இரண்டு கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட சோழவந்தான் பேருந்து நிலையத்தை அதிமுக கட்சி பொதுக் கூட்டம் நடத்த தாரை வார்த்த சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அவல நிலை! முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!
இரண்டு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை கட்சி பொதுக்கூட்டம் நடத்த தாரை வார்த்த சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அவல நிலை! முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!
மதுரை மாவட்டம் சோழவந்தான் மக்களின்
நீண்ட காலமாக எதிர்பார்ப்பாக இருந்த பேருந்து நிலையம் அதிமுக ஆட்சியில் 2 கோடி ரூபாய் மதிப்பில் 2017 ஆம் ஆண்டு ஆர் பி உதயக்குமார் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் ஆகியோர் அடிக்கல் நாட்டி வைத்தனர். பின்னர் இரண்டு வருடம் பேருந்து நிலையம் கட்ட பணம் இல்லாமல் 2019 பிப்ரவரி மாதம் வேலை தொடங்கியது.
அதன் அதிமுக ஆட்சியில் 2021 ஜனவரி மாதம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் சமூக விரோதிகளின் கூடாரமாக சோழவந்தான் பேருந்து நிலையம் மாறியதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்பு 2021 ஏப்ரல் மாதம் திமுக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதனால் மீண்டும் இரண்டு ஆண்டுகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் கிடப்பில் போடப் போட்டு இருந்த நிலையில்
மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பேருந்து நிலையத்தை திறக்க பல கோரிக்கை போராட்டம் நடத்திய பின்பு
2024 ஜனவரி 05 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இரண்டு கோடி ரூபாய் செலவில் சோழவந்தான் பேருந்து நிலையம் கட்ட அடிக்கல் நாட்டி ஆரம்பித்து ஆறு வருடங்கள் முடிந்த நிலையில் தற்போது மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வருகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
ஏனென்றால் பேருந்து நிலையம் அருகே செல்லும் மேம்பாலம் வழியாக செல்லும் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வருவதில்லை மாறாக சாலைகளிலே நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்கிறது. பேருந்து நிலையத்திற்குள் எந்த பேருந்துகளும் வருவதில்லை. ரயில்வே மேம்பாலம் மற்றும் பேருந்து நிலையம் சரியான திட்டமிடல் இல்லாமல் கட்டப் பட்டதால்
மக்கள் வரிப்பணம் 2 கோடி ரூபாய் வீணடிக்கப் பட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க பிப்ரவரி 1ஆம் தேதி அதிமுக கட்சி சார்பாக சென்னை பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் வீட்டில் வேலை செய்த பட்டியலின பெண்ணை கடுமையாக தாக்கி துன்புறுத்தியதாக புகார் கொடுத்தும் திமுக அரசு கடும் நடவடிக்கை எடுக்கவில்லை என திமுக அரசை கண்டித்து மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான ஆர் பி உதயகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த சோழவந்தான் நகர் பகுதிகளில் ஜனகை மாரியம்மன் கோவில் வளாகம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே மற்றும் வட்ட பிள்ளையார் கோவில் அருகே ஆக மூன்று இடங்களில் காவல்துறையில் அனுமதி கேட்டு காவல்துறை அனுமதி வழங்காத நிலையில்
மக்கள் பயன்படுத்தக்கூடிய சோழவந்தான் பேருந்து நிலையத்தை
அதிமுக கட்சி சார்பாக திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த காவல் துறையும் பேரூராட்சி நிர்வாகமும் சேர்ந்து அனுமதி வழங்கியுள்ளது.அதிமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசின்
கண்காணிப்பில் உள்ள காவல்துறை மெத்தன போக்கால் தமிழகம் சீர்கெட்டு போனதால் சிறுமியை வன்கொடுமை செய்திட்ட சட்டமன்ற உறுப்பினர் மகனுக்கு பாதுகாப்பு வழங்கி வருவதாக தமிழக முதல்வர் மற்றும். விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அவரைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பையா, மாணிக்கம், நீதிபதி, மகேந்திரன், எஸ். எஸ். சரவணன், அம்மா பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல், வக்கீல் திருப்பதி, ஒன்றிய செயலாளர்கள் கொரியர் கணேசன், காளிதாஸ், கல்லணை ரவிச்சந்திரன், அரியூர்ராதாகிருஷ்ணன், வாடிப்பட்டி ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமி ராஜேஷ்கண்ணா, நகர செயலாளர்கள் அசோக்குமார், முருகேசன், அழகுராஜ், பாலமேடுகுமார்,மகளிர் அணி மாவட்ட செயலாளர் லெட்சுமி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பஞ்சவர்ணம் பேரூர் சந்தனதுரை குருவித்துறை பாபு வக்கீல் காசிநாதன்.என பலர் கலந்து பங்கேற்றனர் என்பது குறிப்பிடத் தக்கது!
சோழவந்தான் பேருந்து நிலையத்திற்குள் நடந்த ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சோழவந்தான் திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தின் செயல்பாட்டின் மீது மிகுந்த கோபத்துடன் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இனிமேல் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் எந்த ஒரு பொது இடங்களிலும் கட்சி பொதுக்கூட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையும் பேரூராட்சி நிர்வாகமும் வழங்கக்கூடாது என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் தற்போது சோழவந்தான் பேருந்து நிலையத்தில் நடந்த அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்க எத்தனை லட்சம் காவல்துறைக்கும் மற்றும் சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகத்திற்கும் கையூட்டாக வழங்கப்பட்டது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பு உள்ளனர்.
எது எப்படியோ மதுரை மாவட்ட ஆட்சியர் மக்கள் பயன்படுத்தும் சோழவந்தான் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கிய காவல்துறை மற்றும் சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகத்தின் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதுமட்டும் இல்லாமல் அதிமுக கட்சி கண்டன ஆர்பாட்டம் நடத்த அனுமதி வழங்கிய யாராக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு சமூக ஆர்வலர்கள் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது!
சோழவந்தான் புதிய பேருந்து நிலையம் தொடக்க விழாவில்
சோழவந்தானில் பேரூராட்சி சேர்மன் ஜெயராமன், துணை சேர்மன் லதா, வார்டு கவுன்சிலர்கள் குத்து விளக்கு ஏற்றினர். செயல் அலுவலர் செல்வகுமார், போக்குவரத்து கழக பொது மேலாளர் ராகவன், கிளை மேலாளர் லாரன்ஸ், ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் கலந்து கொண்டனர்.
.