பணமா & பதவியா !? தலைவர் பதவிக்கு காத்திருக்கும் சவால்கள்!??மதுரை சோழவந்தான் பேரூராட்சி தலைவர் & துணைத் தலைவர் பதவிக்கு கடும் போட்டி!
குதிரை பேரம் ஆரம்பம்!பதவியில் இருப்பவர்கள் மீது புகார் வந்தால் உடனே நடவடிக்கை ஸ்டாலின்!!

ஊரக நகராட்சித் தேர்தலில் வெற்றிபெற்றவர்களை மார்ச் 4ம்தேதி மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி தலைவர் துணைத் தலைவர் பதவிகளை திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் அறிவிக்க உள்ளதாக தகவல்.அந்தந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் வெற்றி பெற்ற வேட்பாளர்களை அழைத்துஆலோசனை நடத்தி தலைவர்& துணைத்தலைவர் பட்டியல்களை திமுக தலைமைக் கழகத்திற்கு அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பிய பட்டியலை தலைமை கழகம் சரிபார்த்து தலைவர் துணைத்தலைவர் பெயர்களை வெளியிட உள்ளதாக தகவல்!
திமுக தலைவர் வேண்டுகோள்!!வெற்றியை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் .திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்!

தலைவர் பதவி வகிப்பவர்கள் மீது பொதுமக்கள் புகார் வந்தால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன்….
ஸ்டாலின் !
ஒன்பது மாத கால திராவிட மாடல் ஆட்சிக்குத் தமிழ்நாட்டு மக்கள் அளித்துள்ள நற்சான்றிதழ்தான் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்.
வெற்றியால் கர்வம் கொள்ளவில்லை; பொறுப்புகள் கூடியிருப்பதையே உணர்கிறேன்!
மக்கள் என் மீது வெளிப்படுத்தியுள்ள நம்பிக்கையைக் காப்பாற்ற உழைப்பேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
நடந்து முடிந்துள்ள. ஊரக நகராட்சி தேர்தல் முடிவுகள் வந்த நிலையில்
21 மாநகராட்சிகள்
132 நகராட்சிகள்
435 பேரூராட்சிகளில் திமுக கைப்பற்றி உள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் வாடிப்பட்டி இரண்டு பேரூராட்சிகளிலும் திமுக அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் முன்னாள் இந்நாள் அமைச்சர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் திமுக அதிமுக கட்சிகள் குறைந்தது ஒரு பேரூராட்சிக்கு 5 கோடி வரை செலவு செய்துள்ளதாக அதிர்ச்சித்தகவல் வந்துள்ளது. இரண்டு கட்சி வேட்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்தது.
ஆனால் தேர்தல் முடிவில் இரண்டு கட்சிகளுக்குமே மிகப்பெரிய வெற்றி கிடைக்கவில்லை என்பதுதான் நிதர்சனம்!




இரண்டு பேரூராட்சிகளிலும் உள்ள அதிமுக திமுக நிர்வாகிகள் எப்படியாவது பேரூராட்சியை கைப்பற்ற வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் தகவல் வந்துள்ளது. பேரூர் ஆட்சியைக் கைப்பற்ற வெற்றி பெற்ற ஒருவருக்கு ஒரு கோடி வரை தரவும் தயாராக இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது! தேர்தலுக்கு முன்பு வாடிப்பட்டியில் அதிமுக வேட்பாளர் மனுவை வாபஸ் பெற்று திமுகவில் இணைந்தார் அதேபோல் சோழவந்தான் அதிமுக வேட்பாளர் தேர்தலுக்கு முதல் நாள் திமுகவில் இணைந்ததது குறிப்பிடத்தக்கது! இவர்களுக்கு திமுக சார்பில் 5 லட்சம் வரை கொடுக்கப்பட்டதாகவும் விமர்சனம் எழுந்தது.
சோழவந்தான் பேரூராட்சியை தக்க வைக்க கடும் போட்டி!
குதிரை பேரத்தில் இரண்டு வேட்பாளர்கள் திமுக வசம் தஞ்சம் அடைந்தனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 18-வார்டு தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளின் எண்ணிக்கை…
திமுக 8
அதிமுக 6
சுயேட்சை 3
அ மா முக 1
சோழவந்தான் பேரூராட்சித் தலைவர் வேட்பாளராக அதிமுக கணேசன் அவர்கள் வெற்றி பெற்ற நிலையில் பேரூர் ஆட்சியை கைப்பற்ற முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது!
சோழவந்தான் பேரூராட்சியை திமுக கைப்பற்ற இரண்டு பேர் தேவைப்பட்ட நிலையில் திமுக அமைச்சர் மூர்த்தி அவர்களை சந்தித்து இரண்டு பேர் திமுகவுக்கு ஆதரவு தந்துள்ளார்.
1வது வார்டில் சுயேட்ச்சையாக போட்டியிட்டு வெற்றி்பெற்று ஈஸ்வரி திமுகவில் இணைந்தார்.
9 வது வார்டில் வெற்றி பெற்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக கவுன்சிலர் சத்யபிரகாஷ்

தற்போது திமுக வசம் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து உள்ளது.
சோழவந்தான் பேரூராட்சி தலைவர் யார்!??
திமுக அமைச்சர் மூர்த்தி அவர்கள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்!?
மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் வாடிப்பட்டி பேரூராட்சிகளில் தேர்தல் முடிவுகள் வந்த நிலையில் வாடிப்பட்டி பேரூராட்சியில் 18 இடங்களில் திமுக 10 இடங்களை தன் வசம் வைத்துள்ளது.
இந்த நிலையில் திமுக கைவசம் தற்போது 10 பேர் உள்ள நிலையில் மீதமுள்ள இரண்டு சுயேச்சை வேட்பாளர்களின் ஆதரவையும் கேட்டுள்ளதாகவும் தகவல்.
ஆனால் அவர்கள் எந்தக் கட்சிக்கும் ஆதரவு தராமல் நடுநிலையாக இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது. ஆனால் திமுகவிற்கு ஆதரவு அளித்த அமமுக வேட்பாளர் தனக்கு துணைத் தலைவர் பதவி வேண்டும் என்று கேட்டதாக தகவல் வந்துள்ளது அதுமட்டுமில்லாமல் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் தோல்வி அடைந்ததால் தற்போது தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வருவதாகவும் தகவல் வந்துள்ளது இந்த நிலையில் திமுக மாவட்ட செயலாளர் அமைச்சர் மூர்த்தி அவர்கள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவராக பொறுப்பேற்க உள்ளார்கள் என்பதை சோழவந்தான் திமுக கட்சி உடன்பிறப்புகள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டுள்ளனர். எது எப்படியோ பல கோடிகள் செலவு செய்து பேரூராட்சி தலைவர் பதவிக்காக மட்டுமே இல்லாமல் பொதுமக்களுக்கு தேவையான சாலை வசதி , தெருக்கள் மற்றும் சாலைகளில் உள்ள மின்கம்பங்களில் மின்விளக்குகள்,கழிவுநீர் கால்வாய்கள் வசதி , கழிப்பறை வசதி , குடிநீர் வசதி, சமூக விரோதிகளின் கூடாரமாக இருக்கும் பேருந்து நிலையத்தின் அவலநிலையை மீட்க வேண்டும் இது போன்றஅடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால் மட்டுமே இவர்கள் வைக்கும் பதவிக்கும் கட்சிக்கும் முதல்வர் வேண்டிக் கொண்டதற்கு அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்!