவு அனுமதிக்கிறது. இதற்கு அதிகாரப்பூர்வ தேசிய சைபர் அறிக்கை இணையதளத்தில் புகார் அளித்தால் போதும்.
இரண்டாவதாக, மோசடி செய்யப்பட்ட பணத்தொகை அதிகமாக இருந்தாலோ அல்லது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட நெட்வொர்க் செயல்படுவதற்கான சான்றுகள் இருந்தால் மட்டுமே எஃப்ஐஆர் பதிவு செய்யப்படுகிறது.
உதாரணமாக, ஆவடியில் ஒரு வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட ஒருவரின் 13 வங்கிக் கணக்குகள், சுமார் 135 டிஜிட்டல் கைது மற்றும் ஆன்லைன் வர்த்தக மோசடிகளில் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாக ஏமாற்றி52.6 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மதுரை சிலைமான் பகுதியைச் சேர்ந்த நபர் புகார் கொடுத்துள்ளார்.

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் இந்த மோசடி தொடர்பாக விசாரிக்க, சைபர் கிரைம் போலீஸாருக்கு உத்தரவிட்டார். சைபர் கிரைம் போலீஸார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணையை தொடங்கினர். பாதிக்கப்பட்ட நபர், ஆன்லைன் வேலை கொடுத்ததாக கூறிய நபர்களுக்கு வங்கி மூலம் பணம் அனுப்பிய விவரங்களை போலீஸார் சேகரித்தனர். இதன் மூலம் அந்த நபர்கள் பெயரில் வங்கிகளில் இருப்பு வைத்திருந்த ரூ.76,52,625-யை முடக்கினர்.
இந்த மோசடி தொடர்பாக ஏற்கெனவே கைது செய்யப்பட்ட

கேரளா காயாம்குளம் நவ்சத் மகன் அன்வர்சா கொடுத்த தகவலின் பேரில் விசாரித்தனர். இதில் கர்நாடகா மைசூர் உதயகிரியைச் சேர்ந்த முனவர்கான் மகன் சல்மான்கான், சானுல்லா என்பவர் மகன் ஜூபர்கான், மைசூர் என்ஆர்.மொகல்லா ராஜேந்திரன் மகன் கிரியேஷ் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இவர்களை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன், சிம் கார்டுகளை பறிமுதல் செய்தனர். இவர்கள் தமிழ்நாடு மட்டுமன்றி தெலுங்கானா பகுதியிலும் பலரிடம் ஆசை வார்த்தை கூறி பண மோசடியில் ஈடுபட்டிருப்பதும் தெரியந்தது.
மதுரை மாவட்ட எஸ்பி அரவிந்த கூறுகையில், ”இது போன்ற குற்றங்களில் செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பண மோசடி தொடர்பாக சைபர் குற்றங்கள் சம்பந்தமாக பொதுமக்கள் தாமதம் செய்யாமல் 1930 என்ற கட்டணமில்லாத தொலைபேசியை தொடர்பு கொண்டும் மற்றும் பிற சைபர் குற்றங்கள் தொடர்பாக பாதிக்கப்பட்டால் www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமும் புகார் அளிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் இணையவழி குற்றங்களின் எண்ணிக்கை இரண்டரை மடங்கு உயர்ந்துள்ளதாக மாநில காவல்துறையின் தரவுகள் கூறுகின்றன.
சைபர் குற்றங்கள் அல்லது இணையவழி பணமோசடிகள், குறிப்பாக டிஜிட்டல் கைது எனும் டிஜிட்டல் அர்ரெஸ்ட் மற்றும் ஆன்லைன் செயலி மோசடிகள் மூலமாக அதிகரித்து வருகின்றன. காவல்துறை தரப்பில் தொடர்ந்து பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும் இணையவழி மோசடிகள் அதிகரித்துக்கொண்டு தான் இருக்கின்றன.

அவ்வாறு தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் இணையவழி மோசடிகளின் எண்ணிக்கை இரண்டரை மடங்கு உயர்ந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

2022 ஆம் ஆண்டில் மாநில காவல்துறை பதிவு செய்த சைபர் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 2,082 ஆக இருந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு 4,121 ஆகவும், 2024-ல் 5,385 ஆகவும் உயர்ந்துள்ளது.

இதுதொடர்பான புகார்களில் வெறும் 3% மட்டுமே முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்யப்படுவதாகவும் 50%க்கும் அதிகமான புகார்கள், சிஎஸ்ஆர் எனும் அடையாளம் காணாத குற்றத்தில் பதிவு செய்யப்படுவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் இணையவழி மோசடி குற்றங்களின் தரவுகளில், சிஎஸ்ஆர் வழக்குகளில் தமிழ்நாடு முதலிடத்திலும் எஃப்ஐஆரில் மூன்றாவது இடத்திலும் உள்ளது. இருப்பினும் பதிவான மொத்த புகார்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு எந்த இடத்தில் உள்ளது என அறிக்கையில் குறிப்பிடவில்லை.
இதற்குக் காரணமான இரண்டு காரணங்களில் ஒன்று, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு. குற்றங்கள் நிகழும்போது, மோசடிக்கு பயன்படுத்தப்படும் வங்கிக்கணக்குகளை முடக்கி, மோசடி செய்யப்பட்ட பணத்தில் ஒரு பகுதியை எஃப்ஐஆர் பதிவு செய்யாமலே பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பித்தர நீதிமன்ற உத்தரவு அனுமதிக்கிறது. இதற்கு அதிகாரப்பூர்வ தேசிய சைபர் அறிக்கை இணையதளத்தில் புகார் அளித்தால் போதும்.

இரண்டாவதாக, மோசடி செய்யப்பட்ட பணத்தொகை அதிகமாக இருந்தாலோ அல்லது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட நெட்வொர்க் செயல்படுவதற்கான சான்றுகள் இருந்தால் மட்டுமே எஃப்ஐஆர் பதிவு செய்யப்படுகிறது.
உதாரணமாக, ஆவடியில் ஒரு வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட ஒருவரின் 13 வங்கிக் கணக்குகள், சுமார் 135 டிஜிட்டல் கைது மற்றும் ஆன்லைன் வர்த்தக மோசடிகளில் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது

Back to top button