பராமரிப்பின்றி கோவில் பசு மாடுகள் தொடர்ந்து உயிரிழக்கும் அபாயம்!? புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ பிரகதாம்பாள் ஆலய நிர்வாக செயலர் மீது
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா!?
பராமரிப்பின்றி கோவில் பசு மாடுகள் தொடர்ந்து உயிரிழக்கும் அபாயம்!?
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா!?
கோவில் பசு மாட்டை சரியாக பராமரிக்காததால் நோய்வாய்ப்பட்டு உயிரிழக்கும் அபாயம்! திருக்கோகர்ணம் ஸ்ரீ பிரகதாம்பாள் ஆலயத்தின் நிர்வாக செயலர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா!?
குட்டிக்கு பால் கொடுக்க முடியாமல் தவித்து வரும் வாயில்லாத ஜீவனுக்கு உரிய சிகிச்சை வழங்க இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா!?
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ பிரகதாம்பாள் ஆலயத்தில் அருகிலேயே அறநிலையதுறையின் அலுவலகம் உள்ளது. இருப்பினும் இந்த ஆலயத்தில் உள்ள கௌசலையில் உள்ள மாடுகளை ஊழியர்கள் சரியாக பராமரிக்காமல் திவணம் தண்ணீர் மாடுகளுக்கு சரியாக கொடுக்காமல் அலட்சியம்மாக கோவில் நிர்வாகம் இருந்ததால் பசியால் வாடிய பசுமாடு ஒன்று சென்ற மாதம் உயிரிழந்து விட்டதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தீவனங்கள் வைக்காமல் தீவனங்கள் வாங்குவதாக அற நிலையத்துறை அதிகாரிகள் மாட்டுத் திவணத்திலும் ஊழல் செய்து பொய் கணக்கு எழுதி முறைகேடு செய்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் .
இதனால் சென்ற மாதம் ஒரு பசு சரியாக பராமரிக்காமல் தீவனம் இல்லாமல் பசியால் உயிரிழந்து விட்டது இதுபோன்று பல பசுமாடுகள் வெளியில் யாருக்கும் தெரியாமல்இறந்திருக்க கூடுமா என்று சந்தேகம் எழுகின்றது எத்தனை மாடுகள் உள்ளன என்ற கணக்கு யாரிடம் இருக்கின்றது என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர் .
மேலும் இந்த கோவிலுக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டும் என்றும் தொன்று தொட்டு காலம் காலமாக பசு மாடுகளை வைத்து இந்த ஆலயத்தில் நடை வாசல் திறக்கப்படுவதாலும் இந்த ஆலயத்தில் புராண கதைகளில் ஒன்றான கோமாதா தனது காதுகளால் சிவபெருமானுக்கு தண்ணீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்து வழிபட்டதாகவும் புராணக் கதைகள் கூறப்படுவதால் இந்த ஆலயத்தில் திருகோகர்னேஸ்வரர் என்று பெயர் சூட்டப்பட்டு பசு மாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருவது வழக்கம் ஆலயத்தில் பணி செய்யும் ஊழியர்கள் இந்த பசு மாடுகள் பராமரிக்கும் கவுசாலையை சரியாக கண்டுகொள்ளாமல் தூய்மை படுத்தாமல் மாடுகளுக்கு நேரம் நேரத்திற்கு உணவு தண்ணீர் வைத்து தீவனங்கள் வைத்து சரியாக பராமரிக்காமல் திவனம் வாங்குகிறேன் என்று கணக்கு எழுதி பணத்தை இவர்கள் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு விட்டு ஊழல் முறைகேடு செய்வதால் மாடுகள் பசியால் இறந்து வருவதாகவும் தற்போது ஒரு மாடு காலில் அடிபட்டு எழுந்து நின்று தான் ஈன்ற கன்று குட்டிக்கு பால் கொடுக்க முடியாமல் 15 நாட்களுக்கும் மேலாக கிடப்பில் கிடப்பதால் மாட்டின் கால்களில் அடிபட்ட காயத்தில் எறும்புகள் மொய்த்தவாரு காணப்படுவதாலும் மாட்டின் பிறப்பு உறுப்புகள் முழுவதும் எறும்புகள் கடித்தவாறு இருப்பதை நேரில் பார்த்த மாட்டை காணிக்கை கொடுத்த பக்தர் ஒருவர் கண்ணீருடன் அருகில் உள்ள அறநிலையத்துறை அதிகாரிகள் இடம் கூறிய போது அலட்சிய பதில் கூறியதால் மனவேதனையில் நமது இறுதி தீர்ப்பு பத்திரிகைக்கு பேட்டி அளித்தனர் அறநிலை துறை செயல் அலுவலர் ஆலயத்தின் மேற்பார்வையாளர் ஆகியர் மீது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு அடிபட்டு கால் உடைந்து எழுந்து நின்று தனது ஈன்ற கன்று குட்டிக்கு பால் கொடுக்க முடியாமல் தவித்து வரும் வாயில்லாத ஜீவனுக்கு உரிய கால்நடை சிகிச்சை வழங்கும்படி அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
பசு மாடுகள் தொடர்ந்து உயிரிழந்து வருவதால் வருவதால் அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோய் வாய் பட வாய்ப்பு ஏற்படும் என்று ஐதீக கருத்தும் தெரிவிக்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் இந்து சமய அறநிலையத் துறையின் நடவடிக்கையை…
புதுக்கோட்டை நிருபர் பழனியப்பன்.