தவறவிட்ட விலை உயர்ந்த ஆப்பிள் செல்போனை உடனே கண்டுபிடித்து கொடுத்த டி நகர் மாம்பலம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் கோவிந்த் அவர்களுக்கு பாராட்டு!
இன்றையக் காவல் செய்தி! டி நகர் பனங்கள் பார்க் அருகே குடும்பத்துடன் ஊஃபர் காரில் வந்தவர்கள் தங்களுடைய விலை உயர்ந்த ஆப்பிள் செல்போன் மற்றும் தங்களுடைய பேக்கை தவற விட்டதாக பணங்கள் பார்க் அருகில் உள்ள டி நகர் மாம்பழம் காவல் நிலைய போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் கோவிந்த் அவர்களிடம் கூறியவுடன்
உடனே ஓட்டுனரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அரை மணி நேரத்தில் தவறவிட்ட பேக் மற்றும் விலை உயர்ந்த செல்போனை ஒப்படைக்கும்படி கூறினார் அதன்படி ஊஃபர் ஓட்டுநர் அரை மணி நேரத்தில் காரில் இருந்த பேக் மற்றும் செல்போனை ஒப்படைத்தார். உடனே பேக் மற்றும் செல்போன் உரிமையாளர்களிடம் காவல் உதவியாளர் கோவிந்த் அவர்கள் அழைத்து ஒப்படைத்தவுடன் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். இந்த சம்பவத்தை கண்டு அருகில் உள்ள அனைவரும் காவல் உதவி ஆய்வாளர் கோவிந்த அவர்களை பாராட்டினார்.