பிச்சை எடுக்கும் நோயாளியிடம் கட்டாயப் படுத்தி 100ரூபாய் புடுங்கி அனுப்பிய பொள்ளாச்சி அரசு மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சி வீடியோ!நடவடிக்கை எடுப்பாரா மருத்துவமனை முதல்வர்!??on YouTube

பொள்ளாச்சி அரசு மருத்துவமனை ஊழியர்கள் அங்கு வரும் புற நோயாளிகளிடம் கட்டயப் படுத்தி 100 ரூபாய் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது சம்மந்தமாக மருத்துவமனைக்கு சென்று வந்த பிச்சை எடுத்து வரும் குருசாமி என்ற முதியவரிடம் கேட்டபோது அவர் கூறியது மிகவும் வேதனையாகவும் அதிர்ச்சியாகவும் இருத்தது. பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் கவுதம் மற்றும் பரமசிவம் ஊழியர்கள் இரண்டு பேரும் அங்கு வரும் நோயாளிகளுக்கு கட்டுப் போட வேண்டும் என்றால் குறைந்தது 100 ரூபாய் கொடுத்தால்தான் கட்டுப்படுவார்கள் இல்லை என்றால் திருப்பி அனுப்பி விடுவார்களாம்.பிச்சை எடுத்து வரும் குருசாமி என்ற முதியவரிடம் 100 ரூபாய் எடுத்து மேஜை மேல் வைக்கச் சொன்னதாகவும் நானே பிச்சை எடுத்து சாப்பிட்டு வருகிறேன் என்னிடம் 100 ரூபாய் இல்லை என்று கூறி உள்ளார்.ஆனால் பணம் கொடுத்தால் தான் காலில் கட்டுப் போடுவோம் என்று சொன்னவுடன் செய்வதறியாது அவர் சாபாட்டிருக்கு வைத்திருந்த 50 ரூபாய் பணத்தை கொடுத்தவுடன் காலில் கட்டுப் போட்டார்கள் என்ற அதிர்ச்சித் தகவலை கூறினார் பிச்சை எடுக்கும் இந்த முதியவர்.
எது எப்படியோ ஏழைகளுக்காக அரசு மருத்துவமனை இருப்பதை மறந்து மருத்துவமனையில் வேலை செய்யும் ஊழியர்கள் இதுபோன்று ஏழை எளியவர்கள் அரசு மருத்துவமனைக்கு வரும் பொழுது அவர்களிடம் முடிந்தளவு பணத்தை கறந்து விடுகிறார்கள் என்பதுதான் நிதர்சனம். இதுபோன்ற அரசுக்கு முரணான சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டு வரும் அரசு பொது மருத்துவமனையில் பணியில் இருக்கும் ஊழியர்கள் மீது மருத்துவமனை முதல்வர் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் மற்றும் செயலாளர் ராதாகிருஷ்ணன் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் சமூக ஆர்வலர் கோரிக்கையாகும்.