திருப்பூர் சுப்பிரமணியை கண்டித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசனைக் கூட்டம்

நஷ்டமடைய நஷ்டமடையத் தொழில் வீணாய்ப் போகிறது. ஆகையால்..” -திருப்பூர் சுப்ரமணியம்!
கொரோனா ஊரடங்கினால் மூன்று மாதமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசு ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்து திரையரங்கு திறப்பதற்கு அறிவிப்பு வரும் என்ற நிலையில் சில நாட்களுக்கு முன்பு திரையரங்கு உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட கோவை மாவாட்டம் மோனோ புலி என்று சொல்லப்படும் திருப்பூர் சுப்பிரமணி அவர்கள் திருப்பூரில் 40 திரையரங்குக்கு மேல் வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். எப்போதுமே அவருடைய திரையரங்குகளுக்கு பாதிப்பு வரும் போதெல்லாம் உடனே ஏதாவது பேசி பதிவிடுவது வழக்கமாக கொண்டவர் தான் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் திரையரங்குகளில் டிக்கெட்டுகள் அனைத்தும் கணினி மூலம் கொடுக்க வேண்டுமென்றும் நேரடியாக திரையரங்கும் தயாரிப்பாளர்களுக்கும் ஒப்பந்தம் இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது அதற்கு திருப்பூர் சுப்பிரமணி தற்போது அனைத்து திரையரங்குகளிலும் கணினிமயம் தான் இருக்கிறது என்றும் நேரடியாக திரையரங்கு உரிமையாளர்கள் தயாரிப்பாளர்களிடம் தொடர்பு வைக்க முடியாது என்றும் அப்படி ஒப்பந்தம் போட்டால் தயாரிப்பாளர்கள் போட்டியில் விற்கும் பணத்தை எங்களுக்கு பங்கு தருவார்களா என்று குதர்க்கமாக கேள்வி எழுப்பினார் அதுமட்டுமில்லாமல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருப்பவர்கள் யாரும் திரைப்படம் எடுப்பது இல்லை என்றும் பாரதிராஜா ஆரம்பித்துள்ள நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் தான் திரைப்படம் எடுக்கும் தயாரிப்பாளர் உள்ளதாகவும் விமர்சனம் செய்தார்.
இந்த விமர்சனத்தை கண்டித்து ஆலோசனை கூட்டம் நேற்று எழும்பூரில் உள்ள ரேடிசன் ஹோட்டலில் நடந்தது!
இந்த கண்டனக் கூட்டத்தை விமர்சித்து தற்போது வேறு சங்க நிர்வாகிகள் கேள்வி எழுப்ப உள்ளதாக தகவல் வந்துள்ளது திருப்பூர் சுப்பிரமணி அவர்கள் எந்த சிறு தயாரிப்பாளர்களுக்கும் விசுவாசியாக இருக்க மாட்டார் என்பது திரையுலகமே அறிந்தது தான் அப்படி இருக்கும்போது அவர் பேசியதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கண்டன ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது வருங்காலத்தில் இதுபோல் தயாரிப்பாளர்களை விமர்சனம் செய்யாமல் இருக்க இந்த ஆலோசனைக் கூட்டம் அமையும் என்பதற்காக தான் இந்த கண்டனக் கூட்டத்தை ஏற்பாடு செய்து இருந்தார்கள் என்று தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தி வரும் நிலையில் இந்த கண்டன ஆலோசனை கூட்டத்தை விமர்சித்து மற்ற சங்க நிர்வாகிகள் விமர்சித்து வருவதாக தகவல் வந்துள்ளது!
தயாரிப்பாளர்கள் விமர்சனம்!!?
பாபுகணேஷ் தயாரிப்பாளர்….
திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கூட்டத்தில் ஒருவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிபற்றியும் தேர்தல் பற்றியும் தவறாக பேசிவிட்டார் .. அந்தநபரை அழைத்துப்பேசாமல் எதிர்த்து திட்டுவதற்கு ஸ்டார் ஹோட்டலில் மீட்டிங் தேவையா ..நீங்களும் அவர் பேசியதற்கு விளக்கம் தந்து விட்டு போகலாமே ..

கொரோனா தீவிரமாக பரவும் கால கட்டத்தில் இந்த கூட்டம் தேவைதானா .. அனைவர் மீதும் ஷோ cause notice அவசியமா …
உங்கள் மீதே வழக்கு நிலுவையில் இருக்கும் போது .. அனைவரையும் அழைத்து பேசி முடிக்க வேண்டிய விசயங்களை பெரிதாக்க வேண்டிய அவசியம் என்ன …!? சங்கத்தின் பணத்தை வீண் செய்யலாமா .. இந்த கேள்விகளுக்கு சங்க நிர்வாகிகள் பதில் சொல்வார்களா ..!??.
சங்க உறுப்பினர்கள் பதில் அளிக்க வேண்டுகிறேன் ..
தயார்ப்பாளர் கின்னஸ் பாபு கணேஷ்