மாவட்டச் செய்திகள்

பராமரிப்பின்றி கிடக்கும் பழமை வாய்ந்த அய்யர்மலை கோவிலின் அவலம்! செயல் இல்லாத செயல் அலுவலர்! பக்தர்கள் நலன் கருதி நடவடிக்கை எடுக்குமா இந்து சமய அறநிலையத்துறை !

தேவாரத் திருத்தலங்களில் 64-வது தலமாகவும், காவிரி தென்கரையில் முதல் தலமாகவும் விளங்குவது, கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை சுரும்பார்குழலி சமேத ரத்தின கிரீஸ்வரர் திருக்கோவில். சோழநாட்டின் காவிரி கரையில், 191 சிவ தலங்கள் இருக்கின்றன. அவற்றுள் காவிரி ஆற்றின் வட பகுதியில் 63 சிவ தலங்களும், தென்பகுதியில் 128 சிவ தலங்களும் உள்ளன. இதில் பாடப்பட்ட தேவாரத் திருத்தலங்களில் 64-வது தலமாகவும், காவிரி தென்கரையில் முதல் தலமாகவும் விளங்குவது, குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை சுரும்பார்குழலி சமேத ரெத்தினகிரீஸ்வரர் திருக்கோவில். இந்த ஊரும், சிவாயமலை, ரத்தினகிரி, ரத்தினாசலம், மணிகிரி, ரத்தின வெற்பு, சிவதை, மாணிக்க மலை, வாட்போக்கி மலை, பஞ்சாட்சர மலை உள்ளிட்ட பெயர்களில் வழங்கப்படுகின்றன. சுமார் 4 கிலோமீட்டர் சுற்றளவு கொண்டதும், 1,178 அடி உயரமும் கொண்டதுமான மலையின் மீது ரெத்தின கிரீஸ்வரர் கோவில் உள்ளது. மலை உச்சிக்கு சென்று சுவாமியை வழிபட 1017 படிகள் அமைக்கப்பட்டுள்ளது. பொன்னிடும் பாறையில் இருந்து 103 படிகள் மேல்நோக்கி ஏறினால், பதினெட்டு படிகள் வரும். இந்த பதினெட்டு படிகளும் சிறப்பு வாய்ந்தவை. திருவண்ணாமலையை போல அய்யர் மலையும் கிரி வலத்திற்கு சிறப்பானதாகும். ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் பல்லாயிரக் கணக்கானோர் இம்மலையை சுற்றி கிரிவலம் வருகின்றனர். கரூர் மாவட்டம் குளித்தலையில் இருந்து மணப்பாறை செல்லும் சாலையில், குளித்தலையில் இருந்து தெற்கே 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த அய்யர் மலை கோவிலில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளதால் அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்தப் பணிகளை கோவில் நிர்வாக செயல் அலுவலர் மேற்பார்வையில் நடப்பதாகவும் ஆனால் கும்பாபிஷேக திருப்பணிகள் பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதாகவும் பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதுமட்டுமில்லாமல்

தற்போது அய்யர் மலை கோவில் மலை மேல் மேல் அமைந்துள்ள தண்ணீர் தொட்டியில் இருந்து வரும் குழாய்கள் சேதம் அடைந்து இருப்பதால் படிக்கட்டுகள் வழியாக தண்ணீர் வீணாக செல்கின்றது . இதனால் பக்தர்கள் நடந்து செல்லும் படிக்கட்டுகளில் பாசம் பிடித்து இருப்பதால் படிக்கட்டு வழியே நடந்து செல்லும் குழந்தைகளுடன் செல்லும் பக்தர்கள் வழுக்கி விழும் அபாயம் இருப்பதாலும் இது சம்பந்தமாக கோவில் நிர்வாக செயல் அலுவலரிடம் புகார் கொடுத்தும் இதுவரை சேதம் அடைந்த குழாய்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சேதமடைந்த குழாய்களை சரி செய்வதற்கு கோவிலில் உள்ள ஊழியர்கள் நிர்வாக செயல் அலுவலரிடம் கூறினால் ஊழியர்களை நிர்வாக செயல் அலுவலர் தகாத வார்த்தைகளில் திட்டி அநாகரிகமாக நடந்து கொள்வதாகவும் குற்றச்சாட்டை வைத்துள்ளனர். அது மட்டும் மலை மீது புதிதாக கட்டப்பட்டுள்ள கழிப்பறை

பக்தர்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் இருப்பதால் குப்பைகள் நிறைந்து சுகாதாரமற்ற நிலையில் இருக்கிறது.
அய்யர் மலை மேல் சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் கீழே ரோப் காரில் வருவதற்கு சுமார் இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலையில்

பல லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு முடிந்த நிலையில் இருக்கும் கழிப்பறையை பக்தர்கள் பயன்பாட்டிற்கு கழிப்பறையை திறக்காததால் குழந்தைகள் முதல் பெண்கள் பெரியவர்கள் அனைவரும் உடல் ரீதியாக சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் அய்யர்மலை அய்யர் மலை கோவிலுக்கு செல்லும் வயதான பக்தர்கள் பெரும்பாலானோர் ரோப் காரை பயன்படுத்தி வருவதாகவும் ரோப் காரில் மலைக்குச் செல்ல சுமார் 2 மணி நேரம் ஆகின்றது என்றும் ஒரு ரோப் காரில் இரண்டு பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்றும் நான்கு ரோப் கார்கள் மட்டுமே இருப்பதால் ஒரு முறை 8 பக்தர்கள் மட்டுமே ரோப் காரில் மலை மேல் செல்ல முடியும் என்றும் ஆகவே கூடுதல் ரோப் கார்களை இயக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
.கோவில் தர்மகர்த்தா கூறியும் அதைக் காது கொடுத்து கேட்காமல் மரியாதை இல்லாமல் நடந்து கொள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அய்யர் மலை கோவில் நிர்வாக செயல் அலுவலராக தற்போது இருப்பவர் இதற்கு முன்பு கரூர் மாவட்டம் மூலனூர் வந்தியம்மன் கோவில் செயல் அலுவலராக பணியாற்றியதாகவும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தான் அய்யர்மலை கோவில் நிர்வாக செயல் அலுவலராக வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அய்யர் மலை கோவில் செயல் அலுவலராக வந்த நாள் முதல் அலுவலகத்திற்கு வந்து உட்கார்ந்து கொண்டு எந்த வேலையும் செய்வதில்லை என்றும் கடமைக்கு அலுவலகத்திற்கு வந்து செல்வதாகவும் பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது போன்ற நிர்வாக செயல் அலுவலர்கள் தொடர்ந்து இந்த கோவிலில் இருந்தால் இந்தக் கோவிலில் பக்தர்களுக்கான எந்தவித அடிப்படை வசதிகளையும் எதிர்பார்க்க முடியாது என்பது தான் நிதர்சனம். எனவே அய்யர்மலை கோவில் நிர்வாக செயல் அலுவலரின் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டின் உண்மைத் தன்மையை அரிய இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் அய்யர் மலை கோவிலுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு குற்றச்சாட்டு உண்மை எனில் கோவில் நிர்வாக செயல் அலுவலர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதேபோல் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து பக்தர்களின் கோரிக்கையாகும்!

Related Articles

Back to top button