அரசியல் காமெடி

திமுக கட்சியில் நீக்கப்பட்ட நிர்வாகி வீட்டில் விருந்து சாப்பிட்ட அமைச்சர் மூர்த்தி!கட்சியில் குழப்பம்! இரண்டு திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு மத்தியில் நடக்கும் கோஷ்டி மோதல்! உற்று நோக்கும் ஒட்டு மொத்த மதுரை மாவட்ட அரசியல் கட்சிகள்!!


திமுக தலைமை நீக்கப்பட்ட முன்னால் நிர்வாகி வீட்டில் விருந்து சாப்பிட்டு
மதுரை புறநகர்  தெற்கு மாவட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் மதுரை புற நகர் வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் மூர்த்தி!

உசிலம்பட்டி முன்னாள் திமுக நகரச் செயலாளர் தங்காமலைப் பாண்டி இல்லத்தில் அமைச்சர் மூர்த்தி!
நீக்கப்பட்ட முன்னாள் திமுக நிர்வாகிகள்!


திமுக தொண்டர்கள் மத்தியில் யாருக்கு ஆதார்வு!
திமுக தலைமையின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன!?


கடந்த  மே 23 ஆம் தேதி  மதுரை மாவட்டம் நிக்கப்பட்ட முன்னாள் உசிலம்பட்டி  திமுக முக்கிய நிர்வாகிகள் இல்லத்திற்கு சென்ற மதுரை புற நகர் வடக்கு மாவட்டச் செயலாளர் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி மூர்த்தி அவர்கள் மண மக்களை வாழ்த்தி விருந்து சாப்பிட்டு சென்றுள்ளார்.நடந்து முடிந்த உசிலம்பட்டி நகராட்சி தேர்தலில் தலைமை அறிவிக்கப்பட்ட நகராட்சி தலைவர் பதவிக்கு   10 வது வார்டில் நின்று வெற்றி பெற்ற செல்வி அவர்களுக்கு  எதிராக செயல்பட்டு  11 வது வார்டில் திமுக சார்பாக நின்று  வெற்றி பெற்ற சகுந்தலா அவர்களுக்கு ஆதரவாக வாக்களித்து   உசிலம்பட்டி நகரத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திமுக வுக்கு எதிராக  வெற்றி பெற்ற சகுந்தலா,!
உசிலம்பட்டி நகரத் தலைவர் பதவிக்கு திமுக தலைமை அறிவித்த வேட்பாளர். செல்வி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியின் நகர்  மன்ற தலைவர் தேர்தலின் போது திமுக கூட்டணி உறுப்பினர்கள் 13 பேர் பெரும்பான்மையாக இருந்த நிலையில், திமுக தலைமை கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் செல்விக்கு எதிராக மற்றொரு திமுக வேட்பாளர் சகுந்தலா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திமுக சார்பில் 10 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் செல்வி, மற்றொரு திமுக 11வது வார்டு உறுப்பினர் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றவர், ஆகியோர் வார்டு நகர்மன்ற தலைவருக்கான பதவிக்கு போட்டியிட்டனர்.
மொத்தமுள்ள 24 வாக்குகளில் சகுந்தலா 17 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அம்பிகா செல்வி 6 வாக்குகள் பெற்றார். ஒரு வாக்கு செல்லாத வாக்கு என்று அறிவிப்பட்டது குறிப்பிடத் தக்கது.

தமிழகம் முழுவதும் இது போன்று கட்சி அறிவித்த வேட்பாளருக்கு எதிராக செயல்பட்ட பொறுப்பாளர்களை திமுக தலைமை அதிரடியாக நீக்கம் செய்தது.

அதன் ஒரு பகுதியாக உசிலம்பட்டி நகர செயலாளர் தங்கமலைப்பாண்டி, ஒன்றிய செயலாளர் சுதந்திரம், மாநில செயற்குழு உறுப்பினர் சோலை ரவி, நகர இளைஞரணி செயலாளர் சந்திரன் உள்ளிட்ட நான்கு பேரையும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதாகவும் கூறி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்வதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.)

சில நாட்களுக்கு முன்பு திமுக தலைமை நீக்கப்பட்ட   உசிலம்பட்டி முன்னாள் திமுக  நகரச் செயலாளர் தங்கமலைப் பாண்டி மகன் திருமண நிகழ்ச்சி நடந்துமுடிந்த நிலையில்  அப்போது அமைச்சர் மூர்த்திக்கு அழைப்பிதழ் வழங்கப் பட்டது.

