தொடர் மணல் கொள்ளையால் அழிந்துவரும் குடகனாறு வழித்தடம் அதிர்ச்சி வீடியோ!கண்டுகொள்ளாமல் கல்லா கட்டும் திண்டுக்கல் மாவட்ட வருவாய்த்துறை நிர்வாகம்!
மீட்டெடுக்க நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!

தொடர் மணல் கொள்ளையால் அழிந்துவரும் குடகனாறு வழித்தடம் : அதிர்ச்சி வீடியோ!
கண்டுகொள்ளாமல் கல்லா கட்டும் திண்டுக்கல் மாவட்ட வருவாய்த்துறை நிர்வாகம்!
மீட்டெடுக்க நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!
.
தமிழகத்தின் இயற்கை வளக் கொள்ளையில் மிக முக்கியமானது ஆற்று மணல் கொள்ளை . இந்த மணல் கொள்ளையால் மிக மிக அதிக லாபம் கிடைப்பதால் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா குடகனாறு ஆற்றில் அரசின் உத்தரவை மீறி இரவு பகல் பாராமல் மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெற்று வரும் வீடியோ காட்சிகளை சமூக ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

திண்டுக்கல் நகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆத்தூர் நீர்த் தேக்கத்தின் மொத்த உயரம் 23.5 அடி.ஆகும்.
காமராஜர் நீர்த்தேக்கம் வழியாக குடகனாறு வந்து கொண்டிருக்கிறது.

இந்த ஆறு திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் குடகனாறு கரை உள்ளது. சீவகரகு ஊராட்சி, வீரகரகு ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் இந்த குடகனாறு ஓடுகிறது. இந்த ஆற்றின் நீர்வரத்துக்கு மாங்கரையாறு, சந்தனவர்த்தினி ஆறு, வரட்டாறு, மான்கோம்பையாறு ஆகிய சிற்றாறுகள் முக்கிய பங்கு வகிக்கிறது
ஆத்தூர் தாலுகா மல்லையபுரம், வீரக்கல், அனுமந்தராயன்கோட்டை, மயிலாப்பூர் உட்பட 300க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக வேடசந்தூர் அழகாபுரி அணையை அடைகிறது. அங்கிருந்து கரூர் அருகே காவிரியில் கலக்கிறது
குடகனாறு.
குடிநீருக்கும் விவசாயத்திற்கும் பல ஆண்டுகளாக குடகனாறு ஆற்றை மட்டுமே நம்பி வாழ்கின்றனர்.
110 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் இந்த ஆற்றின் மேல்பகுதியில் நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் என்ற இடத்தில் தடுப்பு அணை கட்டப்பட்டுள்ளது.

குடகனாறு குறுக்கே கட்டப்பட்ட நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் தடுப்பணையை அகற்ற வேண்டும் என்பது இந்த ஆற்றை நம்பிய பாசன பகுதி மக்களின் கோரிக்கை. இந்த தடுப்பணையால் குடகனாற்றின் முகத்துவாரத்தில் இருந்து காமராசர் நீர்த்தேக்கம் உபரி நீர் வெளியேறும் இடம் வரை ஆற்றின் வழித்தடமே காணாமல் போய்விட்டது.
கடந்த 8 ஆண்டுகளாக வெள்ள காலங்களில் கூட குடகனாறு ஆறு பாலைவனமாகவே காட்சி அளிக்கிறது என விவசாய பொதுமக்கள் வேதனை தெரிவித்து வரும் நிலையில்
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் உள்ள குடகனாற்றில் தொடர் மணல் வெட்டி கடத்தி கொள்ளையடித்து வருவதால் குடகனாறு கரைகள் அழிந்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சீவகரகு ஊராட்சி, வீரகரகு ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் இந்த குடகனாறு ஓடுகிறது. இந்த ஆற்றின் நீர்வரத்துக்கு மாங்கரையாறு, சந்தனவர்த்தினி ஆறு, வரட்டாறு, மான்கோம்பையாறு ஆகிய சிற்றாறுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுமட்டுமில்லாமல் திண்டுக்கல் நகரின் குடிநீர் ஆதாரமான ஆத்தூர் நீர்த்தேக்கம் உள்ளது.
இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் குடிநீருக்கும் விவசாயத்திற்கும் பல ஆண்டுகளாக குடகனாறு ஆற்றை மட்டுமே நம்பி வாழ்கின்றனர்.
ஆத்தூர் தாலுகாவில் அமைந்துள்ள காமராஜர் நீர்த்தேக்கத்திலிருந்து ஆத்தூர் வழியாக அக்கரைப்பட்டி வேல கவுண்டன்பட்டி வீரக்கல் அனுமந்தராயன் கோட்டை முத்தனம் பட்டி தாடிக்கொம்பு வேடசந்தூர் வழியாக சென்று அழகாபுரி அணையை சென்றடைகிறது காமராஜர் நீர்த் தேக்கத்திலிருந்து வெளியேறும் இந்த உபரி நீர்
குடகனாற்று நீர்ப்பாசனத்தை நம்பி இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குக்கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும்
ஆயிரக்கணக்கான ஏக்கர் நீர்ப்பாசன வசதி பெரும் விவசாய நிலங்களும் இப்பகுதியில் உள்ளது
ஏற்கனவே ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேறும் உபர நீரின் இயற்கையான வழித்தடத்தை தடுத்து வத்தலகுண்டு அய்யம்பாளையம் போன்ற பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதை கண்டித்து


