திமுக கட்சிக் கொடிக்கம்பம் அகற்றிய போது மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவன் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்!
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பாசிங்காபுரம் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் காலை 10 மணிக்கு நடைபெற்ற திமுக உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டார். அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சிக்காக சாலை நெடுக திமுக கட்சிக் கொடி கம்பம் வைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சி முடிந்தவுடன் அமைச்சர் சென்று விட்டார்.
மாலை திமுக கட்சி கொடிக் கம்பங்களை சிக்கந்தர்சாவடி பகுதியை சேர்ந்த நவின்குமார் (18) என்ற கல்லூரி மாணவன் மற்றும் அவரது தந்தையும் அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கொடிக்கம்பம் மேலே சென்ற மின் கம்பத்தில் பட்டு மின்சாரம் தாக்கியுள்ளது. உடனே கல்லூரி மாணவனை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது மாணவன் ஏற்கனவே உயிரிழந்து போனதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தற்போது உயிரிழந்த மாணவன் மருத்துவ உடல் பிரோத பரிசோதனைக்காக ராஜாஜி மருத்துவமனையில் வைத்துள்ளனர். இது சம்பந்தமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தொடர்பாக அலங்காநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்