ஆனால் அப்போது அமைச்சர் முர்த்தி அவர்களை அழைத்ததன் பெயரில்
கடந்த திங்கட்கிழமை  23ஆம் தேதி (25நாட்கள் கழித்து) வந்த அமைச்சர் மூர்த்தி அவர்கள்  உசிலம்பட்டி தேவர் சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் திமுக தலைமை நீக்கப்பட்ட நிர்வாகி திருமண வீட்டில்  ஏற்பாடு செய்திருந்த மிகப் பிரமாண்டமான விருந்தில் கலந்து கொண்டுள்ளார் அமைச்சர்.அங்கு மணமக்களை வாழ்த்தி பேசிய பின்பு அமைச்சர் மூர்த்தி  திமுக தலைமை நிக்கப் பட்ட முன்னாள் நிர்வாகிகளுடன் அமர்ந்து விருந்து சாப்பிட்டுள்ளார்
இதில் உசிலம்பட்டி பொதுக்குழு உறுப்பினர் சோலை ரவி செயற்குழு உறுப்பினர் இளமகிழன். சேடபட்டி ஒன்றிய செயலாளர் ஜெயச்சந்திரன் செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் சுதாகரன் மதுரை 99 வது வார்டு உறுப்பினர் எஸ் பி எம் சிவா மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


இதனால் மதுரை புற நகர் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆதரவாளர்களுக்குடையே சலசலப்பு ஏற்பட்டு கட்சிக்குள் பெரும் குழப்பத்தையும் உண்டாக்கி உள்ளது என்கிறார்கள் .

திமுக தலைமை நீக்கப்பட்ட  முன்னால் நிர்வாகி இல்லத்திற்கு திடீரென்று சென்ற  திமுக அமைச்சர்  விருந்து சாப்பிட்டு சென்றது அப்பகுதி திமுக தொண்டர்கள்  மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது சமந்தமாக திமுக தலைமைக்கு மதுரை  புற நகர் தெற்கு மாவட்ட செயலாராக இருக்கும் மணிமாறன் தலைமைக் கழகத்தில் தன் அதிர்ப்த்தியை தெரிவித்ததுடன் இது சம்மந்தமாக  அமைச்சர் மூர்த்தி மீது கட்சி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க வரும் 28 ஆம் தேதி திமுக நிர்வாகிகள் கூட்டம் நடக்க விருப்பதால் அப்போது பேசிக் கொள்ளலாம் என்று கட்சி தலைமை தெரிவித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

ஆனால் இதற்கிடையே கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் திமுக நிர்வாகிகள் SR கோபி தலைமையில் 100க்கும் மேற்பட்டோர்  8 எட்டு ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் மூன்று திருப்பரங்குன்றம் பகுதி செயலாளர்கள்  மற்றும் வழக்கறிஞர் பிரிவு 20 வார்டு உறுப்பினர் ஆகியோர்  திமுக தலைமை அலுவலகத்தில் கொடுத்துள்ள கோரிக்கை மனு என்ன வென்றால் மதுரை புறநகர் தெற்கு  மாவட்டத்தில் எங்களுக்கு தான் 80 சதவீத நிர்வாகிகள் மற்றும் திமுக தொண்டர்கள் ஆதரவு இருப்பதாகவும் ஆகையால் மாவட்ட செயலாராக இருக்கும் மணிமாறன் அவர்களை நீக்கி வேற மாவட்டச் செயலாளரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை திமுக தலைமையிடம் வழங்கியுள்ளார்கள்!

திமுக தலைமைக் கழகத்தில் மனு கொடுத்துள்ள உசிலம்பட்டி திமுக ஒன்றிய செயலாளர்கள்.1.சேடப்பட்டி ஒன்றிய செயலாளர் ஜெயச்சந்திரன், 2.செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் சுதாகர் ,3.திருமங்கலம் ஒன்றிய செயலாளர் தனபால், 4.கள்ளிகுடி ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி ,5.திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் வேட்டையன், 6.திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் பெரியசாமி, 7.திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் தனபால், 8.T.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ஞானசேகர் ,

உசிலம்பட்டி நகரச் சேர்மன் சகுந்தலா மாவட்ட இளைஞரணி செயலாளர் விஜய் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதி பகுதி செயலாளர் 1.உசிலை சிவா,. 2.ஈஸ்வரன் 3.செந்தாமரைக்கண்ணன் ,மு.சி. கோ .முருகன் ,திருமங்கலம் SPM.சந்திரன் , நீக்கப்பட்டஉசிலம்பட்டி தங்கமலைப்பாண்டி, சோலை ரவி சுதந்திரம் ,ஆகியோர் தனித்தனியாக கொடுத்துள்ள மனுவில்  கட்சிக்கு விரோதமாக  உண்மையை மறைத்து மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் செயல்பட்டு வருகிறார்.என்று  புகார் மனு வழங்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது!

எது எப்படியோ இரண்டு மாவட்ட செயலாளர்கள் மத்தியில் நடக்கும் கோஷ்டி மோதலால் குழம்பி போய் இருப்பது என்னவோ திமுக அடிமட்ட தொண்டர்கள் தான் .

ஆகையால் திமுக கட்சி தலைமை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை கட்சித் தொண்டர்கள் மட்டும் அல்ல ஒட்டு மொத்த மதுரை மாவட்ட அரசியல் கட்சிகளும் உற்று நோக்கி கவனித்துக் கொண்டு வருகிறாரகள்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button