மாவட்டச் செய்திகள்

தேனி மேகமலையில் தொழிலாளர்கள் குடியிருப்பு என்ற பெயரில் விதிகள் மீறி முறைகேடாக ஆடம்பர சொகுசு விடுதிகள் நடத்தும் தனியார் நிறுவனம்! அதிரடியாக அகற்ற அதிரடி உத்தரவு போட்ட மாவட்ட ஆட்சியர்!

தேனி மேகமலையில் தொழிலாளர்கள் குடியிருப்பு என்ற பெயரில் விதிகள் மீறி முறைகேடாக ஆடம்பர சொகுசு விடுதிகள் நடத்தும் தனியார் நிறுவனம்! ஆய்வு மேற்கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி உத்தரவு!

தேனி மேகமலையில் தொழிலாளர்கள் குடியிருப்பு என்ற பெயரில் விதிகள் மீறி முறைகேடாக ஆடம்பர சொகுசு விடுதிகளை தனியார் நிறுவனம் நடத்துவதாக தேனி மாவட்டம் ஆட்சியரிடம் புகார் கொடுக்கப் பட்டது. அது மட்டுமில்லாமல் பொது தகவல் அதையும் சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்கப்பட்டிருந்தது.


அதற்கு மயிலாடும்பாறை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பதில் அனுப்பியுள்ளார்.

அதில்
தேனி மாவட்டம் மேகமலையில் மூன்று தனியார் எஸ்டேட் களும் மூன்று தனியார் விடுதிகளும் இருப்பதாக பொது தகவல் அரியும் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

