பழனி காவல் உட்கோட்ட தனிப்படை காவல் துறையினர் அதிரடி சோதனை! தடை செய்யப்பட்ட15.5 கிலோ குட்கா மற்றும் லாட்டரி சீட்டுகள் பறிமுதல் 6 பேர் சிறையில் அடைப்பு!

திண்டுக்கல் மாவட்டம் பழனி காவல் உட்கோட்டம் கீரனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் தடை

செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக காவல்துறைக்கு வந்த ரகசிய தகவலின் பெயரில் பழனி காவல் துணை கண்காணிப்பாளர் தனஜெயன் அவர்களின் உத்தரவின் பெயரில் கீரனூர் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார் தலைமையில் சார்பு ஆய்வாளர் நவீன்குமார் சிறப்பு தனிப்படை காவல்துறையினர் இரண்டு நாட்களாக அதிரடி சோதனை மேற்கொண்டதில் தடை செய்யப்பட்ட பல லட்சம் மதிப்புள்ள 15.5கிலோ குட்கா பறிமுதல் செய்து விற்பனை செய்த 5 நபர் மீது கீரனூர் காவல்துறை வழக்கு பதிவு கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் அதேபோல்.
பழனி காவல் உட்கோட்ட பழனி தாலுகா தனிப் பிரிவுக்கு வந்த தகவலின் அடிப்படையில் பழனி தாலுகா சார்பு ஆய்வாளர் சந்திரன் தலைமையில் சிறப்பு தனிப்படை மேற்கொண்ட சோதனையில் பெரியகலைய முத்தூரை சேர்ந்த காதர் முகமது மகன் சாகுல் ஹமீது இடம் அரசால் தடை செய்யப்பட்ட ரூபாய் பத்தாயிரம் மதிப்பு மூன்று நம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு. லாட்டரி விற்றவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.