பழனி ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு சாலையில் ஆபத்தான முறையில் குழி தோண்டி குடிநீர் தொட்டி கட்டும் பழனி நகராட்சி நிர்வாகத்தின் அவல நிலையின் அதிர்ச்சி வீடியோ! அச்சத்தில் நோயாளிகள்!திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!?
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சி 25 வது வார்டில் ஆரம்ப சுகாதார நிலையம். (அர்பன் ஜிஹெச்) . அமைந்துள்ளது.
இந்த ஆரம்ப சுகாதார நிலையம் பழனி நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது.
நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் செயல்படுகிறது. இங்கு காய்ச்சல், டெங்கு, மலேரியா உள்ளிட்ட அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளும் செய்யப்பட்டு வருகிறது. மகப்பேறு திட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு இலவசமாக பிரசவமும் பார்க்கப்படுகிறது. தனியார் ஆஸ்பத்திரிக்கு நிகராக சுத்தமான பராமரிப்பு, நவீன சிகிச்சைகள், மகப்பேறு சிகிச்சைக்கான உள்கட்டமைப்பு வசதிகள் போன்ற காரணங்களால் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறுவது அதிகரித்துள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நாள்தோறும் பழனி சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து தினந்தோறும் 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். அப்படி சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு குடிதண்ணீர் தேவைக்காக சுகாதார நிலையத்திற்கு முன்பு சாலையில் ஆபத்தான முறையில் சுமார் 10 அடி ஆழம் 20 அடி நீளத்துக்கு பெரிய தொட்டி கட்டப்பட்டு வருகிறது. சுகாதார நிலையத்திற்கு என்று நகராட்சி நிர்வாகம் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது . ஆனால் சுகாதார நிலையம் முன்பு சாலையை ஆக்கிரமிப்பு செய்து குழி தோண்டி ஆபத்தான முறையில் குடிநீர் தொட்டி கட்டப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் எதிரில் நகராட்சி இடத்தினை ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வருகின்றனர்( இந்த இடம் ஆரம்ப சுகாதார வளாக கட்டம் உள்ள இடம்)
ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகளின் குடிநீர் தேவைக்கு மேல்நிலை சின்டெக்ஸ் டேங்க் அமைத்து அதிலிருந்து குடிநீரை விநியோகம் செய்யலாம். அதை விட்டுவிட்டு தனி நபர்கள் வீட்டின் முன்பு குடிநீர் தொட்டி கட்டுவது போல்
தேவையில்லாமல் நகராட்சி நிர்வாகம் சாலையின் குறுக்கே குழி தோண்டி குடிநீர் தண்ணீர் தொட்டி கட்டி வருவது கிடையாது எந்த ஒரு நகராட்சியிலும் மாநகராட்சியிலும் இப்படி ஒரு அதிகாரி(MHO) செயல்படுவது கிடையாது.
இது சம்பந்தமாக பழனி நகராட்சி நகர்மன்ற உறுப்பினர்களிடம் கேட்டபோது பழனி நகராட்சிக்கு மட்டும் இவர் ஒரு விதிவிலக்கு. இவர் பொது சுகாதாரத் துறைக்கு தான் அதிகாரி நகராட்சியில் இவருடைய பனி காலம் முடிந்துவிட்டது .ஆனால் தற்பொழுது பழனி நகராட்சி தக்கார் போல் செயல்படுகிறார். ஆபத்தான முறையில் கட்டப்பட்டு வரும் குடிநீர் தொட்டி சாலையின் அருகே கட்டி இருப்பதால் மழைக்காலங்களில் கனரக வாகனங்கள் இந்த குடிநீர் தொட்டி மேல் சென்றால் மிகப்பெரிய விபத்து ஏற்படும் என்றும் ஆகவே உடனடியாக இந்த குடிநீர் தொட்டியை மூடி குடிநீர் மேல்நிலைத் சின்டெக்ஸ் டேங்க் தொட்டி அமைக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் நலன் கருதி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!