தேசிய அளவிலான விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத் தொகை
விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுத்தொகைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்.மேகநாதரெட்டி.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்களில் (19.07.2021) விளையாட்டுத்துறை, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஆகியத் துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கும், இரத்த கொடையாளர்களுக்கும்
பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுத்தொகைகளை மாவட்ட ஆட்சியாளர் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டத்தில், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக 2018-2019 -ஆம் ஆண்டு தேசிய அளவில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகள் (டென்னிக்கட், கேரம், பூப்பந்து) ஆகிய போட்டிகளில் பதக்கம் பெற்ற 8 நபர்களுக்கு
தலா ரூ.6000/-வீதம் மற்றும் 3 நபர்களுக்கு தலா ரூ.4000/- வீதம் ஆக மொத்தம் 11 நபர்களுக்கு ரூ.60,000/- க்கான காசோலைகளையும் வழங்கினார்.
மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சார்பாக ‘நான் தொழில் முனைவோரால்” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று நபர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, உலக இரத்த கொடையாளர்கள் தினத்தில் தன்னார்வ இரத்த தானம் செய்தவர்களை ஊக்குவிக்கவும் மற்றும் இரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி இரத்த தட்டுப்பாடு இல்லாத சூழ்நிலையை உருவாக்கவும், ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 14-ம் நாளில் உலக இரத்த கொடையாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.
அதனை முன்னிட்டு இன்று விருதுநகர் மாவட்டத்தில் 2020 – ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக மூன்று முதல் நான்கு முறை தன்னார்வ இரத்ததானம் செய்த 85 இரத்தக் கொடையாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியாளர் வழங்கினார்.
இரத்த தானம் செய்வதன் மூலம் ஒருவருக்கு உயிர் கொடுக்கின்ற அரும்பணியை செய்திருக்கிறீர்கள்.அதற்கு என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
எனவே, இங்கு வருகை புரிந்து இருக்கின்ற அத்துணை இரத்த கொடையாளர்களும் கொரோனா நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல் ஆகியவற்றை பொதுமக்களுக்கும், தங்களை சார்ந்தவர்களுக்கும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி மூன்றாவது அலை வராமல் தடுப்பதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சிகளில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.சங்குமணி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சாந்தா, மாவட்ட குருதி பரிமாற்று அலுவலர் மரு.பாலவிக்னேஷ், இரத்தக் கொடையாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
○reportervision@gmail.com
○www.reortervision.com
○ஜூலை 19/07/21