நடமாடும் நகை கடையாக உல்லாசமாக வளம் வரும் பெண் கிராம நிர்வாக அலுவலர் !நடவடிக்கை எடுக்காத வேலூர் மாவட்ட ஆட்சியர்!
ஒருவர் நிலம் வாங்கினாலும் இடம் வாங்கினாலும் உட்பிரிவுடன் கூடிய பட்டா இல்லை என்றால் தானாகவே பட்டா மாறுதல் செய்யப்பட்டுவிடும்.
நடமாடும் நகை கடையாக உல்லாசமாக வளம் வரும் பெண் கிராம நிர்வாக அலுவலர்!.. நடவடிக்கை எடுக்காத வேலூர் மாவட்ட ஆட்சியாளர்!
ஒருவர் நிலம் வாங்கினாலும் இடம் வாங்கினாலும் உட்பிரிவுடன் கூடிய பட்டா இல்லை என்றால் தானாகவே பட்டா மாறுதல் செய்யப்பட்டுவிடும்.
ஆனால் முன்பு வாங்கிய நிலங்கள், உட்பிரிவுடன் கூடிய பட்டா என்றால் தனியாகவே அந்த இடத்திற்கோ நிலத்திற்கோ வாங்க வேண்டியதிருக்கும். இதற்கு முன்பு பட்டா மாறுதல் மற்றும் சப்-டிவிஷன் செய்வதற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வேண்டும். அப்படி மனு கொடுக்கும் பொதுமக்கள் தங்கள் மனு மீது நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்வதாகவும் இதற்காக மனு கொடுத்த பொதுமக்கள் பல முறை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டியது இருப்பதாகவும் அதுமட்டுமில்லாமல் வட்டாட்சியர் அலுவலகத்தில் எந்த சான்றிதழ் பெற வேண்டும் என்றாலும் குறிப்பாக பட்டா மாறுதலுக்கு லஞ்சம் கேட்பதாகவும் என தமிழக முதல்வர் தனிப்பிரிவுக்கு பல புகார்கள் வந்ததால் இன்றைக்கு வருவாய்த் துறையில் அனைத்து சான்றிதழ்களும் வழங்க குறிப்பாக பட்டா மாற்றம் செய்ய சுலபமான முறையில் இ-சேவை மையத்தில் பணம் கட்டி விண்ணப்பிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இ-சேவை மையத்தில் நிலத்திற்கு பட்டா வாங்க விண்ணப்பித்து விட்டீர்கள் என்றால், அடுத்த சில நாட்களில் உங்கள் நிலத்தை அளக்க சர்வேயர் இந்த தேதியில் நேரில் வந்து நிலத்தை பார்வையிடுவார் என்று அரசின் சார்பில் உங்கள் விண்ணப்ப படிவத்திலுள்ள மொபைல் நம்பருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். ஆனால் அதன் பின்னர் எந்த வேலையும் நடப்பதில்லை என்றும் என்னதான் ஆன்லைனில் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தாலும் வேலை நடக்க வேண்டும் என்றால் வருவாய் துறையிலுள்ள கிராம நிர்வாக அலுவலர் முதல் வட்டாட்சியர் சர்வயேர், கிராம நிர்வாக உதவியாளர் வரை கவனிக்க வேண்டியதை கவனித்தால் மட்டும்தான் நாம் கொடுத்துள்ள மனு மீது, அடுத்தகட்டமாக வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியர் பார்வைக்கு அனுப்பப்படுகிறது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கு உதாரணமாக வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகாவில் விவசாயிகள் பொதுமக்கள் பல்வேறு சான்றிதழ்களை பெறுவதற்கு வருவாய்த் துறையைச் சார்ந்த கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர்.
வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் பொதுமக்கள் எப்படியாவது வேலை முடிந்தால் போதும் என்றும் அதற்காக பணம் செலவு செய்தாவது அந்த வேலையை முடித்து விட வேண்டும் என்று ஒரு சில இடைத்தரகர்களை வைத்து முயற்சி செய்வார்கள். இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வருவாய்த்துறை அதிகாரிகள் குறிப்பாக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் துணை வட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகிய மூன்று பேரும் பட்டா மாறுதல் என்றால் நிலத்தின் மதிப்பிற்கு ஏற்றபடி சுமார் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை லஞ்சம் வாங்குவதாகவும் அதைவிட கொடுமையானது என்னவென்றால் ஆதரவற்ற முதியோர்கள் தங்களுக்கு முதியோர் பென்ஷன் கிடைக்க வேண்டும் என வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுத்தால் அதற்கு 5000 வரை லஞ்சம் வாங்கிக் கொண்டுதான் முதியோர் உதவித் தொகை வழங்க வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து தமிழக அரசுக்கு பரிந்துரை செய்கிறார்கள் என்று அதிர்ச்சியான தகவலும் வந்துள்ளது. காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடக்கும் தொடர் அவலங்களை தடுத்து நிறுத்த வேண்டிய வேலூர் மாவட்ட ஆட்சியாளர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் கண்டும் காணாமலும் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதற்குக் காரணம் வருவாய்த் துறையில் இடைத்தரகர்களை வைத்து வாங்கும் லஞ்சப்பணம் கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை குறிப்பாக வருவாய்த் துறையிலுள்ள உயர் அதிகாரிகளுக்கு பிரித்து கொடுக்கப்படுவதாகவும் அதனால்தான் கிராம நிர்வாக அலுவலகங்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடக்கும் ஊழல் முறைகேடுகளை பற்றி சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியாளர் மற்றும் வருவாய்த்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தாலும் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கண்டும் காணாமல் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழ்நாட்டில் வருவாய்த்துறை என்ற பெயர் வைத்ததாலோ என்னவோ வருவாய் இல்லாமல் எந்த வேலையும் வருவாய்த் துறையில் பணியில் இருக்கும் அனைவரும் வருவாய் இல்லாமல் எந்த வேலையையும் செய்வதில்லையோ என்ற சந்தேகத்தை சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்சம் தவிர் என்ற வாசகத்துடன் பதாகை வைக்கப்பட்டிருக்கும். அந்தப் பதாகை எதற்கு வைக்கப்பட்டது என்று கடவுளுக்கு தான் வெளிச்சம்!
அரசு சட்ட திட்ட விதிமுறைகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு சிம்ம சொப்பனமாக திகழும் வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகாவிலுள்ள வண்டரந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் நிவேதா குமாரி மீது பல குற்றச்சாட்டுகள் தற்போது எழுந்துள்ளது. வண்டரந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலராக இருக்கும் நிவேதா குமாரியின் தந்தை பெயர் சம்பத். இவரது தந்தை சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு கழிஞ்சூர் கிராம நிர்வாக அலுவலத்தில் தலையாரியாக பணியில் இருந்த போது இறந்ததால் வாரிசு கருணை அடிப்படையில் நிவேதா குமாரி-க்கு கிராம நிர்வாக அலுவலர் பணி வழங்கப்பட்டது. ஒருங்கிணைந்த காட்பாடி தாலுகாவாக இருந்த போது வடுகன்தாங்கல் கிராம நிர்வாக அலுவலராக பணியில் சேர்ந்தார். அதன் பின்பு மூன்று வருடம் கழித்து காங்கேயநல்லூர் கிராம நிர்வாக அலுவலராக பணியிடம் மாற்றம் செய்ப்பட்டார். அதன் பின்பு கரசமங்கலம் கிராம் நிர்வாக அலுவலராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். தற்போது வண்டரந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலராக பணியில் இருந்து வருகிறார். அது மட்டுமில்லாமல் தற்போது தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் காட்பாடி வட்டத் துணைத் தலைவராக இருக்கிறார். ஆகையால் வண்டரந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலகத்திற்கே வருவது இல்லை என்றும் அப்படியே ஒரு சில நேரங்களில் வந்தாலும் ரியல் எஸ்டேட் செய்யும் தொழிலதிபர்கள் மற்றும் நிலம் வாங்கிக் கொடுக்கும் இடைதரகர்களை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு பட்டா மாறுதல் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு தேவையான மனை பிரிவு விற்பனை செய்வதற்கு ஆவணங்களை தயார் செய்து கொடுத்து வருவதற்கு காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள சில கருப்பு காடுகளின் உடந்தையுடன் தில்லாலங்கடி வேலைகளை செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இவரைப் பற்றி குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் ஏற்கனவே பணியாற்றிய இடங்களில் எல்லாம் எந்த ஆவணங்களும் இல்லாமல் பட்டா மாற்றி கொடுத்து பல லட்சம் ரூபாய் லஞ்சமாக பெற்று இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதுமட்டுமில்லாமல் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு செய்பவர்களிடம் அரசு புறம்போக்கு இடங்களை தேடிப்பிடித்து தகுதி இல்லாத தனி நபர்களிடம் 30 ஆயிரம் ரூபாய் வரை கையூட்டுப் பெற்றுக் கொண்டு வீட்டுமனை பட்டா வழங்கி வருவதாகவும் இதற்கு வட்டாட்சியர் முதல் வருவாய் துறையில் மாவட்ட அளவிலுள்ள ஆர்.டி.ஓ , டி.ஆர்.ஓ உயர் அதிகாரிகளும் ஆதரவாக இருப்பதாகவும் அதனால் என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என பெண் கிராம நிர்வாக அலுவலர் நிவேதா குமாரி மார்தட்டி பேசி வருவதாக வருவாய்த்துறை அலுவலகத்திலுள்ள ஒரு சில நேர்மையான அதிகாரிகள் பரவலாக பேசி வருவது தகவல் கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் பெண் கிராம நிர்வாக அலுவலர் நிவேதா குமாரி கிராம நிர்வாக அலுவலரின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது என்றும் அலுவலகத்திற்கு நிவேதா குமாரி வரும்போது லஞ்சம் வாங்கிய பணத்தில் வாங்கி வைத்துள்ள எல்லா நகைகளையும் கழுத்தில். அணிந்து கொண்டு நடமாடும் நகை கடை போன்று உல்லாசமாக சுற்றி வரும் ஒரே பெண் கிராம நிர்வாக அலுவலர் தமிழகத்திலேயே இவர் ஒருவர் தான் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கின்றனர். இவர் கிராம நிர்வாக அலுவலரா இல்லை நகை கடையின் விளம்பர நடிகையா!? என்பது புரியாத புதிராக உள்ளது என அப்பகுதி மக்கள் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அதேபோல் பெண் கிராம நிர்வாக அலுவலர் நிவேதா குமாரி அலுவலகத்திற்கு எப்போவது வரும் போது அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களிடம் மிக கேவலமாக தரக்குறைவாக நடந்து கொள்வதாகவும் உங்களுக்கு வேறு வேலை இல்லையா என் உயிரை ஏன் உயிரை எடுக்கவே வருவீர்களா உங்களுக்கு வேற வேலை இல்லையா என மிகவும் கொடூரமாக கேவலமாக மிரட்டும் தோனியில் பேசுவதால் பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு போகவே அச்சப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். லஞ்சப் பணம் வாங்கி லஞ்சத்தில் ஊறிப்போன பெண் கிராம நிர்வாக அலுவலர் நிவேதா குமாரி உறவினர்கள் மற்றும் பினாமி பெயர்களில் பல கோடி ரூபாய்க்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கி வைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் கிராம நிர்வாக அலுவலர் நிவேதா குமாரி மீது மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் ஒரு சில சமூக ஆர்வலர்கள் புகார் கொடுத்தும் இவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ஆகவே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறும் குற்றச்சாட்டு உண்மையா என்பதை கண்டுபிடிக்க லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக தெரிகிறது. ஆகவே லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் காட்பாடி தாலுகாவுக்குட்பட்ட கிராம நிர்வாக அலுவலகங்களில் குறிப்பாக நிவேதா குமாரி பணியில் இருக்கும் வன்றந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தீவிரமாக கண்காணித்தால் மட்டுமே லஞ்ச ஊழல் முறைகேடு மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சேர்த்து வைத்துள்ள குறிப்பாக உறவினர்கள் மற்றும் பினாமிகள் பெயர் சொத்துக்களை கண்டுபிடிக்க முடியும். பெண் கிராம நிர்வாக அலுவலர் நிவேதா குமாரி லஞ்ச ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருக்கிறார் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை செய்த பின்பு தெரியவரும் பட்சத்தில் கிராம நிர்வாக அலுவலர் நிவேதா குமாரி மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தால் மட்டுமே தமிழகத்திலுள்ள ஒட்டுமொத்த கிராம நிர்வாக அலுவலகங்களில் நடக்கும் லஞ்ச ஊழல் முறைகேடுகள் நடக்காமல் தடுத்து நிறுத்த முடியும். அதுமட்டுமில்லாமல் பொதுமக்கள் தங்களுடைய தேவைகளுக்காக கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் வருவாய்த்துறை அலுவலகங்களுக்கு அச்சம் இல்லாமல் சென்று வர முடியும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் நடவடிக்கையை!