குடகனாறு பாதுகாப்பு சங்கத்தினர்ரும் பொதுமக்கள் விவசாயிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கடந்த அதிமுக ஆட்சியில் இதேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது
ஆத்தூர் தாலுகா
வீரக்கல் குடகனாற்று பகுதியில்
இரவு பகலாக மணல் மாபியா கும்பல் ஜேசிபி இயந்திரங்களை வைத்து மினி லாரி டிராக்டர் மூலம்
மணலை வெட்டி எடுத்து கடத்தி வருவதால் குடகனாறு ஆற்று நீரை நம்பி உள்ள விவசாய நிலங்கள் தற்போது விவசாயம் செய்ய முடியாமல் பொய்த்து போய்விட்டது. இது தொடர்பாக பல்வேறு கட்டங்களாக அரசிடம் புகார் தெரிவித்தும் பயனில்லை. கடந்த 3 ஆண்டுகளாக இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சாலை மறியல், வீடுகளில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் புறக்கணிப்பு என பல போராட்டங்கள் நடத்திய மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஆத்தூர் வட்டாட்சியர் வடிவேல் முருகன் மௌனம் காத்து வருகின்றனர் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆற்று வழித்தடங்களில் தொடர் மணல் வெட்டி எடுத்துக் கடத்துவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்படுகிறது .

என்று விவசாயிகள் மிகவும் வேதனையுடன் தங்கள் கவலையை தெரிவிக்கின்றனர் .
ஒரு சில அரசியல் கட்சியினர் தங்களது சுயலாபத்திற்காக
மணல் கடத்தலுக்கு உடந்தையாக செயல்படுவதாகவும் சமூக ஆர்வலர் குற்றச்சாட்டை வைக்கின்றனர்.
அதுபோக இந்த
குடகனாற்று நீரை நம்பி குடகனாற்று கரையோரப்பகுதியான சீவல்சரகு
எஸ் பாறைப்பட்டி வீரக்கல் பித்தளைபட்டி அனுமந்தராயன் கோட்டை முத்தனம் பட்டி
மயிலாப்பூர்
ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இந்த குடகனாற்று நீர் பயன்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர் . ஆற்றில் நீர்வழி பாதைகளில்
தொடர் மணல் வெட்டி கடத்தப்பட்டு வருவதால் நீர்வரத்து அடியோடு தடைபடுகிறது என்ற குற்றச்சாட்டை வைக்கின்றனர் விவசாயிகள்.
குடிநீருக்காக குடகனாற்று கரையோரப் பகுதிகளில் உரை கிணறுகள் பல உள்ளன.
இந்த மணல் கொள்ளையால் அந்த உரைக்கிணறுகள் பாதிக்கப்படுவதோடு ஆற்றின் கரைப் பகுதியும் பெருவாரியாக பாதிக்கப்பட்டுள்ளது
ஆனால் இதையெல்லாம்
அரசு கண்காணிக்க வேண்டிய திண்டுக்கல் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் இயற்கை வளங்களை அழித்துக் கொள்ளையடிக்கும் மணல் மாபியாக்களுக்கு அடி பணிந்து விட்டனரா என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் எழுப்பி உள்ளனர்.
எப்பொழுது தான் மணல் கொள்ளையை முற்றிலும் தடுத்து நிறுத்தப் படுமோ,!? விவசாயிகளுக்கு விடியல் காலம் எப்போதுதான் பிறக்குமோ என்று ஒருவித அச்சத்துடனே வாழ்வதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
விவசாயத்தை நம்பி இருக்கும் விவசாயிகளின் கோரிக்கைகளை செவி கொடுத்து கேட்காத திண்டுக்கல் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் இனிமேலாவது நடவடிக்கை எடுப்பாரா !?
அப்படி நடவடிக்கை எடுக்காத பட்சத்தில்
விவசாயத்தை நம்பி இருக்கும் குடகனாறு நீர்ப்பாசன ஆற்றுப்படுகையில் தொடர்ந்து நடக்கும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மணல் கொள்ளையர்கள் இடம் கையூட்டு பெற்றுக் கொண்டு
திமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் உள்ள நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில் செயல்படும் அதிகாரிகள் மீது
தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் விவசாயிகள் அனைவரின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.