காவல் செய்திகள்

திருமணம் ஆகாத பல இளைஞர்களை குறி வைத்து
காதல் வலை விரித்து   பல லட்சம் ரூபாய் மோசடி செய்து  ஆடம்பரமாக சொகுசு வாழ்க்கை வந்த கில்லாடி போலி பெண்  வழக்கறிஞர்!


தேனியில் வசித்து வந்த 28 வயதான இளம் மருத்துவருக்கு
கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம்  முகநூலில் அறிமுகமான

நந்தினி என்ற பெண்
சொந்த ஊர்  ஈரோடு என்றும் 

வழக்கறிஞர் என்றும் எனக்கு 26 வயது ஆகிறது என்றும்    மாவட்ட நீதிபதியாக தேர்ச்சி பெற்றுள்ளேன் என்றும் அறிமுகப்படுத்தி கொண்டு பழகி வந்ததாகவும் அதன் பின்னர் மருத்துவம் சம்பந்தமாக நந்தினி என்ற பெண் தன்னிடம் தகவல் கேட்பதும் அதேபோல் சிவில் கேஸ் சம்பந்தமாக தகவல்களை நந்தினி என்ற பெண்ணிடம் கேட்பதும் இப்படி முகநூலில் பேசி வந்த நிலையில் ஆறு மாதங்களுக்குப் பின்பு அதாவது 2023 டிசம்பர் மாதம்
தன்னை காதலிப்பதாக நந்தினி கூறியதாகவும்
அதை ஏற்க மறுத்து விட்டதால் தொடர்ந்து நந்தினி என்ற பெண்  காதலிப்பதாக தொடர்ச்சியாக வற்புறுத்தி வந்தார்.
அதன் பின்னர் மருத்துவருக்கு தெரியாமலேயே call history Facebook Instagram ஆகியவற்றை எடுத்து fake ID   உருவாக்கி பல நபர்களை வைத்து  மருத்துவரை மிரட்டி வந்துள்ளார். ஆனால் எதுவுமே தெரியாதது போல் நந்தினி இருந்ததால் எதுவும் தெரியாத மருத்துவர்  பல நபர்கள் மிரட்டி வருவதை நந்தினியிடம் தெரிவித்த போது எனக்கு மாவட்ட நீதிபதி, துணை காவல் கண்காணிப்பாளர், வழக்கறிஞர்கள் ,அரசியல்வாதிகள், விஐபிகள் ,அனைவரும் தெரியும் என்றும் பணத்தை அனுப்பி வைத்தால் அவர்களை வைத்து இந்த பிரச்சனையை தீர்த்து வைக்கிறேன்  எனக்கூறி  அவர் கொடுத்த

ரிகர்சன்  என்ற நபரின் ஜி பி நம்பர் மற்றும் வங்கிக் கணக்கில் பணத்தை அனுப்பி வைத்து பழகி வந்தேன். அதன் பின்னர்
மாவட்ட நீதிபதி மற்றும் வழக்கறிஞர் மற்றும் நண்பர்கள் மூலம் இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்துள்ளதாக சென்னை வியாசர்பாடி எருக்கஞ்சேரி பகுதியில் உள்ள ஒரு கோயிலுக்கு அழைத்துச் சென்று 21/10 /2023 அன்று  திருமணம் செய்து கொண்டதாகவும்
ஆனால் எப்போது பார்த்தாலும் செல்போனில்
Facebook WhatsApp Instagram  இல் பல நபர்களுடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்ததாகவும் நந்தினியிடம் கேட்டபோது நான் வழக்கறிஞர் அப்படித்தான் அனைவரிடம் பேசுவேன் என மிரட்டியதாகவும் அதன் பின்னர்

நந்தினி வைத்திருந்த ஆதார் கார்டில்  ஊர் பெயர் பாலக்காடு கேரளா பிறந்த தேதி
19/09/1995
என்று இருந்தது. ஆனால் திருமணம் செய்யும்போது கோயிலில் நந்தினி கொடுத்த ஆதார் கார்டில்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் என்றும் பிறந்த தேதி
19/09/98  என்று இருந்ததாகவும் நந்தினி யிடம் கேட்டதற்கு இதைப் பற்றி எல்லாம் கேட்கக்கூடாது என்றும்
ஏதாவது பேசினால் 

