திமுகவில்இணையும்நாம் தமிழர் கட்சித்தொண்டர்கள் !!
சீமான் மற்றும் அவர் தொண்டர்கள் … இழித்தும் பழித்தும் எத்தனை எழுத்துக்கள் பேச்சுக்கள்.. எவ்வளவு கேலிகள் கிண்டல்கள் செய்து விமர்சித்து வந்த நிலையில்
அத்தனையும் உடைத்து சுக்கு நூறாக்கி நம்பிக்கைக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கி உயர்ந்து நிற்கிறார் .இன்றைய நமது முதல்வர் ஸ்டாலின் அவர்கள்.
உழைப்பும் உறுதியும் உண்மையும் இணைந்தால்… அவனைத் தடுக்க உலகத்தில் எந்த சக்தியாலும் முடியாது என்கிற வள்ளுவர் வாக்கை நிறைவேற்றி நம மக்கள் முன்பு வெற்றிவாகை சூடி தமிழ் இனத்தின் அடையாளமாக நிற்கிறார் தளபதி ஸ்டாலின்… தேர்தலுக்கு முன்னே ஸ்டாலின் அவர்களை நாம் தமிழர் கட்சியும் அதன் தலைவர் சீமான் அவர்களும் கடுமையாக விமர்சித்த போது… புன்னகையை மட்டுமே பதிலாக தந்தவர் திரு ஸ்டாலின் அவர்கள்…
காலம் மாறுது காட்சிகள் அதைவிட வேகமாக மாறுகிறது… சீமானே முதல்வர் அவர்களையும் திமுகவையும் பாராட்டிய நிலையில்ல
தற்போது நாம் தமிழர் தொண்டர்கள் திமுகவில் இணைய துவங்கிவிட்டார்கள்.
இது ஸ்டாலின் அவர்கள் செய்த மாபெரும் புரட்சி… இன்னும் புரட்சிகள் காத்திருக்கிறது பொறுத்திருந்து பார்ப்போம்… .
ஸ்டாலின் அவர்களின் கடுமையான உழைப்பும் கொள்கைப் பற்றும் மக்கள் மீது அவர் காட்டும் பரிவும் பாசமும் மிகச்சிறந்த தமிழகத்தை அமைக்கும் என்பதை சொல்லாமல் சொல்லுகிறது.
தமிழன் நாஞ்சில் சாம்ஸ்..