புகழ்பெற்ற தேனி மேகமலையில் தொடரும் வினோதங்கள்
சுற்றுச்சூழலை காக்க, மத்திய, மாநில அரசுகளும், இயற்கை ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும்  முன்வரவேண்டும்….. என  பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர்  கோரிக்கை:
கடந்த 2011 ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட, மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான மேகமலையில், தொடர்ந்து தனியார் நிறுவனங்களின் அத்துமீறல்கள் நடந்து கொண்டே இருப்பதாகவும்,
இன்னமும் மாசுபடாத ஒரு பகுதியாக விளங்கும் மேகமலையில்,கட்டிடங்களுக்கான  முறையான வரைமுறை என்பது இன்னமும் முறைப்படுத்தப்படாமலேயே இருப்பதாகவும்,
மேகமலை பஞ்சாயத்தில் பெறும் வரைபடங்களை மட்டுமே வைத்துக் கொண்டு, என்ன வேண்டுமானாலும் அந்த புலிகள் சரணாலயத்திற்குள் செய்துவிட முடியும் என்று சிலர் நம்புவதாகவும்,
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை வனப்பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டு, ஓராண்டை கடந்த பிறகும்,இன்னமும் அது தன் வனவளத்தை முழுமையாக பெறவில்லை என்றே கருதுவதாகவும்,
தேசிய புலிகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குச் சென்று விட்ட நிலையிலும் கூட, அதன் பசுமைத் தன்மையை நம்மால் காப்பாற்ற இயலவில்லை என்றும், நாட்டில் காடுகளின் பரப்பை அதிகரிக்க வேண்டும் என்கிற குரல்கள், நமது இந்திய  பிரதமர் அலுவலகத்திலிருந்தே, வந்துவிட்ட பிறகும் கூட, பண பலம் மற்றும் அரசியல் செல்வாக்கு காரணமாக, தனியாரால் வரம்புமீறி, விதிமுறைகளை மீறி, மேகமலை வனப்பகுதிக்குள் வனத்துறையினரின் மாமூல் இசைவுடன், ரிசார்ட் கட்டிடங்களை  சொகுசு ஆடம்பர விடுதி கட்டி,  வணிகப்பயன்பாட்டிற்குபயன்படுத்தப்படுவதாகவும், இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு, நடவடிக்கை எடுக்க வேண்டி புகார் தெரிவிக்கவே, தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளிதரன் சட்டத்திற்குப் புறம்பாக, விதிமுறைகளை மீறி, கட்டப்பட்ட தங்கும் விடுதிகளின்  கட்டிடங்களை அகற்றுவதற்கு, முறையாக நடவடிககை எடுத்த நிலையில், தற்போது விதிகள் மீறி சொகுசு ஆடம்பர விடுதிகள் நடத்தும் தனியார் நிறுவனம் சென்னை உயர் நீதிநீதிமன்ற மதுரை கிளையில் எதிர்த்து வழக்கு தொடுத்து உள்ளனர் . அதில் ஆடம்பர சொகுசு விடுதியை நடத்தவில்லை என்றும் எங்கள் நிறுவனத்தில் பணி செய்யும் ஊழியர்கள்   தங்கும் விடுதியாக தற்போது இருக்கிறது என்றும் ஆகவே ஆட்சியாளர் அறிவித்துள்ள அறிவிப்புக்கு ரத்து செய்யுமாறு தாக்கல் செய்யப் பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிபதி அறிவிப்பை ரத்து செய்ய முடியாது என்ற உத்தரவு பிறப்பித்த நிலையில் மறுபடியும் மேல் முறையீடு தாக்கல் செய்யப் பட்ட நிலையில் விசாரணைக்கு வந்த போது வரும் 23ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் மற்றும் தேனி மாவட்ட வனஅலுவலர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நிலையில் வழக்கறிஞர் ஆணையம் அமைத்து தேனி மாவட்ட வனத்துறையினர் உடன் மேக மலைக்கு சென்று வழக்கு சமந்தமான தனியார் கட்டிடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வழக்கறிஞர் ஜானகி அவர்களை நியமித்து உத்தரவு பிறப்பித்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது சம்மந்தமாக கள ஆய்வு மேற்கொண்ட போது பல திடுக்கிடும் தகவல்களை அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூரிய போது
கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர்கள்,  மேகமலையில் பட்டா நிலங்களை வாங்கி இருப்பதாகவும்  கூறப்படுகிறது.
மேகமலை, கட்டுப்பாடற்ற வனமாக மாறிவிட்டதாகவும், மேகமலையில், அடுத்தடுத்த மாற்றங்கள் நிகழ்ந்து வருவது  தெரிவதாகவும், கட்டிடம் கட்டுவதில் ஏற்பட்ட போட்டியில், .நீதிமன்றத்திற்கு ஒருவர் செல்ல, பதிலுக்கு நாங்களும் பொருட்களை கொண்டு செல்ல முடியவில்லை என்று இன்னொருவரும் மனு செய்ய, இறுதியில்,
வழக்கறிஞர்  தலைமையில், வழக்கறிஞர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு, விரைவில் மேகமலையில் விசாரணை தொடங்க இருப்பதாகவும்,
அதில் ஒருவர் தான், தொழிலாளர்கள் தங்குவதற்கான கட்டிடத்தை கட்டி இருப்பதாக, தனது தரப்பு வாதமாக வைத்திருப்பது என்று கூறுவதும்
ஆனால் அது  சொகுசு விடுதியாக நடத்தப்படுவதற்கான  நிலை  இருந்தும், தன்னிடம் பணி புரியும் தொழிலாளர்கள் தங்குவதற்கான கட்டிடம் என்று அதை வகைப்படுத்தி  சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில்,  முறையிட்டிருப்பதாகவும்,
அதை முழுமையாக விசாரிக்க, மாண்பமை. நீதிஅரசர்கள் மகாதேவன், சத்யநாராயணபிரசாத் அமர்பு முன்பு விசாரனைக்கு வந்த நிலையில், மேகமலையில் சட்டத்திற்கு புறம்பாக, பத்திற்கும் மேற்பட்ட ரிசார்ட்டுக்கள் கட்டப்பட்டுள்ளதாகவும். அதில் மனுதாரரின் ரிசார்ட்டும் ஒன்று என்றும், அரசு தரப்பில், தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்,,வழக்கறிஞர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டிருப்பதாகவும், தேனி மாவட்ட ஆட்சித் தலைவர், தேனி மாவட்ட வனத்துறையினர் உள்ளிட்டோரும் , பதிலளிக்க, உத்தரவிட்டுள்ள நிலையில், (வழக்கறிஞர் ஜானகி) வழக்கறிஞர் (விசாரணை) கமிஷன்,தேனி மாவட்ட வனத்துறையுடன், மேகமலையில் கட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள  அக்கட்டிடம் ரிசார்ட்டா? அல்லது  தொழிலாளர்களுக்கான குடியிருப்பா?? என்பதை கள ஆய்வு செய்திடவும், தொடர்புடைய ஆவணங்களையும் ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை தாக்கல் செய்திட, உத்தரவிட்டுள்ள நிலையில், வழக்கறிஞர் (விசாரணை) கமிஷன் களஆய்வு மேற்கொள்ள இருக்கின்ற நிலையில், பொதுநலன் கருதி,நீண்ட காலமாக அது குறித்து பேசியும், எழுதியும் வந்த நல்ல, வெள்ளை உள்ளம் கொண்ட  நல்லோர்கள் சமூக ஆர்வலர்கள்
வழக்கறிஞர் விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகி, மேகமலையில் உள்ள சொகுசு விடுதிகளின் உண்மைத் தன்மை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாகவும், அந்த கட்டிடம், சொகுசு விடுதி தான் என்பதை நிரூபிக்க, அத்தனை ஆவணங்களையும் கடந்த ஓராண்டாக சேகரித்து வைத்திருப்பதாகவும்,
*Meghamalai is not a commercial area* என்கிற ஒற்றை சொல்லை உறுதிப்படுத்துவதற்காக, களத்தில் நிற்க இருப்பதாகவும்,
Clean meghamalai
என்ற நிலையில், அவர்களது அறிக்கையில், தனியார்  நடத்தும் மூன்று  சொகுசு விடுதிகளும் அடங்கும் என்றும், கூறப்படுகிறது.
சுற்றுச்சூழலை காக்க, மேகமலையை காக்க, பசுமையைக் காக்க, மத்திய, மாநில அரசுகளும், இயற்கை ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும், முன்வர வேண்டும், என்று பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button