பல லட்சம் பெற்றுக் கொண்டு தனியாருக்கு குத்தகை விட்டதாக “பெண்கள் குடும்பத்துடன் வைகை ஆற்றில் இறங்கி தற்கொலை செய்யப் போவதாக அதிர்ச்சி வீடியோ!” on YouTube மௌனம் காக்கும் தேனி மாவட்ட ஆட்சியர்!

ஆண்டிபட்டி–வைகை அணையில் மீன் பிடிப்பதற்கான குத்தகையை தனியாருக்கு விடப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி 200க்கும் ஏற்பட்ட மீனவர்கள் வைகை அணை நீர்த்தேக்கத்தில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறியது.40 வருடமாக 18 கிராமத்தை சேர்த்தவர்கள் வைகை அணையில் மீன் பிடித்து வாழ்க்கை நடத்தி வருவதாகவும். இதனால் 5000 வியாபாரிகள் நம்பி இருப்பதாகவும் தற்போது திடீரென்று 126 யூனிட் சேர்ந்த மீனவ சங்கத்தின் தலைவரை அழைத்துச் சென்று தனியாருக்கு குத்தகை விடுவதற்கு கையெழுத்து வாங்கி உள்ளதாகவும் அவருக்கு தற்போது காதும் கேட்காத கண் பார்வையும் சரியாக இல்லை என்றும் அவரை ஏதோ ஒரு பேப்பரை காண்பித்து கையெழுத்து வாங்கிவிட்டு தனியாருக்கு குத்தகைக்கு பெற்றுள்ளதாகவும் எங்கள் உரிமையை எங்களுக்கு கொடுக்காவிட்டால் நாங்கள் குடும்பத்துடன் ஆற்றில் இறங்கி தற்கொலை செய்வதை விட வேற எந்த வழியும் எங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் யாராவது வைகை அணையில் மீன் பிடித்தால் அவர்களை பிடித்து மீனை திருடி சென்றதாக கொலை செய்யக்கூட தயங்க மாட்டார்கள் என்றும் எங்கள் கணவர்களை இழந்து நாங்கள் நடுரோட்டில் இருக்க விரும்பவில்லை என்றும் ஆகவே எங்களை மீன்பிடிக்க விடும் வரை எங்களிடம் உள்ள ஆதார் கார்டு ரேஷன் கார்டு அனைத்தையும் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்து விடுகிறோம்.வைகை அணை நீர்த்தேக்கத்தில் பல ஆண்டுகளாக மீன்வளத்துறை மூலம் மீன் குஞ்சுகள் விடப்பட்டு அவை வளர்ந்த பின் பிடித்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. வைகை அணை மீனவர் கூட்டுறவு சங்கத்தில் பதிவு ஏற்ற மீனவர்கள் மீன்களை பிடித்து மீன்வளத்துறையில் ஒப்படைத்து சரிபாதி மீன்களை சம்பளமாக பெற்று வந்ததாகவும்
சம்பளமாக பெறப்பட்ட மீன்களை விற்பனை செய்வதன் மூலம் மீனவர்களுக்கு கணிசமான வருவாய் கிடைத்ததை வைத்து குடும்பங்களை காப்பாற்றி வந்ததாகவும் இந்நிலையில் வைகை அணையில் மீன் பிடித்தலுக்கான குத்தகை தனியாருக்கு விடப்பட்டது. தனியாருக்கு விடப்பட்ட குத்தகையால் மீன்பிடி தொழிலை நம்பி இருந்த வைகை அணை சுற்றியுள்ள பல கிராமங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் பாதித்துள்ளது.மீன்பிடி தொழிலில் மீன்வளத்துறை மூலம் பின்பற்றிய நடைமுறையில் சம்பளம் கிடைக்க, பிடிபடும் மீன்களில் பாதி அளவு தரும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.பெரியகுளம் ஆர்.டி.ஓ., சிந்து, ஆண்டிபட்டி டி.எஸ்.பி.,ராமலிங்கம், மீன்வளத்துறை உதவி இயக்குனர் பஞ்சராஜா, தமிழ் தேசிய பா.பி., கட்சி நிர்வாகிகள், போலீசார், வருவாய்த் துறையினர் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித சமரசம் முயற்சி எடுத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். எது எப்படியோ 300 குடும்பங்களைச் சேர்ந்த மீனவர்கள் 40 வருடங்களாக தங்கள் வாழ்வாதாரத்திற்காக இந்த தொழிலை செய்து வந்துள்ளனர். தற்போது திடீரென்று தேனி மாவட்ட நிர்வாகம் தனியாருக்கு குத்தகை விட்டதில் ஏதோ முறைகேடு நடந்துள்ளதாகவும் இது யாரோ ஒரு நபரின் செயலாபத்திற்காக தேனி மாவட்ட நிர்வாகம் சாதகமாக செயல்பட்டு வந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எந்த ஒரு குத்தகை விடப்பட்டாலும் அதற்கு பெரிய தொகை சன்மானமாக அந்தத் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வருவது தான் எழுதப்படாத சத்தமாக இருந்து வருகிறது. அதேபோல் தான் தனியாருக்கு குத்தகை விடப்பட்டதற்கு ஒரு பெரிய தொகை சன்மானமாக வழங்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.