பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்துக் கொள்ள பயிற்சி எடுக்கும் மாணவருக்கு ஊக்கத் தொகை!
த/பெ.கிருஷ்ணராஜ், இவர் சிறுவயதில் இருந்து தடகள விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டு பள்ளி, கல்லூரிகளில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு காரைக்குடியில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் தடகள போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் பங்குபெற்று முதலிடம் பெற்றார். 2022-ல்; மாநில அளவில் நடக்கவிருக்கும் பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவரை ஊக்குவிக்கும் விதமாகவும், பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு பயிற்சி உபகரணங்கள் வாங்குவதற்கு உதவித்தொகையாக மாவட்ட ஆட்சியர் விருப்புரிமை நிதியிலிருந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ரூ.5000/- நிதியுதவி வழங்கினார். இவருக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகை கிடைக்க பரிந்துரை செய்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, திருவில்லிபுத்தூரை சேர்ந்த மாற்று
த்திறனாளி சுதர்ஷன்,
த/பெ.சந்திரன், அவரின் உடல்நலக் குறைவு காரணமாக, அவரின் மருத்துவ சிகிச்சைக்காக மாவட்ட ஆட்சியர் விருப்புரிமை நிதியிலிருந்து, ரூ.5000/- நிதியுதவியினை மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி வழங்கினார்
.
இந்நிகழ்வின் போது, அருப்புக்கோட்டை வட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தன
ர்.