சித்தரிக்கப்பட்ட கோப்பு படம்

இரண்டு பேரும் ஒன்றாக இருந்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவேன் என்றும்
யாருடன் பழகி வந்தாலும் அதைப்பற்றி நீ கண்டு கொள்ளக் கூடாது எனவும் என்னுடன் தான் வாழ வேண்டும் என்று ஏதாவது செய்ய நினைத்தால் fake ID  உருவாக்கி உன் மீது பொய் புகார் கூறி உள்ளே தள்ளி விடுவேன் என மிரட்டி 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வாங்கி
ஏமாற்றி மோசடி செய்து பினனை கைதி போல் வைத்திருந்தார். தந்தை இறந்ததற்கு கூட போகக்கூடாது எனக் கூறி அப்படியே போனாலும் இரண்டு மணி நேரத்தில் திரும்பி வந்து விட வேண்டும் என நிர்பந்தம் செய்தார்.
இதன் பின்னர் வேலையை பார்க்கும் மருத்துவமனைக்கு வந்து ஆபாச வார்த்தைகளால் பேசி வந்ததும் இல்லாமல் டிஎஸ்பி என்ற ஒருவரிடம் conference  காலில் பேச வைத்து மிரட்டி வந்தார்.
அது மட்டும் இல்லாமல் பல நபர்களை வைத்து தொடர்ந்து பணம் பறிக்கும் நோக்கத்தில் மிரட்டி வந்ததாகவும்
அது மட்டுமில்லாமல் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களிடமும் தன்னை பற்றி அவதூறாக பேசி வந்ததாகவும் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்ததாகவும் அதன் பின்னர் நந்தினியை பற்றி முழுமையாக விசாரித்த போது நந்தினி பன்னிரண்டாம் வகுப்பு கூட படிக்கவில்லை என்றும் அவர் ஒரு போலி வழக்கறிஞர் என்றும் அவர் மீது தேனி மாவட்டத்தில் சின்னமனூர் போடி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் அதேபோல் ஈரோடு மாவட்டம் பவானி காவல் நிலையத்திலும் நந்தினி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதே போல் திருமணம் ஆகாத பல மாவட்ட இளைஞர்களை குறை வைத்து காதல் வலை விரித்து திருமணம் செய்வதாக பணம் மோசடி செய்து பல வழக்குகள்  இருப்பதாகவும் தெரிந்த பின்பு   தனது  தாயாரிடம் நடந்ததை   கூறியதற்கு தாயார் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் புகார் கொடுக்கலாம் என கூறியதால்  தேனி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்ததாகவும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து கொடுத்த புகாரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரில் குறிப்பாக
போலி வழக்கறிஞர் நந்தினி என்ற பெண்ணால் பாதிக்கப்பட்ட கடைசி இளைஞனாக நானாக இருக்க  வேண்டும்
என்று குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
புகாரின் மீது தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  தேனி காவல்  நிலையத்தில் வழக்குப்பதிவு செய்ய பரிந்துரை செய்ததன் பெயரில் தேனி காவல் நிலையத்தில் நந்தினி உட்பட நான்கு பேர் மீது  பண மோசடி செய்ததாக

(குற்ற எண் 2025/141 )
316(2):
கொலை செய்தல் அல்லது கொலை செய்ய தூண்டுதல் போன்ற குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்படுவது.
318(4):
குழந்தையை கொல்ல அல்லது உயிருக்கு ஆபத்து விளைவிக்க முயற்சித்தல் போன்ற குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்படுவது.
296(B):
பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடத்தல் போன்ற குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்படுவது.
351(2):
தாக்குதல் அல்லது கொலை போன்ற குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்படுவது.
ஆகிய பிரிவுகளில்
வழக்குப்பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக இருக்கும் போலி பெண் வழக்கறிஞர் மற்றும் அவருடன் மோசடியில் ஈடுபட்ட கும்பல்களை  தேனி காவல்துறையினர் தேடி வருகின்றனர் .

எது எப்படியோ போலி பெண் வழக்கறிஞரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்ததால் தான் இதுபோன்று எத்தனை இளைஞர்கள் பணத்தைக் கொடுத்து ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள் என்பது தெரியவரும்.
பணம் பறிக்கும் நோக்கத்தில் திருமணம் ஆகாத இளைஞர்களை குறி வைத்து பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபட்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





*

Related Articles

Back to top button